சமமானகல்வி ,சுத்தமான கழிவறை,நிழலில் நிற்கப் பேருந்துநிலையம்,வறுமை ஒழிப்பு,பெண்களுக்கு பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பு,இன்னும் ஏகப்பட்ட கோடானு கோடி கோரிக்கைகளை தலையில் சுமந்துகொண்டு உலகை வலம் வருகிறது இந்தியா.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ரப்பரால் செய்யப் பட்டதால், எப்படிவேனாலும் வளைத்துக் கொள்ளலாம் என்று கேள்விதான் எழுகிறது, ஏன் என்றால் அரசியல் தலைவர்களுக்கும், அகிம்சை ஊழல் பேர்வளிகளுக்கும் இந்த சட்டம் ரொம்பத்தான் வளைந்து கொடுக்கின்றது, சட்டத்தின் தவறா ?இல்லை சட்டத்தைக் காக்கின்ற அரசின் தவறா ?
பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், கிடைக்க மறுக்கப் படும்போது அரசிடம் போராடிப் பெறுவதற்கு சட்டம் வழி செய்கிறது,ஆனால் போராட்டம் என்று தெருவிற்கு வந்தால் அதே சட்டம் நம்மைக் கைது பண்ணுகிறது !!!
சரி விசயத்திற்கு வருவோம், மேலே உள்ளப் புகைப் படத்திற்கு வசனம் தேவை இல்லைன்னு நினைக்கிறேன், ஏன் என்றால் சில புகைப் படத்திற்கு வசனம் தேவைப் படாது பார்த்தாலே புரிந்து விடும்.
அரசும், அரசை நிர்ணயிக்கும் மக்கள் பேரரசும் சிந்தித்து செயல்படனும், மக்களாகிய நாம் ஓட்டுப் போடுவதற்கு முன்பே எத்தகைய அரசை தேர்வு செய்யணும் என்று, தம் சுய புத்தியால் முடிவெடுக்கணும் அப்படி இல்லையென்றால் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக அரசிடம் போராடிப் பெறுவதற்கு வழியை உண்டுப் பண்ணிவிடும்.
பஞ்சத்தில் பரிதவிக்கும் மேலே உள்ள மனிதர் உணவருந்தி எத்தனை நாள் ஆகி விட்டதோ ? வறுமையின் நிறம் சிகப்பு என்று எல்லோரும் சினிமாவைப் பார்த்துதான் சொன்னிர்கள், பாவம் இந்த மனிதரைப் பார்த்து வறுமையின் நிறம் சிகப்பு என்று நான் சொல்லுகிறேன்.
நடமாடும் ஜவுளிக்கடையாக இருக்கும் இந்த அம்மணியைப் போல பல கோடி அம்மணிகள் இந்தியாவை வலம் வருகிறார்கள் அவர்களின் முத்து மாலையிலிருந்து ஒரு முத்தை தானமாக இந்த ஏழை மக்களுக்கு வழங்க முன்வந்தால் வறுமை ஒழிந்து விடும்,அதற்காக நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை நான் ஒன்னும் குறை சொல்லமாட்டேன் அது உங்களின் சொத்து அதை அணிவதும் அணியாமல் இருப்பதும் உங்களின் விருப்பம்.
ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றுங்கள் !
அவர்கள் இருளில் மூழ்கி இருப்பது
கல்லறையில் இருப்பது போல தெரிகிறது !
கல்லறையில் இருப்பது போல தெரிகிறது !
நல்ல கருத்து ஐயூப்...
ReplyDeleteமேலே உள்ள 2 போட்டோக்களை பாஅக்கும் போதே மனசுக்கு கஷ்ட்டமா இருந்துச்சு.
நல்ல வசதி படைத்தவர்கள் உண்டியலில் கோடிகோடியாய் கொட்டும் பணத்தை இப்படியுள்ளவர்களுக்கு சிறுபகுதியை தானம் செய்தாலே போதும். எங்கே செய்யப்போகிறார்கள் இந்த முட்டாள் மடையன்கள்!
ஆமாம் நீங்கள் சொல்லுவதும் சரிதான், கோவில்களிலும் தர்காக்களிலும் கொட்டும் பணத்தை கடவுள் பேரால் இது போன்ற ஏழைகளுக்கு உதவி செய்தாலும் புண்ணியம் கிடைக்கும்.
ReplyDeleteவருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி ஆமினா
அருமையான கருத்துக்களை அழகாக கூறி இருக்கின்றீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அக்காள்.
ReplyDeleteவேண்டாம் வரதட்சணை
ReplyDeleteவேண்டவே வேண்டாம் வரதட்ச்சனை.
ReplyDeleteThanks
நல்ல கருத்துகள் அய்யூப் அண்ணே.. வரதட்சணை எவ்வளவு மோசமா இருக்கிறது. என்ன செய்ய எல்லாம் காலத்தின் கோலம்.
ReplyDelete///ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றுங்கள் !
ReplyDeleteஅவர்கள் இருளில் மூழ்கி இருப்பது
கல்லறையில் இருப்பது போல தெரிகிறது !///
அருமையான கருத்துகள்.
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மின்மினி.
ReplyDeleteஅவரைக்காய் கூட்டு வைத்து, ஒரு மாதமாகிவிட்டது ஏன் ?
என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்திற்கும்,வருகைக்கும்,நன்றி ஸ்டார் அவர்களே...!
ReplyDeleteநல்ல அருமையான கருத்துக்கள்+ போட்டோக்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ,
ReplyDeleteகருத்தை போட்டோவுடன் அருமையாக
விளக்கி உள்ளீர்கள்.
வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி விஜி அக்காள்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆயிஷா,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ReplyDelete//சுயமா யோசி ஞானி ஆவாய் ! நாட்டை நேசி விஞ்ஞானி ஆவாய் !//
ReplyDelete//யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்பது எனது வழி,அதுக்கு மேலே சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுசன்தான்.//
நல்லா இருக்கு.. பின்னுறீங்க..
நல்ல பதிவு நண்பா..தொடருங்கள்...
ReplyDelete//ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றுங்கள் !
ReplyDeleteஅவர்கள் இருளில் மூழ்கி இருப்பது
கல்லறையில் இருப்பது போல தெரிகிறது //!நெத்தியடி வரிகள். NO CHANCE.
இந்தப் பதிவு நிறைய பேரை யோசிக்க வைக்கும் என நம்புவோம்..
எல்லோரும் எல்லாம் பெற விரும்பும் அந்நியன், உண்மையில் அந்நியன் அல்ல, எம் இனம்...
வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி ஹரிஸ்,உங்கள் புகைப்படத்தைப் பார்க்கும்போதே, உங்களுக்குள் ஒரு வேகம் தெரிகிறது,நிச்சயதும் அது அசத்தியத்திற்கு எதிரானக் கோபம் மாதுரி தெரியுது.
ReplyDeleteவாருங்கள், பாரத நாட்டின் புது பாரதி அவர்களே,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ReplyDelete//உங்கள் புகைப்படத்தைப் பார்க்கும்போதே, உங்களுக்குள் ஒரு வேகம் தெரிகிறது,நிச்சயதும் அது அசத்தியத்திற்கு எதிரானக் கோபம் மாதுரி தெரியுது.//
ReplyDeleteஎன்னவச்சு கமெடி கீமெடி பண்ணலயே...