Tuesday, January 4, 2011

த்தூப்......என்ன அரசியல் ???



அரசியலில் ஒரு கோர முகம் இருக்கிறது. 
பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பது தான் அது.

உதாரணமாய் தமிழ் நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் குற்றம் என்கிறார்கள். உணவுப் பொருளான கள்ளை விற்றால் கூட குற்றம் என்று போலீஸ் தென்னந்தோப்புகளில் காவல் இருந்த கதையை நாமெல்லாம் தினசரிகளில் படித்தோம். ஆனால் லைசென்ஸ் வாங்கி சாராயம் விற்றால் அது குற்றமில்லையாம்.

இல்லாத ஏழைகள் எங்கே போவது கோடிக்கு?

கோடீஸ்வரனக் கோமானுக்கு கோடிகள் பெரிது இல்லை. இதோ சாராயம் விற்கும் விஜய மல்லையாவை கட்டிப் பிடிக்கும் சமீரா ரெட்டியைப் பாருங்கள். இந்த நடிகை ரசிகன் எவனையாவது கட்டிப்பிடிப்பாரா?

விஜய் மல்லையாவைக் கட்டிப் பிடித்தால் கோடிகளில் காசு கிடைக்கும். ரசிகனைக் கட்டிப்பிடித்தால் என்ன கிடைக்கும் ???
இவர்கள் எல்லாம் சினிமாவிற்கு ஏன் வருகிறார்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள முயலுங்கள். நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்களை வைப்பவர்கள் மண்ணிலேயே வாழ அருகதை அற்றவர்கள்


நடிகைகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சினிமா பைத்தியங்கள் என்றைக்காவது நாட்டின் தியாகிகளையும் நல்ல எழுத்தாளர்களையும் சமூக சேவகர்களையும் நினைத்துப் பார்த்ததுண்டா ?
நடிகைகள் அடிக்கும் கூத்தையும் கும்மாளத்தையும் பார்த்தப் பிறகாவது திருந்தட்டும் இந்த ஜென்மங்கள்.

நடிகைகள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமிது இது,காரணம் தன்மானத்தையும் இழந்து கண்ட கண்ட பணக்கார காமுகர்களை கட்டாயப் படுத்தி தன் வசப் படுத்துவதே மிக பிரபலாமான நடிகைகளின் பொழுது போக்கா போச்சு,அதில் அவர்கள் சில நேரம் நரக வேதனைக் கண்டாலும் வருடக் கணக்கில் சந்தோசமாக இருக்கின்றார்கள் கிடைத்த பண மூட்டையைப் பெற்றுக் கொண்டபிறகு.



நடிகைகளை குற்றப்படுத்தி நான் எழுதவில்லை அவர்களில் குடும்ப பெண்களும் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் மறுப்பதற்கு இல்லை,சினிமாவில் இருக்கும் இவர்களுக்கு அரசியல் எதற்கு ?

நடிகர் விஜய் அரசியலில் நுழைவதால் யாருக்கும் எந்த இழப்பும் கிடையாது அப்படி அவர் ஜெயித்து நாட்டின் மந்திரியாகவோ அல்லது முதல் மந்திரியாகவோ ஆகி நாட்டு மக்களுக்கு நல்லது செய்வாரென்றால் நாமும் அதை வரவேற்கத்தான் செய்வோம்,அதற்காக ஷகீலா,குஷ்பு,நமிதா போன்ற நடிகைகள் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டுவது கண்டிக்க தக்கது.



இந்த வேகத்தை எந்த நடிகைகளாவது உங்கள் தெருவிற்கு ஓட்டு கேட்டு வந்தால் நாங்கள் ஏமாளிகள் இல்லை என்று நிருபியுங்கள்.

36 comments:

  1. மேலே உள்ள போட்டோவும் சில வரிகளும் எனது நண்பர் ஈ மெயில் மூலம் அனுப்பியது.

    இந்த போட்டோவை எடுத்தவர் உரிமை கொண்டாடாமல் உங்களின் முகவரியை இணைக்க கூறினால் இணைப்பதிற்கு வசதியாக இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  2. விஜய் அரசியல் வர மாதிரி இதுகளும் வந்துட்டு போகட்டுமே சகோ..... பாவம் வீட்டுல இருக்குறதுக்கு முடியல போல....

    ReplyDelete
  3. //சினிமாவில் இருக்கும் இவர்களுக்கு அரசியல் எதற்கு ?
    //
    காசு பார்க்கும் 2 இடங்களில் தொழில் புரிகிறார்கள்....

    நல்ல பதிவு!!

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு அந்நியரே சினிமா சினிமா என்று அவர்கள் பின்னே இளைய சமுதாயமும் சென்றுகொண்டிருக்கிறது என்று மாறுமோ இந்நிலை நீடித்தால் கொடுமைதான் சினிமா சாயம் பூசதா அரசியல் வாதிகள் நம் நாட்டில் எவர் உள்ளார் மாறவேண்டும் முயலுவோம் முயற்சி செய்வோம் மாற்றம் காணுவோம் http://marumlogam.blogspot.com/2011/01/blog-post_03.html
    இங்கு கொஞ்சம் வந்து பாருங்கள்

    ReplyDelete
  5. உங்கள் எழுத்துக்களுக்கு என் ஆதரவு உண்டு என்றாலும் இந்த பதிவின் பொருள் என்ன என்பது சிந்திக்காமல் நீங்கள் எழுதியது என்று எண்ணுகிறேன்.

    //நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்களை வைப்பவர்கள் மண்ணிலேயே வாழ அருகதை அற்றவர்கள்//

    அப்ப நடிகர்களுக்கு வைப்பவர்கள் மண்ணை ஆள பிறந்தவர்களா. அவர்களும் மனிதர்கள் தானே.

    என்னை கேட்டால் ரசிகர்மன்றம் எதற்கு? என்று தான் கூறுவேன்.

    //நடிகர் விஜய் அரசியலில் நுழைவதால் யாருக்கும் எந்த இழப்பும் கிடையாது //
    உண்மைதான் அரசியலை அவருக்காக பயன்படுத்தாத வரை.
    //ஷகீலா,குஷ்பு,நமிதா போன்ற நடிகைகள் அரசியல் நுழைவதற்கு ஆர்வம் காட்டுவது கண்டிக்க தக்கது.//

    இது தவறானது. ஏன் நடிகைகள் வர கூடாது. அவர்கள் என்ன கொலைகுத்தம் செய்தார்கள்?
    மேலே சொன்னது தான் இவர்களுக்கும், அரசியலை சொந்த விசயத்துக்கு பயன்படுதாதவரை யார் வேண்டுமானாலும் வரலாம்.

    நடிகைகள் வருவது கண்டிக்கதக்கது என்பது தவறு. ஒரு வேசி அரசியலுக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கணும்.
    அவள் ஒரு வேசி , அவள் அரசியலுக்கு வர கூடாது என்பது சிந்திக்காத கருத்து.

    ஏதோ வந்து வாசிச்சதால சொல்லனும்னு தோணுச்சு. இந்த கருத்தை வெளியிடவும் மறுக்கவும் முழு உரிமையையும் உங்களுக்கே தருகிறேன்.


    @ஆமினா, M.G.R என்ற ஆலமரம் மக்களுக்காக வாழ்ந்ததுஎன்பதை சொல்லியாக வேண்டும். அவர் காசு பார்க்க அரசியலுக்கு வரவில்லை. அந்த ஆலமரத்து அடியில் வளர்த்த எந்த ஒரு உயிரும் காசு பார்க்காமல் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

    என்றும் தீராத நட்புடன், உங்கள் நண்பன்...

    ReplyDelete
  6. அழகான,தெளிவான அலசல்.

    ReplyDelete
  7. //நடிகைகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சினிமா பைத்தியங்கள் என்றைக்காவது நாட்டின் தியாகிகளையும் நல்ல எழுத்தாளர்களையும் சமூக சேவகரர்களையும் நினைத்துப் பார்த்ததுண்டா ?
    நடிகைகள் அடிக்கும் கூத்தையும் கும்மாளத்தையும் பார்த்தப் பிறகாவது திருந்தட்டும் இந்த ஜென்மங்கள்.//

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. //ஆமினா said...
    விஜய் அரசியல் வர மாதிரி இதுகளும் வந்துட்டு போகட்டுமே சகோ..... பாவம் வீட்டுல இருக்குறதுக்கு முடியல போல..//

    அதற்காக அரசியல்தான் இவர்களுக்கு கிடைததததா சகோ.....தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கருணாநிதிக்குப் பிறகு சினிமா துறைதான் அரசியலை ஆட்டிப் படைக்கப் போகிறது சில கெட்ட நடிக நடிகைகளிடம் நாட்டை கொடுப்பதை விட விஜய் போன்ற நடிகரிடம் நாடு போகட்டுமே என்ற ஆதங்கத்தில் சொன்னேன்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி ஆமினா

    ReplyDelete
  9. //dineshkumar said...
    நல்ல பகிர்வு அந்நியரே சினிமா சினிமா என்று அவர்கள் பின்னே இளைய சமுதாயமும் சென்றுகொண்டிருக்கிறது என்று மாறுமோ இந்நிலை நீடித்தால் கொடுமைதான் சினிமா சாயம் பூசதா அரசியல் வாதிகள் நம் நாட்டில் எவர் உள்ளார் மாறவேண்டும் முயலுவோம் முயற்சி செய்வோம் மாற்றம் காணுவோம் http://marumlogam.blogspot.com/2011/01/blog-post_03.html
    இங்கு கொஞ்சம் வந்து பாருங்கள்//

    வருகைக்கும் உங்கள் புரட்ச்சி கவிதைக்கும் நன்றி அண்ணே,நாலு நாளா நெட் வேலை செய்ய வில்லை அதான் எங்கும் போகமுடியலை மன்னிக்கவும் இனி உங்களின் தளத்திற்கு தங்கு தடையின்றி வருவதற்கு வழி கிடைத்து விட்டது.

    வருகைக்கு நன்றி அண்ணே.

    ReplyDelete
  10. //WiNnY... said...
    உங்கள் எழுத்துக்களுக்கு என் ஆதரவு உண்டு என்றாலும் இந்த பதிவின் பொருள் என்ன என்பது சிந்திக்காமல் நீங்கள் எழுதியது என்று எண்ணுகிறேன்.

    ஆதரவுக்கு ரொம்ப நன்றி சார்,நான் புதுசா எழுதி பழகிக் கொண்டிருக்கும் ஒரு பாமரன் அரசியலைப் பற்றி ஒன்னும் தெரியா விட்டாலும் அங்கு நடக்கும் கூத்தினை கண்டு தினம் வெம்பி எழும் என் மனம் ஏன் அந்நியனா மாறக்கூடாது என்று நினைக்கும், கண்டிப்பா சிந்தித்து எழுதியதுதான் நாட்டின் தலை எழுத்தை சினிமாக் காரர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள் அதில் நடிகைகளின் பங்குதான் அதிகம்.

    //அப்ப நடிகர்களுக்கு வைப்பவர்கள் மண்ணை ஆள பிறந்தவர்களா. அவர்களும் மனிதர்கள் தானே.
    என்னை கேட்டால் ரசிகர்மன்றம் எதற்கு? என்று தான் கூறுவேன்.//

    இந்த விசயத்தில் நானும் உங்கள் கருத்தினை ஏற்கிறேன் ஆனால் எந்த நடிகையாவது தமது ரசிகை மன்றம் சார்பில் ஒரு சில இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ததுண்டா ?
    கிடையவே கிடையாது ரசிகர் மன்றத்தை பொறுத்தவரை விஜையாக இருக்கட்டும் விஜய்காந்தாக இருக்கட்டும் அல்லது ரஜினியாகவே இருக்கட்டும் அவர்கள் மன்றங்கள் மூலமாக ஒரு சில பேர்களுக்கு நல்லது செய்வதை காண முடிகின்றது அந்த வகையில் நான் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.

    //அரசியலுக்கு ஏன் நடிகைகள் வரக்கூடாது //

    ஏற்கனவே ஒன்னு வந்து தமிழ் நாட்டை கெடுத்தது போதாதா ?

    //ஒரு வேசி அரசியலுக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கணும்.//

    எந்த ஒரு வேசியும் மக்களுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கமாட்டாள் காரணம் தாம் கெட்டுப் போனதை தவறாக நினைக்காத அவளின் மனம் தமிழர்களின் பஞ்சத்தையா போக்கப் போகிறது ?

    //ஏதோ வந்து வாசிச்சதால சொல்லனும்னு தோணுச்சு. இந்த கருத்தை வெளியிடவும் மறுக்கவும் முழு உரிமையையும் உங்களுக்கே தருகிறேன்.

    கருத்துக்களை பரிமாரிகொள்வதுதான் மனித இயல்பு அந்த வகையில் உங்கள் கருத்தினை நான் ஏற்கிறேன் சகோ.

    //@ஆமினா, M.G.R என்ற ஆலமரம் மக்களுக்காக வாழ்ந்ததுஎன்பதை சொல்லியாக வேண்டும். அவர் காசு பார்க்க அரசியலுக்கு வரவில்லை. அந்த ஆலமரத்து அடியில் வளர்த்த எந்த ஒரு உயிரும் காசு பார்க்காமல் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

    இதை நானும் வழி மொழிகிறேன்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.....

    ReplyDelete
  11. /ரஹீம் கஸாலி said...
    நல்லதொரு அலசல்//

    மன்னிக்கவும் ரஹீம் உங்கள் தளத்திற்கு வர முடிய வில்லை இனி உரையாடுவோம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. // abul bazar/அபுல் பசர் said...
    அழகான,தெளிவான அலசல்.//

    வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  13. ஆயிஷா said...
    //நடிகைகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சினிமா பைத்தியங்கள் என்றைக்காவது நாட்டின் தியாகிகளையும் நல்ல எழுத்தாளர்களையும் சமூக சேவகரர்களையும் நினைத்துப் பார்த்ததுண்டா ?
    நடிகைகள் அடிக்கும் கூத்தையும் கும்மாளத்தையும் பார்த்தப் பிறகாவது திருந்தட்டும் இந்த ஜென்மங்கள்.//

    நல்ல பகிர்வு.//

    ரொம்ப நன்றி சகோ.....

    ReplyDelete
  14. //தாம் கெட்டுப் போனதை தவறாக நினைக்காத//

    எந்த ஒரு வேசியும் தான் கெட்டு போனதை பற்றி அழாமல் இருந்தது இல்லை. அழுதாலும் அது மாறரது என்பதால் அழாமல் இருக்கலாம்.

    நீங்கள் சொன்னது போல் நடிகைகள் தான் வேசியானதை பெருமையாக நினைகிறார்கள். வேசிகளின் கண்ணீர் யாரும் அறியாத கடவுளுக்கு சமம். ஏன் என்றால் அந்த கடவுள் தராத ஒரு நிம்மதியை அவர்களுக்கு கண்ணீர் தான் கொடுகிறது என்பதை பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன்.

    ReplyDelete
  15. //WiNnY... said...
    //தாம் கெட்டுப் போனதை தவறாக நினைக்காத//

    எந்த ஒரு வேசியும் தான் கெட்டு போனதை பற்றி அழாமல் இருந்தது இல்லை. அழுதாலும் அது மாறரது என்பதால் அழாமல் இருக்கலாம்.

    நீங்கள் சொன்னது போல் நடிகைகள் தான் வேசியானதை பெருமையாக நினைகிறார்கள். வேசிகளின் கண்ணீர் யாரும் அறியாத கடவுளுக்கு சமம். ஏன் என்றால் அந்த கடவுள் தராத ஒரு நிம்மதியை அவர்களுக்கு கண்ணீர் தான் கொடுகிறது என்பதை பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன்//

    கண்டிப்பாக....ஒவ்வொரு விபச்சாரிகளுக்குப் பின்னால் சொல்லமுடியாத சோகம் மறைந்து கிடைக்கின்றது அவைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான் ஒவ்வொரு நல்ல ஆன்மாக்களின் கடமையாக இருக்கவேண்டும் அந்த சோகக் கண்ணீரில் எத்தனை உயிர்கள் வாழ்கிறது என்று சொல்லுவதற்க்கில்லை அதே நேரத்தில் இதை தொழிலா செய்யுபவரை என்ன சொல்ல ?

    நடிகைகளுக்கு வெட்கம் என்ற பொருளுக்கு அர்த்தம் தெரியாத காரணத்தினாலே இது அவர்களுக்கு சர்வ சாதரணமாக போய் விடும் இப்படிப் பட்டவர்கள் ஆட்சி அமைத்தால் ஊருக்கு ஒரு விபச்சார விடுதி அமைத்தாலும் அமைக்கலாம்.

    நன்றி சகோ உங்கள் கருத்திற்கு.

    ReplyDelete
  16. // விஜய் மல்லையாவைக் கட்டிப் பிடித்தாள் கோடிகளில் காசு கிடைக்கும். ரசிகனைக் கட்டிப்பிடித்தாள் என்ன கிடைக்கும்???? //

    உன்னதமான, உண்மையான வரிகள்... எனினும் பிடித்தால் என்னுமிடத்தில் எழுத்துப்பிழை நீக்கவும்...

    ReplyDelete
  17. //Philosophy Prabhakaran said...
    விஜய் மல்லையாவைக் கட்டிப் பிடித்தாள் கோடிகளில் காசு கிடைக்கும். ரசிகனைக் கட்டிப்பிடித்தாள் என்ன கிடைக்கும்???? //

    நீக்கப்பட்டு விட்டது சகோ கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  18. //இந்த நடிகை ரசிகன் எவனையாவது கட்டிப்பிடிப்பாரா?

    விஜய் மல்லையாவைக் கட்டிப் பிடித்தால் கோடிகளில் காசு கிடைக்கும். ரசிகனைக் கட்டிப்பிடித்தால் என்ன கிடைக்கும் ???//
    இப்ப என்ன பிரச்சனை...:))) சொல்லுங்க சகோ..:)) விஜய்மல்லையாவும் சமீராவின் ரசிகன் சகோ..கொஞ்சம் பணக்கார ரசிகன்...ஹ ஹ..:))

    ReplyDelete
  19. ஓகே...ஜோக்ஸ் அப்பார்ட்..நல்லா பதிவு...ஆனால் எல்லாத்துக்குமே ஒரு கிளாமர் தேவைப்படும் நிலைமைக்கு நம்மை சுத்தி இருக்கும் சூழல் அமஞ்சுட்டு வருது சகோ...நடிகை எங்காவது இருந்தால் பார்க்க ஓடும் கும்பல் இன்னும் நம்மை சுத்தி இருந்துட்டே தான் இருக்கு...அந்த weakness ஆ புரிஞ்சுட்டு தான் அரசியலுக்கு நடிகைகள் வராங்க..நடிகை வரும் பொதுகூட்டங்களுக்கு நம்ம பயலுங்க முன்னடியே போயி தேவுடு காப்பான்களா மாட்டாங்களா?...இது தான் அடிப்படை கோளாறு நண்பா...நடிகைய ஆராதிக்கிரதை விட்டுட்டு நம்ம பொழைப்பை பார்த்தாலே...இப்படி ஒரு நிலைமை வராது...!!!

    ReplyDelete
  20. //ஆனந்தி.. said...
    நடிகைய ஆராதிக்கிரதை விட்டுட்டு நம்ம பொழைப்பை பார்த்தாலே...இப்படி ஒரு நிலைமை வராது...!!!

    கண்டிப்பாக சகோ உங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியது ஆனால் பணக்கார ரசிகர்களின் ரசனை வேறு அடிப்படை ரசிகனின் ரசனை வேறு நடிகையின் செருப்பு கிடைத்தால் கூட கோயில் கட்டி கும்பிடுவான் அவன்தான் நம்ம ரசிகன்.

    உங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ...

    ReplyDelete
  21. மக்களுக்காகவே வாழ்ந்த கக்கனும், காமராஜரும் எங்கே? காசுக்காக மாரடிக்கும் இவர்கள் எங்கே? கடைசி படம் அருமை...

    முன்பு ஏதோ ஒரு பத்திரிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்கள்.

    "அம்மணமாக ஆடியவள் அம்மன் வேஷம் போடுகிறாள்"

    ReplyDelete
  22. டக்கால்டி said.
    /"அம்மணமாக ஆடியவள் அம்மன் வேஷம் போடுகிறாள்"//

    நூற்றுக்கு நூறு உண்மை வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  23. //அம்மணமாக ஆடியவள் அம்மன் வேஷம் போடுகிறாள்//

    நடைமுறை உண்மைய சுருக்குன்னு சொல்லிட்டீன்களே.

    பட்டய கேளப்புறிங்க பாஸ்.

    ReplyDelete
  24. //WiNnY... said...
    //அம்மணமாக ஆடியவள் அம்மன் வேஷம் போடுகிறாள்//

    நடைமுறை உண்மைய சுருக்குன்னு சொல்லிட்டீன்களே.

    பட்டய கேளப்புறிங்க பாஸ்.//

    நன்றி தலை இந்த வார்த்தையை நான் சொல்ல வில்லை அண்ணன் டக்கால்டி அவர்கள் சொல்லியுள்ளார்கள் சொன்னாரும் சொன்னார் நல்லா நச்சுன்னு சொல்லிவிட்டார் மனுஷன்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி இனி கிளப்பிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  25. PRESENT .PRESENT PRESENT.
    NALLA PADHIVU.

    ReplyDelete
  26. தெளிவான அலசல். ஆனா பாருங்க அன்னியன் இந்த அரசியலைப்ப்ற்றி தலையும் புரிய மாட்டேங்குது,காலும் புரியமாட்டேங்குதே. உங்க பக்கம் இன்னிக்குதான் வந்தேன்.

    ReplyDelete
  27. //angelin said...
    PRESENT .PRESENT PRESENT.
    NALLA PADHIVU.//

    வாங்க சகோ.....இது ஒன்னும் அந்நியனின் கோர்ட் இல்லை அந்நியனின் வீடுதான்.
    வருகைக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  28. //Lakshmi said...
    தெளிவான அலசல். ஆனா பாருங்க அன்னியன் இந்த அரசியலைப்ப்ற்றி தலையும் புரிய மாட்டேங்குது,காலும் புரியமாட்டேங்குதே. உங்க பக்கம் இன்னிக்குதான் வந்தேன்.//

    வாங்க லக்ஷ்மியம்மா....உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி.
    நீங்கள் சொல்லுறது சரிதான்,உருவம் என ஒன்னு இருந்தால்தான் தலையும் வாலும் இருக்கும் ஆனால் இந்த அரசியல் என்பது.... பச்சோந்தியைப் போன்றது இடத்திற்கு ஏற்றாற்போல் நிறத்தை மாற்றும்.

    ReplyDelete
  29. //பட்டாபட்டி.... said...
    ஹா.ஹா.. சரவெடி பட்டாசு..

    ஆமா தலைவா தீபாவளிக்கு வெடிக்க வேண்டியது கொஞ்சம் லேட்டா போச்சு...வருகைக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  30. அட இங்கு பெருங்கூத்தாக இருக்கிறதே.

    ReplyDelete
  31. //Jaleela Kamal said...
    அட இங்கு பெருங்கூத்தாக இருக்கிறதே.//

    ஹா.ஹா.. சரவெடி பட்டாசு..

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  32. வணக்கம் உங்களின் இடுக்கைக்கு அடிக்கடி வரவேண்டும் போல் தெரிகிறது இந்த சமுகத்தின் அவலங்களை துல்லியமாக தோலுரித்து காட்டுகின்றீர் அரசியல் தொடங்கி சாக்கடையான சினிமாவையும் நீவீர் விட்டுவைக்கவில்லை பாராட்ட வேண்டிய சேதிகள் பாராட்டுகள் . நன்றிகள் .

    ReplyDelete
  33. //polurdhayanithi said...
    வணக்கம் உங்களின் இடுக்கைக்கு அடிக்கடி வரவேண்டும் போல் தெரிகிறது இந்த சமுகத்தின் அவலங்களை துல்லியமாக தோலுரித்து காட்டுகின்றீர் அரசியல் தொடங்கி சாக்கடையான சினிமாவையும் நீவீர் விட்டுவைக்கவில்லை பாராட்ட வேண்டிய சேதிகள் பாராட்டுகள் . நன்றிகள் .//

    வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  34. விடுங்கள் நண்பரே... எல்லாம் தெரிந்தது தானே..

    ReplyDelete