Tuesday, December 14, 2010

பத்திரிக்கையர் மீது டி.ராஜேந்தர் கடும் தாக்கு !!!




திண்டுக்கல் பூச்சாண்டி நகரில் டி.ராஜேந்தரின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் நிகழ்ச்சி நடை பெற்றது அப்போது ஒரு பிரபல தொலைக் காட்ச்சியின் நிருபர் உங்கள் கூட்டத்திற்கு மக்கள் கூட்டமே கூடுவதில்லையே ஏன்?என்று கேள்வி எழுப்பினார்.

இதைக் கேட்ட டி.ராஜேந்தர் பானையில் அரிசி பொங்குவதைப் போல் பொங்கி அந்நிருபரை தாக்க முயன்றார் அவரின் கட்சி இயக்குனர்கள் டி.ராஜேந்தரை சமாதனம் செய்து அழைத்து சென்றனர் பதிவினைப் பாருங்கள்.

இச்சம்பவம் பற்றி மக்கள் தலைவன் விஜயகாந்திடம் கருத்து கேட்டப் போது :

ம்ஹே..ம்ஹே...ம்ஹே..(சிரிப்பு)எனக்கு அப்பவே தெரியும் டி ஆர் இப்படிலாம் நடந்துக் கொள்வார் என்று அதுனாலேதான் என் மனைவி அவரிடம் கூட்டணி வைத்துக் கொள்ளாதிர்கள் என்று சொன்னார் அவர் ரொம்ப கோவக்காரர் பார்க்கவே பூச்சாண்டி மாதுரி இருக்கார் என்று.இன்று அதுபோலவே நடந்து விட்டது.

மொத்தம் தமிழ் நாட்டில் ஆயிரத்து எண்ணூற்றி என்பெத்தேழு உறுப்பினர்கள் மட்டுமே அவர் கட்ச்சிக்கு இருக்கு அதுலே அரநூற்றி எழுபத்தேழு உறுப்பினர்கள் வட நாட்டை சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்தில் கட்சி அடையாள அட்டை டி.ராஜேந்தரால் வழங்கப் பட்டபோது இலவச பஸ் பாஸ் என நினைத்து வாங்கிக் கொண்டவர்கள்தான் அவர்கள்.

ஐநூற்றி முப்பத்தேழு உறுப்பினர்கள் லாட்டரி சீட்டு வாங்குபவர்கள்,பொது இடத்தில் வைத்து கலர் கலரா கட்சி அடையாள அட்டை வழங்கப் பட்டபோது காசு கொடுத்து வாங்கிய அப்பாவிகள்.
காசை பெற்றுக் கொண்ட டி.ஆரோ,மக்கள் கட்ச்சிக்கு நிதி தருகிறார்கள் என்று எண்ணி பையில் போட்டுக் கொண்டார்.

மீதமுள்ள அரநூற்றி எழுபத்தி மூணு பேர்களுக்கு இன்னும் ஓட்டுரிமையே வழங்கப் படவில்லை இந்த நிலைமையில் அவர் கட்சி நடத்துகிறார்.

நீங்களே சொல்லுங்கள் இப்படிப் பட்டவரிடம் கூட்டணி அமைத்தால் நாளைக்கு நான் முதல் அமைச்சரா ஆகமுடியுமா ?

இல்லை அந்தக் கோட்டை பக்கம்தான் போகமுடியுமா ?

இன்னிக்கு தமிழ் நாடு இந்த நிலைமைக்கு இருக்கிறதுக்குக் காரணமே இந்த ராஜேந்தர்தான்.அதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும் என்பதால் எங்கள் கட்சி வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடும் நான் முதல் அமைச்சரா பொறுப்பேற்றப் பிறகு,முதல் வேலையா காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளை வைத்து ஒரு படம் எடுக்கிறது.
கதா நாயகனாக டவுசர் ராமராஜன்,அவர் கதையின் ஆரம்பமமே அவர் ஒரு தீவிரவாதி,சுடுவதில் இல்லை பாட்டு பாடுவதில்.இந்தியாவை தீவிரவாதிகள் பாம் வைத்து தகர்க்கும் போகும் சமயத்தில்..பாட்டுப் பாடி தீவிரவாதிகளை எப்படிக் கொல்லுகிறார் என்பதே கதை.

கேப்ட்டனின் பதிவை அப்படியே டி.ராஜேந்தரிடம் போட்டு காண்பித்து,கருத்துக் கேட்ட போது.

அவன் கிடக்குறான் லூசு !
அவன் கையில் மின்னுது காசு !
டேய்..வார்த்தையை அளந்து.. நீ பேசு !
உன்னை சும்மா விடமாட்டார் ஏசு !

இப்படி அடுக்கி கொண்டே போகும்போதே அவருக்குத் தெரியாமலேயே நாங்கள் வெளியே வந்துட்டோம்.

கண்ணை மூடிகிட்டு இன்னும் பேசிக் கொண்டே இருக்கார் டி ஆர். (அவர் முதல் அடுக்கு வார்த்தை அவருக்கே பொருந்தும்)

அந்நியன் :

கூத்தைப் பார்த்தோம்,படித்தோம் சினிமாவில் கூத்தடிப்பவர்களுக்கு அரசியலில் என்ன வேலை ?

திரையில் முதல்வரா ஆகுங்கள்,பிரதமரா ஆகுங்கள்,உங்கள் தீற்றை ஏன் அரசியலில் காண்பிக்கிரிகள் ?

அரசியல் தலைவரா ஆகுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு ?

MGRல் தொடங்கிய இந்த வியாதி இன்று விஜய் வரை வந்து நிக்குது !!!

இதுக்கெல்லாம் காரணம் முட்டாள் மக்கள்கள், இவர்கள் மாறாதவரை நாமும் மாறமாட்டோம்.




24 comments:

  1. வீடியோ சூப்பர் அண்ணா!!!!!!!!!!

    அப்படியாவது நமக்கு நல்லது செய்ய வந்துட மாட்டாங்களான்னு முட்டாள் மக்கள் ஆதரவு கொடுக்குராங்க.பாவம் அவங்கள சொல்லி என்ன பண்ண???

    ReplyDelete
  2. இண்ட்லியில் இணைத்துள்ளீர்கள். அதன் வழியா தான் வந்தேன். அதோட ஓட்டு பட்டை வைக்கலாமே!!!
    இன்னும் அதிக வாசகர்களை பெறலாம்.....

    ReplyDelete
  3. கருத்திற்கு ரொம்ப நன்றி !

    ஒட்டு பட்டை...ம்..யோசிப்போம் சகோ.அப்படி வச்சாலும் யாரு ஓட்டு போடப்போவதும் இல்லை அதுனாலே வைக்க வில்லை

    ReplyDelete
  4. நண்பா... நீங்கள் வாசகர்கள் இல்லாமல் தவிப்பதாக ஒரு பின்னூட்டத்தில் படித்துவிட்டு ஓடி வந்தேன்... ஏன் நாங்கள் எல்லாம் இல்லையா... ஒன்றும் கவலைப்படாதீர்கள்... ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்... நீங்கள் எல்லாம் ஆரம்பித்து இரண்டு மாதத்திலேயே 26 followers பெற்றுவிட்டீர்கள்... நான் நான்கைந்து மாதங்கள் கழிந்த பின்னரே கணக்கை தொடங்கினேன்... உங்களுடைய எழுத்துநடை வசீகரமாக இருக்கிறது... கூடிய விரைவில் வாசகர்கள் எண்ணிக்கை பெருகும்...

    ReplyDelete
  5. /tamil blogs said...
    தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://tamilblogs.corank.com//

    கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுகிறேன் நன்றி !

    ReplyDelete
  6. //polurdhayanithi said...
    பாராட்டுகள் !!!

    வருகைக்கும் உங்கள் பாராட்டிற்கும் நன்றி தலைவா !!!

    ReplyDelete
  7. //philosophy prabhakaran said...
    நண்பா... நீங்கள் வாசகர்கள் இல்லாமல் தவிப்பதாக ஒரு பின்னூட்டத்தில் படித்துவிட்டு ஓடி வந்தேன்... ஏன் நாங்கள் எல்லாம் இல்லையா... ஒன்றும் கவலைப்படாதீர்கள்... ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்... நீங்கள் எல்லாம் ஆரம்பித்து இரண்டு மாதத்திலேயே 26 followers பெற்றுவிட்டீர்கள்... நான் நான்கைந்து மாதங்கள் கழிந்த பின்னரே கணக்கை தொடங்கினேன்... உங்களுடைய எழுத்துநடை வசீகரமாக இருக்கிறது... கூடிய விரைவில் வாசகர்கள் எண்ணிக்கை பெருகும்.//

    உங்கள் ஆறுதல்கள் எனக்கு ஒரு தைரியத்தை தருகிறது நண்பா ரொம்ப நன்றி பிரபா.

    ReplyDelete
  8. அருமையான ஒளி ஒலிக்காட்சி

    ReplyDelete
  9. //ஸாதிகா said...
    அருமையான ஒளி ஒலிக்காட்சி
    December 15, 2010 9:48 AM//

    கருத்திற்கு ரொம்ப நன்றி ! Sister

    ReplyDelete
  10. உங்களை (அந்நியன் 2 ) ஜிர்க் ஐலண்டில பிடிச்சி போட்டதுக்கே இப்பிடின்னா வெளியே தரையில விட்டா இந்தியன் 2 ஆ மாறிடூவீங்களா...ஹா...ஹா..

    ((என்னது பதிவுக்கும் கமெண்டுக்கும் சம்பந்தமில்லன்னு பாக்குறீங்களா அதான் பழைய நாட்டாமை ))

    ReplyDelete
  11. //ஜெய்லானி said...
    உங்களை (அந்நியன் 2 ) ஜிர்க் ஐலண்டில பிடிச்சி போட்டதுக்கே இப்பிடின்னா வெளியே தரையில விட்டா இந்தியன் 2 ஆ மாறிடூவீங்களா...ஹா...ஹா..

    ((என்னது பதிவுக்கும் கமெண்டுக்கும் சம்பந்தமில்லன்னு பாக்குறீங்களா அதான் பழைய நாட்டாமை )) //

    இல்லைணா..அப்படியேத்தேன் இருப்பேன் அந்நியன் என்ற கேரேக்ட் நல்லாத்தான் தெரியுது மிரட்டல் எதுவும் வந்துச்சுனா பேரை மாற்றிக் கொள்ளவேண்டியதுதான்.ரொம்ப நன்றி அண்ணா.

    ReplyDelete
  12. //வாசகர்கள் இல்லாமல் தவிப்பதாக ஒரு பின்னூட்டத்தில் படித்துவிட்டு ஓடி வந்தேன்.//

    என்ன இப்படி சொல்லிட்டீங்க???

    அதுக்கு தான் ஓட்டுபட்டை வைக்க சொல்றேன். வச்சா பிரபலமாகி நிறைய பேரு பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. நான் ஆரம்பிக்கும் போது சரியா வராததுனால தான் தமிழ்மணத்துலையும், இண்ட்லியிலும் இணைச்சேன். இப்ப அதிகமா வாசகரகள் வரதே அங்கேயிருந்து தான்....

    சீக்கிரமா வச்சுடுங்க சகோ!!

    ஓட்டு போட யாரு ஆள் இல்லைன்னு சொன்னது? நீங்க வச்சு பாருங்க. அப்பறமா சொல்லுங்க :))

    ReplyDelete
  13. நல்லாருக்கு அந்நியன், இவனுகள இன்னும் நல்லா கிழிங்க!

    ReplyDelete
  14. இவனுகளை எப்படி கிழிச்சாலும் fபெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுலே வர்றானுக.ரொம்ப நன்றி சார்

    ReplyDelete
  15. ஆஹா என்னா இங்கிலிபீசு ... சூப்பர்பா... நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும்.. அவனைக் கடவுளாகப் பார்க்கும் அறிவில்லாத மக்கள் இருக்கும்வரை இவர்களை குறை சொல்ல முடியாது. தமிழன் தமிழன் னு சொல்லும்போது பின்னாடி கை தட்டுதே ஒரு பன்னாட.. அந்த மாறிப் பன்னாடைகள் தான் இவர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள். தமிழர்கள் விழித்துக் கொண்டால் இவர்கள் இப்படி கத்த முடியாது.

    அரசியலில் வர தனித்தகுதி ஒன்றும் தேவை இல்லை. அன்பு, அன்பு, அன்பு.. இது மட்டும் போதும்... கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவை பின்னாலேயே வரும். பணம் சம்பாரிக்கும் நோக்கில் வரும் நாய்கள் தான் இந்த நாட்டைக் கெடுத்து கொஞ்ச நஞ்ச சேவை உணர்வோடு அரசியலுக்கு வருபவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு, விஜயகாந்த் நல்லவர் என்றே வைத்துக் கொள்வோம்.. தானாக சேர்ந்த கூட்டம் தானே என்று பிரியாணியும், தண்ணியும் , சில்லி சிக்கனும் வாங்கித் தராமல் விட்டால், பொதுக்கூட்டத்துக்கு வருவானுகளா தொண்டர்கள்...? அந்தக் கட்சிக்குப் போனா கோழிப் பிரியாணியும் கொத்துப் பரோட்டாவும் கிடைக்கும்னு தெரிஞ்சா அங்க தான போவான். ஆக நல்லவனாக ஒருவன் இருந்து பிரயோஜனம் இல்லை.. பிரியாணிக்காக தொண்டனாக ஆகும் மக்கள் இருக்கும்வரை இந்த அரசியல் ஆதாயவாதிகளை குறை சொல்ல நமக்கு தகுதியே இல்லை..

    ஒரு மாசம் முன்னாடி ஒரு காட்சி பார்த்தேன். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஒரு லாரி, அதில் நிறைய இளைஞர்கள்(அருகில் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள்) தலையில் சிகப்புத் துண்டு, கையில் கைக்குட்டை போல ஆரஞ்சு வண்ண துணி, அப்புறம் நெத்தியில் ஆரஞ்சு வண்ணத்தில் நாமம். வண்டிக்குள் ஒரே கும்மாளம். என்னவென்று பார்த்தால், கரூரில் சிவசேனா பொதுக்கூட்டமாம்.. எங்கிருந்து ஆட்களைப் பிடிக்கிறார்கள் பார்த்தீர்களா..?? படித்தவனைக் கூப்பிட்டால் வருவான்...? இந்த மாதிரி படிக்காத சேரி சனங்கள் தான் இவர்களது இலக்கு, தண்ணி வாங்கிக் கொடுத்ததால் லாரி ஏறி வந்து விடுவார்கள். அவர்கள் ஒரு நாள் சம்பாரிக்கும் சம்பளத்தை விட அவர்களுக்கு அதிகம் கிடைக்கும். இப்படி மக்களால் சுரண்டப் பட்ட அரசியல் வாதி அரசியலுக்கு வந்தால் சேவையா செய்வான்.. அவன் செலவு செய்ததை வசூல் தான் செய்வான்.. சாரி.. பின்னூட்டம் நீலமாயிடுச்சு..

    ReplyDelete
  16. ((பின்னூட்டம் நீளமாயிடுச்சு )

    ReplyDelete
  17. உங்கள் எழுத்து வசீகரமாகவும் பொது நோக்கம் கொண்டதாகவும் உள்ளது .. தொடருங்கள்.

    ReplyDelete
  18. நீண்ட நாட்களாக உங்கள் வலைப்பூவுக்கு வராதற்கு மன்னிக்கவும். உங்களின் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே, கோபம் குறையாமல் எழுதுகிறீர்கள்.
    உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். எமது வாக்குகள் எப்போதும் உண்டு.
    தயவு செய்து தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் இணையுங்கள்..

    ReplyDelete
  19. //பிரியாணிக்காக தொண்டனாக ஆகும் மக்கள் இருக்கும்வரை இந்த அரசியல் ஆதாயவாதிகளை குறை சொல்ல நமக்கு தகுதியே இல்லை..
    //

    ReplyDelete
  20. //ஓட்டு போட யாரு ஆள் இல்லைன்னு சொன்னது? நீங்க வச்சு பாருங்க. அப்பறமா சொல்லுங்க :))//

    ReplyDelete
  21. /சாமக்கோடங்கி said...
    ஆஹா என்னா இங்கிலிபீசு ... சூப்பர்பா... நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும்.. அவனைக் கடவுளாகப் பார்க்கும் அறிவில்லாத மக்கள் இருக்கும்வரை இவர்களை குறை சொல்ல முடியாது. தமிழன் தமிழன் னு சொல்லும்போது பின்னாடி கை தட்டுதே ஒரு பன்னாட.. அந்த மாறிப் பன்னாடைகள் தான் இவர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள். தமிழர்கள் விழித்துக் கொண்டால் இவர்கள் இப்படி கத்த முடியாது //.

    உங்களின் பின்னூட்டம் ரொம்ப அருமை நண்பா..முதல் வருகையிலேயே "பளார்"என்று ஒரு அரை விட்டுரிக்கியே வாழ்த்துகிறேன் ! அந்த பதிவாளர் டி ராஜேந்தரிடம் அப்படி எண்ணக் கேட்டு விட்டார் ? ஏன் சார் உங்க கூட்டத்திற்கு மட்டும் கூட்டம் வருதுலியே என்று உண்மையைத்தான் கேட்டார் அதுக்கு அந்த மனுஷன் பேசுற பேச்சை பார்த்தியளா? அப்புறம் எப்படி சட்ட சபையில் எதிர் கட்ச்சிக்காரன் கேள்வி கேட்க்கும் போது பதில் சொல்லப் போறாரு ?

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி நண்பா.

    ReplyDelete
  22. //பாரத்... பாரதி... said...
    நீண்ட நாட்களாக உங்கள் வலைப்பூவுக்கு வராதற்கு மன்னிக்கவும். உங்களின் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே, கோபம் குறையாமல் எழுதுகிறீர்கள்.
    உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். எமது வாக்குகள் எப்போதும் உண்டு.
    தயவு செய்து தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் இணையுங்கள்.//

    ரொம்ப நன்றி நந்தினி,நீங்கள் படிக்கும் மாணவிகள் வருங்கால இந்தியாவின் தலை எழுத்தை மாற்றக் கூடிய ஒரு பெரிய சக்த்தியாக திகழ இருக்கும் நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்க்கக் கூடாது.உங்களின் அறிவுப் பூர்வமான கவிதைகள் மற்றும் ஆக்கங்கள் எனக்கு பிடித்தவை ஆனால் கருத்திரையிடும்போது சில வார்த்தைகள் சட்ட சிக்கலில் உங்களை கொண்டு சென்று விடுமோ என்ற அச்சத்தில் நான் சிலப் பின்னூட்டங்களை திரும்ப பெற்றேன் சாரி.தமிழ்மணம் இன்ட்லியில் இணைத்து விடுகிறேன் ரொம்ப நன்றி பாரதி.

    ReplyDelete