Friday, December 10, 2010

காந்தியும் ஒபாமாவும்



இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு மிசிசிபி விமானநிலையத்தில் நேர்ந்த அவமரியாதை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர் கடந்த 4ஆம் தேதி மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் பார்லிடிமோர் செல்வதற்காக, ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார்.

அப்போது அங்குள்ள அதிகாரிகள் மீராசங்கரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். தான் ஒரு தூதர் என்று மீராசங்கர் மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் எடுத்துக்கூறியும், சமாதானம் அடையாத அதிகாரிகள், சாதாரண பயணிகளை நடத்துவதைப்போல் சோதனையிட்டனர்.
உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது நாளிதழ்களில் காணப் படும் செய்தி !!!

இந்தியாவால் புகார்தான் கொடுக்க முடியும், அமெரிக்கா செய்தது தவறு என்று கண்டனம் தெரிவிக்க இயலாது காரணம் அமெரிக்காவுக்கு காட்டும் விசுவாசமும் பயமும்.
இந்திய ஜனாதிபதியையே டவுசரை அவிழ்க்க சொன்ன அமெரிக்க அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரியை சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்தது கண்டிக்க தக்கது.இந்தியர்களை அவர்கள் இழிவுப் படுத்தாவிட்டால் தூக்கம் வராது அது அதிகாரியானாலும்சரி அரசியல் தலைவர்கலானாலும்சரி எல்லாம் ஒன்றுதான் அவர்களுக்கு.

ஒரு சாதாரண அமெரிக்க கம்பெனியின் குளிர்பான தலைவர் இந்தியாவிற்கு வருகை தந்தால், பாதுகாப்பு சோதனையை தளர்த்தி, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் இந்தியா,நமது தேச தலைவர்களும்,ஜனாதிபதிகளும்,அரசு அதிகாரிகளும் அமெரிக்கர்களால் அவமானப் படுவது ஏன் ?

நாசாவை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இந்திய விஞ்ஞானிகள் கொஞ்சம் அமெரிக்காவுக்கு புத்திமதி சொல்லலாமே.

ஒருநாள் இந்த நிலமைக்கெல்லாம் மாற்றம் உண்டு,அந்த மாற்றங்களை செய்வதற்கு மக்கள் பலம் இருக்கு,அது பொங்கி கத்ரீனவா மாறுவதற்குள்,அமெரிக்கா மற்ற நாடுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளனும், இல்லையேல் அது அழிவுக்கு அவர்களே விதைத்த வித்தாகும்.

11 comments:

  1. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

    நன்றி!

    ReplyDelete
  2. அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி அண்ணே.

    ReplyDelete
  3. //ஒரு சாதாரண அமெரிக்க கம்பெனியின் குளிர்பான தலைவர் இந்தியாவிற்கு வருகை தந்தால், பாதுகாப்பு சோதனையை தளர்த்தி, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் இந்தியா,நமது தேச தலைவர்களும்,ஜனாதிபதிகளும்,அரசு அதிகாரிகளும் அமெரிக்கர்களால் அவமானப் படுவது ஏன் ?
    ///

    உண்மைதாங்க ., உங்க கோபமும் நியாயமானது .! நமக்கு மரியாதை தெரியுது , ஆனா அவுங்களுக்கு தெரியலை போல ..! அதை விட அங்குள்ள அதிகாரிகள் அவ்வாறு இருக்கலாம் ..!

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் இருந்து வந்தேன் ..!!

    ReplyDelete
  5. ,//அமெரிக்கா மற்ற நாடுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளனும், இல்லையேல் அது அழிவுக்கு அவர்களே விதைத்த வித்தாகும்.//

    என்ன பன்றாங்கன்னே தெரியல. ஏன் இந்தியா இப்படி பம்ம்முதுன்னு தெரியல.

    நல்ல பதிவு !!!

    ReplyDelete
  6. //கோமாளி செல்வா said...
    வலைச்சரத்தில் இருந்து வந்தேன் .//

    வருகைக்கும் உங்கள் அன்பான கருத்திற்கும் நன்றி சிவா.அண்ணன் ராமசாமிக்கு ரொம்ப நன்றி !

    ReplyDelete
  7. //ஆமினா said...
    ,//அமெரிக்கா மற்ற நாடுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளனும், இல்லையேல் அது அழிவுக்கு அவர்களே விதைத்த வித்தாகும்.//

    என்ன பன்றாங்கன்னே தெரியல. ஏன் இந்தியா இப்படி பம்ம்முதுன்னு தெரியல.//

    "கவுரவம்" அதுதான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சொத்து அதை இழந்து அன்னியவரிடம் கையேந்துவதை விட உள்நாட்டிலேயே பிச்சை எடுத்து கவுரவமா வாழ்ந்திடலாம்.
    வருகைக்கு ரொம்ப நன்றி ஆமி...

    ReplyDelete
  8. //ஒருநாள் இந்த நிலமைக்கெல்லாம் மாற்றம் உண்டு,அந்த மாற்றங்களை செய்வதற்கு மக்கள் பலம் இருக்கு,அது பொங்கி கத்ரீனவா மாறுவதற்குள்,அமெரிக்கா மற்ற நாடுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளனும், இல்லையேல் அது அழிவுக்கு அவர்களே விதைத்த வித்தாகும்// //
    நாசாவை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இந்திய // அடேங்கப்பா...இதில்தான் அந்நியன் நிக்கறார். ஹ்ம்ம்ம்...இந்தியா மட்டும்தானா ஏனைய நாட்டினரும்தான் அமெரிக்காவுக்கு பல்லிளிக்கின்றன.

    ReplyDelete
  9. //ஹ்ம்ம்ம்...இந்தியா மட்டும்தானா ஏனைய நாட்டினரும்தான் அமெரிக்காவுக்கு பல்லிளிக்கின்றன.//

    சரியாக சொன்னீர்கள் அக்காள்.கருத்திற்கு நன்றி.

    ReplyDelete