Saturday, December 18, 2010

போக்குவரத்து விதிகளை மீறிய மாடு கைது...!!!




சென்னை மாநகருக்கு உட்பட்ட முக்கிய சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மாட்டினை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்,இதைப் பற்றிய ஒரு தொகுப்பு.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை மூன்றினையும் தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் தமிழக காவல் துறையினர்,தவறு செய்யும் யாவரும் சட்டத்திற்கு முன் சமம் என்று சமிப காலமாக நிருபித்து வருவது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே வியப்பளிக்கிறது...!!!

சென்ற பதிவில் வக்கீலை கொலை செய்ய முயன்ற சேவலை அதிரடியாக வலை விரித்துப் பிடித்து கைது செய்த போலீசாருக்கு,தமிழக முதல்வர் விருதிற்கு,காவல் துறை டிஜிபி அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு விருது கிடைக்கப் போகும் தருவாயில்,மற்றொரு போலீசார் போக்குவரத்து விதியை மீறிய குற்றத்திற்காக மாட்டினை மிகத் துணிச்சலுடன் பிடித்து வரும் காட்ச்சியினை கண்டு, யாருக்கு அந்த விருதை கொடுப்பதற்கு பரிந்துரை செய்யலாம் என்று டிஜிபி அவர்கள் மிக தீவிர யோசனையில் உள்ளார்.

மிக துணிச்சலுடன் மாட்டினை கைது செய்த போலீசாரை "அந்நியன் 2"  நேரில் சென்று வாழ்த்தினை தெரிவித்தார் அவர்களின் உரையாடல் சில, இதோ உங்கள் பார்வைக்கு.

அந்நியன் : உங்களின் தீர செயலை பாராட்டுகிறேன் எங்கு வைத்து அந்த மாட்டினை பிடித்தீர்கள் ?

போலிஸ் : தம்பி.. நீங்கல்லாம் படத்தில்தான் சட்டம் பேசுவிர்கள் ஆனால் நானோ உண்மையில் சட்டத்தை காப்பாற்றக் கூடிய ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி,நேற்று மாலை மூணு மணிக்கு சென்னை நகரில் முக்கிய வளைவில் விளக்கு சிவப்பு நிறத்தைக் காண்பித்தும் கொஞ்சம்கூட பயம் இல்லாமல் கடந்து சென்ற இந்த மாட்டினை கைது செய்து உள்ளேன்,இது முடிவு இல்லை,இது ஆரம்பம் இதை எல்லோரும் புரிஞ்சு நடந்துக்கணும்.

அந்நியன் : மாட்டிற்கு முன்னாடி ரெண்டு மோட்டார் சைக்கிலு சிக்னலை மதிக்காமல் சென்றதாக மக்கள் பேசிக்கொள்கிறார்களே அப்போ அவர்களை கைது செய்யலியா ?

போலிஸ் : என்ன தம்பி புரியாமல் பேசுறே..அவனுக பெரிய இடத்துப் பசங்கள் அவனுக மீது கையை வச்சா,அப்புறம் சாப்பிடறதுக்கு எனக்கு கை இருக்காது.

அந்நியன் : அப்போ..உங்கள் சட்டத்தில் ஆடு மாடு கோழி,தப்பு செய்தால் மட்டும்தான் கைது பண்ணுவதற்கு இடம் இருக்கு,மனுசர்கள் தப்பு செய்தால் கைது பண்ணுவதற்கு இடம் இல்லை..அப்படித்தானே ?

போலிஸ் : என்ன அந்நியன்,கிறுக்குத் தனமா கேள்வி கேக்குறே,யார் சொன்னா,தப்பு செய்ற மனுஷரைக் கைது பண்ண சட்டத்தில் இடம் இல்லை என்று ? ஒருநாளைக்கு எத்தனை தள்ளு வண்டிக்காரனை சட்டம் தண்டிக்கிது,எத்தனை பழ வியாபாரிகள் மீது சட்டம் பாயிகிறது,எத்தனை பிச்சைக் காரர்கள் மீது சட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கிறது,இவர்கள் எல்லாம் உன் கண்ணுக்கு மனுஷர்களா தெரியலையா ?

அந்நியன் : நல்லாவே தெரியுது..என் கண்ணுக்கு எல்லாமே...நல்லாவே தெரியுது.உங்களை மாதுரி போலீசார் இருக்கிறதுனாலத்தான் இந்தியா இந்த நிலைமைக்கு இருக்கு.உம்மை போன்ற நேர்மையான போலீசார் இருக்கும் வரை அந்நியனின் வேட்டை தொடரும்.


சிரிப்புப் பதிவு.யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் ஆடு மாடுகளை அள்ளிசெல்ல மாநகராட்சி ஊழியர்கள் இருக்கும் போது,போலீசார் இதில் ஈடு படுவது அவ்வளவு நல்லா தெரியலை.

18 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அட..விந்தையான செய்திகளை தருவதில் அந்நியனை அடிச்சுக்க் ஆளில்லை.கூடவே போலீஸுடன் சம்பாஷனை செய்தத சம்பவம்..பலே.

    ReplyDelete
  3. //ஸாதிகா said...
    அட..விந்தையான செய்திகளை தருவதில் அந்நியனை அடிச்சுக்க் ஆளில்லை.கூடவே போலீஸுடன் சம்பாஷனை //

    கருத்திற்கு நன்றி அக்காள்.

    அதுக்காக என்னையும் பதிவர் இடத்தில் வைத்து பேசாதிர்கள் அக்காள்,நான் இப்பத்தான் எழுதிப் பழகுறேன் எல்லாம் முடிந்தப் பிறகு "பதிவர்" என்று அறிவிக்கிறேன்,அப்பொழுது எனக்கு ஆதரவு தந்தால் போதும்.
    ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.

    ReplyDelete
  4. அந்த மாட்டை பிடிச்சிகிட்டு போய் எனன் பண்ணினாங்கன்னு போட்டா என்னை மாதிரி சாதாரன ஆளுங்களுக்கு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும் ;)

    ReplyDelete
  5. நடந்த சம்பவம் கற்பனையா உண்மையா...?

    மாட்டை ஓட்டிட்டு போன போலீஸ்காரர் அதன் உரிமையாளரிடம் இருந்து நன்றாக கரந்திருப்பார்...

    ReplyDelete
  6. //ஜெய்லானி said...
    அந்த மாட்டை பிடிச்சிகிட்டு போய் எனன் பண்ணினாங்கன்னு போட்டா என்னை மாதிரி சாதாரன ஆளுங்களுக்கு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும் ;)//

    என்னண்னே இப்படிக் கேட்டுப்பிட்டியே,புது வருஷம் வருதுலே அதான் இப்படி பல அதிர்ச்சியூட்டும் கைதுகளை செய்து,போலீசார் சாகசம் புரிகிறார்கள்.எல்லாம் ஒரு வசுலுக்குத்தான்.

    முதலில் கசாப்பு கடைக் காரனிடம் விலைப் பேசியிருப்பார்கள்,மூன்று நாளைக்குள் யாரும் மாட்டை தேடி வராவிட்டால் நல்ல விலைக்கு கேரளாவுக்கு ஏற்றி இருப்பார்கள் இதான் நடந்திருக்கும்.

    ReplyDelete
  7. //philosophy prabhakaran said...
    நடந்த சம்பவம் கற்பனையா உண்மையா...?//

    நடந்த சம்பவம் உண்மைதான் பிரபா,திரைக் கதை மட்டும் எழுதினேன்.
    உங்கள் வருகைக்கும் அண்ணன் ஜெய்லானி வருகைக்கும் நன்றிகள் !

    ReplyDelete
  8. //நேற்று மாலை மூணு மணிக்கு சென்னை நகரில் முக்கிய வளைவில் விளக்கு சிவப்பு நிறத்தைக் காண்பித்தும் கொஞ்சம்கூட பயம் இல்லாமல் கடந்து சென்ற இந்த மாட்டினை கைது செய்து உள்ளேன்//
    ,
    ரசனையான வர்ணனை.

    ReplyDelete
  9. //நான் இப்பத்தான் எழுதிப் பழகுறேன் எல்லாம் முடிந்தப் பிறகு "பதிவர்" என்று அறிவிக்கிறேன்//

    எத்தனையோ பதிவர்களை விட நீங்கள் சிறந்தவர் தான். குறை ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  10. //மாட்டை ஓட்டிட்டு போன போலீஸ்காரர் அதன் உரிமையாளரிடம் இருந்து நன்றாக கரந்திருப்பார்... //

    ReplyDelete
  11. டிஸ்கி போட்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள். இதில் எதற்கு பம்ம வேண்டும்,.

    ReplyDelete
  12. //பாரத்... பாரதி... said...
    //நேற்று மாலை மூணு மணிக்கு சென்னை நகரில் முக்கிய வளைவில் விளக்கு சிவப்பு நிறத்தைக் காண்பித்தும் கொஞ்சம்கூட பயம் இல்லாமல் கடந்து சென்ற இந்த மாட்டினை கைது செய்து உள்ளேன்//
    ,
    ரசனையான வர்ணனை.

    ரொம்ப நன்றி பாரதி.

    //பாரத்... பாரதி... said...
    //நான் இப்பத்தான் எழுதிப் பழகுறேன் எல்லாம் முடிந்தப் பிறகு "பதிவர்" என்று அறிவிக்கிறேன்//

    //எத்தனையோ பதிவர்களை விட நீங்கள் சிறந்தவர் தான். குறை ஒன்றும் இல்லை.//

    அப்படியா !!!

    பாரத்... பாரதி... said...
    //மாட்டை ஓட்டிட்டு போன போலீஸ்காரர் அதன் உரிமையாளரிடம் இருந்து நன்றாக கரந்திருப்பார்... //

    கரெக்ட்டா சொன்னியே

    பாரத்... பாரதி... said...
    டிஸ்கி போட்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள். இதில் எதற்கு பம்ம வேண்டும்,.

    என்ன செய்ய புள்ளை குட்டிக்காரன் அடிக்கடி ஊருக்கு போயி வருபவன். எல்லாம் ஒரு சேப்ட்டிக்குத்தான்.

    நாலு கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி பாரதி.

    ReplyDelete
  13. முன்னாடிலாம் பைக்ல எவன் போனாலும் பிடிச்சு பணம் கரப்பான்க. இப்ப இந்த மாதிரி மாடு வச்சே கரக்க ஆரம்பிச்சுட்டாங்களா??!!!

    கொடுமை!

    எங்கே செல்லும் இந்த பாதை........

    ReplyDelete
  14. என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல நண்பரே

    போலிஸ் : என்ன அந்நியன்,கிறுக்குத் தனமா கேள்வி கேக்குறே,யார் சொன்னா,தப்பு செய்ற மனுஷரைக் கைது பண்ண சட்டத்தில் இடம் இல்லை என்று ? ஒருநாளைக்கு எத்தனை தள்ளு வண்டிக்காரனை சட்டம் தண்டிக்கிது,எத்தனை பழ வியாபாரிகள் மீது சட்டம் பாயிகிறது,எத்தனை பிச்சைக் காரர்கள் மீது சட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கிறது,இவர்கள் எல்லாம் உன் கண்ணுக்கு மனுஷர்களா தெரியலையா ?

    சாமான்யன் மீது பாயும் புலியாக மேய்ந்து காயப்படுத்தும் காவலர்கள்
    எம் கண்களுக்கு சாக்கடை புழுக்களாக அரசியல் சாக்கடை தூர்வாரப்படுமா

    ReplyDelete
  15. //ஆமினா said...
    முன்னாடிலாம் பைக்ல எவன் போனாலும் பிடிச்சு பணம் கரப்பான்க. இப்ப இந்த மாதிரி மாடு வச்சே கரக்க ஆரம்பிச்சுட்டாங்களா??!!!

    கொடுமை!

    எங்கே செல்லும் இந்த பாதை........//

    நன்றி ஆமினா உங்கள் கருத்திற்கு கண்டிப்பாக இந்தப் பாதை நேரான வழியில் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  16. /dineshkumar said...
    என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல நண்பரே

    போலிஸ் : என்ன அந்நியன்,கிறுக்குத் தனமா கேள்வி கேக்குறே,யார் சொன்னா,தப்பு செய்ற மனுஷரைக் கைது பண்ண சட்டத்தில் இடம் இல்லை என்று ? ஒருநாளைக்கு எத்தனை தள்ளு வண்டிக்காரனை சட்டம் தண்டிக்கிது,எத்தனை பழ வியாபாரிகள் மீது சட்டம் பாயிகிறது,எத்தனை பிச்சைக் காரர்கள் மீது சட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கிறது,இவர்கள் எல்லாம் உன் கண்ணுக்கு மனுஷர்களா தெரியலையா ?

    சாமான்யன் மீது பாயும் புலியாக மேய்ந்து காயப்படுத்தும் காவலர்கள்
    எம் கண்களுக்கு சாக்கடை புழுக்களாக அரசியல் சாக்கடை தூர்வாரப்படுமா //

    கண்டிப்பாக தூர் வாரப் படனும் கவிஞரே.

    ஏன் என்றால் காவலர்களின் அடக்கு முறைகளை நாம் ஊக்குவிக்கக் கூடாது சட்டத்தை மதிக்கும் காவலர்கள் சாமானியர்கள் அவர்கள் கையில் கிடைக்கும் பட்ச்சத்தில் பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் கொடுமையும் நடக்கத்தான் செய்கிறது.

    வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி !

    ReplyDelete
  17. பாராட்டுகள் நண்பரே எப்படி இந்த படமெல்லாம் ? நல்ல கூத்துதான் போங்க . வாய்விட்டு சிரிச்சா
    நோய் விட்டு போகும் சிரிச்சா என்ன கொறைஞ்ச போகுமுன்னு இந்த படு படுத்து கின்றீர்கள் . பாராட்டுகள்

    ReplyDelete
  18. //polurdhayanithi said...
    பாராட்டுகள் நண்பரே எப்படி இந்த படமெல்லாம் ? நல்ல கூத்துதான் போங்க . வாய்விட்டு சிரிச்சா
    நோய் விட்டு போகும் சிரிச்சா என்ன கொறைஞ்ச போகுமுன்னு இந்த படு படுத்து கின்றீர்கள் . பாராட்டுகள்//

    Rompa Nandri Ayyaa

    ReplyDelete