Sunday, November 14, 2010

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல யாரும் இல்லையா ?

கவலைப் படாதிர்கள் செல்வங்களே கூடிய விரைவில் உங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும்.இந்திய திரு நாட்டை எல்லோரும் ஏழைகள் நாடு என்றுதான் சொல்லுகிறார்கள் உம்மைப் பார்த்தும் உம்மைப் போன்ற மற்ற ஏழைக் குழந்தைகளை பார்த்தும்.
கட்டாயக் கல்வி சட்டமாகியும் சட்டை செய்யாமல் நீங்கள் உழைக்கிரிர்கள் காரணம் வறுமை, உங்களின் உழைப்பினால் உங்கள் அப்பாவை இழந்த நீங்கள் நோய் வாய் பட்டிருக்கும் உங்கள் அம்மாவுக்காக உழைக்கிரிர்கள் படிப்பையும் மறந்து.

கட்டாயக் கல்வியை தந்த அரசோ உமதின் உள் நிலையை ஆராயாமல் அவசரமாக சட்டம் பிறப்பித்து விட்டதால் உம்மை யாருமே வேலைக்கு சேர்க்க வில்லை என்ற  ஆதங்கத்தில், நீங்கள் பார்க்கிறது தெரிகிறது ஆனால் அரசுக்குத் தெரியவில்லையே !

கட்டாயக் கல்வியை சட்டமாக்கிய அரசு அந்த பிஞ்சுகளின் குடும்ப சூழ்நிலையை ஆராயாமல் இருப்பது துரதிருஷ்ட்டமே, அவர்களின் எதிர் காலத்தைக் கனக்கில்கொண்டு
கொண்டு வரப்பட்ட கட்டாயக் கல்வி அவர்களின் நிகழ் காலத்தின் வறுமையை ஒழிக்க மறந்தது வியப்பளிக்கிறது.

எந்த ஒரு தாயும் அல்லது தந்தையும் தம் மக்கள் படிக்காமல் வேலைக்குப் போவதை விரும்ப மாட்டார்கள் அது ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக  இருந்தாலும் சரி,வறுமையின் காரணமாகவே அக்குழந்தைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்,இன்று அவர்கள் வேலைக்கும் போகாமல், படிக்கவும் மனசு இல்லாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வெகு சீக்கிரம் மன நோயால் பாதிக்கப் படுவதற்கு வழிகாட்டுதலாக இருக்கு இந்த சட்டம்.

சட்டத்தை இயற்றிய மாண்புமிகுக்கள் அவர்களின் குடும்ப சூழ் நிலையையும் ஆராய்ந்து வருமானத்திற்கு ஒரு வழியை திறந்து வைத்து விட்டு இந்த இந்திய திருச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்பி இருக்கலாமே ?

கவலைப் படாதிர்கள் என்னருமைச் செல்வங்களே உங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும் எப்போது என்றால் ஊழலில் மூழ்கி கிடக்கும் பணக்கார வர்க்கத்தரிடம் பணத்தை சுரண்டி உங்கள் வாழ்க்கைக்கு ஒளி காட்டிட உத்தம அரசியல் தலைவன் விரைவில் வருவான்.

நாம் காத்திருப்போம்.

உங்களுக்கும் மற்றும் எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

அந்நியன் : 

4 comments:

  1. அரபா நோன்பு சிறக்க வாழ்த்துக்கள்.
    பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. தேங்க் யூ சிஸ்ட்டர் சேம் டூ யூ

    ReplyDelete