Wednesday, January 19, 2011

வெள்ளை நீக்ரோ !!!





நீக்ரோக்கள் தங்களை தாழ்வாகவே கருதினர். ஏன் என்றால் தாம் கருப்பாக இருப்பதினால் பிறர் கண்களுக்கு நாம் அசிங்கமாக தெரிகிரோமே என்ற மன வருத்தமும் கவலையும்தான் அவர்களை அப்படி நினைக்க தோன்றியது,அது மட்டுமில்லாது வெள்ளையரின் கலரைப் பார்த்தும் பொறாமையும் கூட அவர்களுக்கு,எப்படியாவது இவர்களைப் போன்று நாமும் மாறிவிட வேண்டும் என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஒரு முறை ஒரு மருந்து விற்பனைக்கு வந்தது. அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது இதை உங்கள் உடலில் பூசினால் நீங்கள் வெண்நிறமாவீர்கள். இதை உங்கள் முடியில் பூசினால் உங்கள் சுருண்ட முடி நீண்டு வெள்ளைகாரனின் முடி போல் வரும் என்று. இதை பார்த்த பலரும் அதை வாங்கி முடியிலும் உடம்பிலும் பூசிக் கொண்டார்கள். பூசியது தான் தாமதம் எல்லோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள.....

காரணம் அவர்கள் மருந்து என ஏமாந்து வாங்கியது ஒரு வெடி பொருளுக்கு போடும் ஒரு வகையான வெடிமருந்து. எல்லோரும் வெள்ளையரை போல ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை பூசிக் கொண்டார்கள்,நிலை அவர்களின் உடலும் முடியும். எரிந்து அசிங்கமாக விகாரமாக மாறியது.

இந்த நீக்ரோவின் நிலைதான் நம்மில் பல இளைஞர்களுக்கு,அவர்கள் இயல்பிலே அழகாக இருப்பார்கள். ஆனால் அது அவர்களுக்கு சந்தோசத்தை கொடுப்பதில்லை,அவர்களுக்க சந்தோசம் எப்போதென்றால்,நடிகர்கள் பிழைப்பிற்காக அவர்கள் ஹேர் ஸ்டைலை கலர் கலராக கழுதையைப் போலவும்,குரங்கைப் போலவும் மாற்றிக் கொள்வார்கள்,பார்க்கவே அசிங்கமாக இருக்கும் அந்த ஸ்டைலுதான் நம்ம இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும்.

அதே மாதுறியே தம் ஸ்டைலையும் மாற்றிக் கொள்வார்கள்,அது போலத்தான் தற்போது காலேஜில் படித்து வரும் சில அம்மணிகள் கூட தம் தலையில் பொடுகு இருந்தும் தலையை பரட்டு..பரட்டுன்னு சொறிஞ்சாலும்..நடிகைகளின் ஹேர் ஸ்டைலில் அப்படியே முடியை தோள்வரை முறித்துக் கொண்டு நடப்பதை பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கின்றது.

நீக்ரோக்கள் வெள்ளைகாரனைப் போல் இருப்பதுதான் பெருமை என்று கருதியது போல்,இவர்கள் நடிகர் கூட்டத்தை போல இருக்க நினைப்பது வெட்க்க படகூடிய விஷயம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் என்ன ?

மனதை பக்குவப் படுத்துங்கள்,சினிமாவை தூரமா தள்ளி வையுங்கள்,நடிக நடிகைகளை கனவிலும்கூட நினைக்காதிர்கள்,உங்களின் உள்ளுணர்வை கட்டுப் படுத்துங்கள்,நடிகர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளாமல்,சாக்ரட்டிஸ்,அப்துல் கலாம்,பில்கேட்ஸ்,அம்பானி மற்றும் டாடா பிர்லா இவர்களை முன்னிறுத்திஉங்களின் பயணம் இருக்கட்டும் .

அறிவின் உச்சிக்கும் அழகின் உச்சிக்கும் போட்டி என்று வந்தால் அறிவை தேர்ந்தெடுங்கள்.
காரணம் அறிவென்பது நமது உயிர் இருக்கும் வரை செழி செழிப்பாகவே இருக்கும்,அழகு என்பது வயதேர்க்கேற்றவாறு மங்கி கொண்டே போகும்,அழகை விட அறிவு ஆயிரம் மடங்கு மேன்மையானது.அது போல மாடு மாதுரி உழைக்கிறதை விட புத்திசாலியாக உழைத்தால் நமது இலக்கை சிரமின்றி நெருங்கிடலாம்,நாம் பிறரின் அனுபவங்கள்மூலமாக பல பாடங்களை தெரிந்து கொள்ளலாம் இலவசமாக,ஆனால் அவரோ பல மலைகளை கஷ்ட்டத்துடன் கடந்து வந்திருப்பார் இந்நிலையை அடைவதற்கு.கொடுக்கலும் வாங்கலும் இருந்தால்தான் வாழ்க்கை,அது இல்லையேல் வாழ்வதில் அர்த்தம் இல்லை.

                   நமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்வோம் ! 
                   நமக்கு தெரியாததை பிறரிடமிருந்து பெறுவோம் !





நாமளும் வெள்ளையாவதர்க்கு ஏதாவது போட்டிருக்கா என்று பார்ப்போம்.

28 comments:

  1. 'அறிவை மதித்து, அழகை அலட்சியப்படுத்துங்கள்'
    என்ற கருத்தை நச்சென்று சொன்னீர்கள், நன்று!

    ReplyDelete
  2. //NIZAMUDEEN said...
    'அறிவை மதித்து, அழகை அலட்சியப்படுத்துங்கள்'
    என்ற கருத்தை நச்சென்று சொன்னீர்கள், நன்று!///


    ரொம்ப நன்றி அண்ணே.

    ReplyDelete
  3. ஹேர் ஸ்டைல் பத்தி நல்லா சொன்னீங்க சகோ

    சேட் பீடா மெண்டு அந்த எச்சிலை துப்பியது மாதிரி தான் இப்ப இருக்குற இளைஞர்கள் தலையை பாக்கும் போது தோணூது

    ReplyDelete
  4. என்னைக் கேட்டால் கறுப்பு தான் கற்பூரம் என்று சொல்வேன்... கறுப்பாக இருப்பதே ஒருவகையில் அழகுதான்...

    ReplyDelete
  5. //ஆமினா said...
    ஹேர் ஸ்டைல் பத்தி நல்லா சொன்னீங்க சகோ

    சேட் பீடா மெண்டு அந்த எச்சிலை துப்பியது மாதிரி தான் இப்ப இருக்குற இளைஞர்கள் தலையை பாக்கும் போது தோணூது //

    கருத்திற்கு ரொம்ப நன்றி சகோ எல்லா இளைஞர்களும் இல்லை சில இளைஞர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்,சேட் துப்பும் பீடாவில் இருந்துதான் கொடிய வைரஸ் பரவுது.

    ReplyDelete
  6. //Philosophy Prabhakaran said...
    என்னைக் கேட்டால் கறுப்பு தான் கற்பூரம் என்று சொல்வேன்... கறுப்பாக இருப்பதே ஒருவகையில் அழகுதான்...//

    எஸ் பாஸ்... கருப்புத்தான் நமக்கு பிடிச்ச கலருனு சொல்லுங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி !

    ReplyDelete
  7. I seriously condemn this post. You are offending them pretty badly. First of all "negro" is an offensive term. Blacks are proud of being black as far as I know!

    ReplyDelete
  8. Welcome Mr Varun it was very kind of you to suggested here i thank to you.

    Actually i am very keen on doing friendship each others i have wrote here about the Negro funnily not serious,once more thanks to you.
    If there has been any mistake excuse this matter.
    As far as i know negros all are very good people you are right.

    I make story for our teens knowledge.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

    சகோ, வேறு போட்டோ கிடைக்கவில்லையா?
    போட்டோ பார்த்தாலே பயந்து விடுவார்கள்.

    //அம்மணிகள் கூட தம் தலையில் பொடுகு இருந்தும் தலையை பரட்டு..பரட்டுன்னு சொறிஞ்சாலும்..நடிகைகளின் ஹேர் ஸ்டைலில் அப்படியே முடியை தோள்வரை முறித்துக் கொண்டு நடப்பதை பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கின்றது.//

    நல்லாத்தான் கவனித்து எழுதி இருக்கீர்கள் சகோ.


    //நாமளும் வெள்ளையாவதர்க்கு ஏதாவது போட்டிருக்கா என்று பார்ப்போம்.//

    சிவாஜியில் ரஜினியை பின்பற்றலாமே சகோ.

    ReplyDelete
  10. வெள்ளைக்காரங்கல்லாம் கலர்மாற எண்ணைதடவிண்டு
    வெய்யில்ல சன் பாதெடுக்கராங்க, இவங்க இப்படி. எல்லாருக்குமே கலர் காம்ப்ளெக்ஸ் இருக்கும்போலதான் இருக்கு.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. //ஆயிஷா said...
    அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

    சகோ, வேறு போட்டோ கிடைக்கவில்லையா?
    போட்டோ பார்த்தாலே பயந்து விடுவார்கள்.

    வ அலைக்கும் வஸ்ஸலாம் (ரஹ்)
    கூகிளில் இந்த போட்டோதான் கிடைச்சது சகோ....

    //நல்லாத்தான் கவனித்து எழுதி இருக்கீர்கள் சகோ.//

    படிக்கும்போது கண்ணில் பட்டதை நினைத்து எழுதியது.

    //சிவாஜியில் ரஜினியை பின்பற்றலாமே சகோ.//

    நான் இல்லை சகோ...புறா பேப்பர் படிக்குது பாருங்க அதை சொன்னேன்,நமக்கு இந்தக் கலரே போதும்

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி !

    ReplyDelete
  13. //Lakshmi said...
    வெள்ளைக்காரங்கல்லாம் கலர்மாற எண்ணைதடவிண்டு
    வெய்யில்ல சன் பாதெடுக்கராங்க, இவங்க இப்படி. எல்லாருக்குமே கலர் காம்ப்ளெக்ஸ் இருக்கும்போலதான் இருக்கு.//

    ஆமாம்மா நீங்கள் சொல்றது சரிதான்,நம்மலாம் (நீங்கள் இல்லை) சிகப்பா போவதற்கு ஏசியில் இருக்கோம் வெள்ளைக்காரர்கள் கருப்பா போவதற்கு வெயிலில் இருக்கிறார்கள்.இதுதான் தீராத விழையாட்டுப் பிள்ளையோ ?
    நன்றிமா !

    ReplyDelete
  14. //நடிகர் கூட்டத்தை போல இருக்க நினைப்பது வெட்க்க படகூடிய விஷயம்.//
    உண்மை எதற்க்கெடுத்தாலும் சினிமாவையும், அதன் நடிகர்களையும் உதாரணமாக கொள்வதே இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது.

    ReplyDelete
  15. இயற்கையாக இருப்பது தான் நல்லது. இதில் கறுப்பென்ன சிவப்பென்ன...

    ReplyDelete
  16. உங்களிடம் ஒரு கேள்வி, படத்தை தேர்வு செய்து விட்டு இந்த பதிவை எழுதினீர்களா? இல்லை பதிவு எழுதி விட்டு படத்தை தேர்வு செய்தீர்களா?

    ReplyDelete
  17. ஆஹா..என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டுடன் ஒரு பதிவு.பிடியுங்கள் பெரிய பூங்கொத்தை.பதிவை படிக்கும் பொழுது உண்மையில் மிக்க சந்தொஷமாக உள்ளது.இளைய தலை முறை இதில் இருந்து மீட்சி பெற வேண்டும்.//அறிவின் உச்சிக்கும் அழகின் உச்சிக்கும் போட்டி என்று வந்தால் அறிவை தேர்ந்தெடுங்கள்.
    காரணம் அறிவென்பது நமது உயிர் இருக்கும் வரை செழி செழிப்பாகவே இருக்கும்,அழகு என்பது வயதேர்க்கேற்றவாறு மங்கி கொண்டே போகும்// அருமை வரிகள்.அழகிய பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  18. //பாரத்... பாரதி... said...
    உங்களிடம் ஒரு கேள்வி, படத்தை தேர்வு செய்து விட்டு இந்த பதிவை எழுதினீர்களா? இல்லை பதிவு எழுதி விட்டு படத்தை தேர்வு செய்தீர்களா?//

    வாங்க நந்தினி..இப்படிலாம் நீங்கள் கேள்வி கேட்ப்பிர்கள் என்று எனக்கு தெரியாது,இளைஞர்களைப் பற்றி எழுதனும்னு தோனுச்சு எதைப் பற்றி எழுதலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கையிலே சரி கருப்பு இளைஞர்களைப் பற்றி எழுதலாம்னு தீர்மானுச்சு எழுதபோற சமயத்தில் கை இருப்பு போட்டோ இல்லை,கருப்பு இளைஞர் போட்டோ வேணுமே என்று நீக்ரோ ஹேர் ஸ்டைல் இமேஜுனு கூகிள் தாயின் காதுலே உரக்க கத்தினேன் அவள் என்னடானா என்னிடம் கோவிச்சுக்கிட்டு எடுத்துக்கே சனியனே என்று இந்த சனியனை என் தலையில் கட்டி விட்டது.

    இதுதாமா நடந்தது இந்த பதிவு போடறதுக்கு,எப்போவுமே பதிவு எழுதுவதற்கு முன்பே போட்டோவை செலக்ட் பண்ணி வைத்துக் கொண்டுதான் ஆரம்பிப்பேன்.

    நன்றி வருகைக்கும் மூன்று கருத்திற்கும்.

    ReplyDelete
  19. //ஸாதிகா said...
    ஆஹா..என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டுடன் ஒரு பதிவு.பிடியுங்கள் பெரிய பூங்கொத்தை.பதிவை படிக்கும் பொழுது உண்மையில் மிக்க சந்தொஷமாக உள்ளது.

    நன்றிக்கா ...பூங்கொத்தை அப்படியே பார்சலில் அனுப்பவும் (பொக்கை) மையிலேயே ஒரு பதிவைப் போட்டு எல்லோரையும் பொம்மை போல ஆட வைத்து விட்டிர்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

    ReplyDelete
  20. நிறவெறி தான் அப்படி கருப்பர்களை செய்ய சொன்னது அந்நியன்....பிரிட்டன் இல் வெள்ளையர்களுக்கு என்று கழிவறையும்,கறுப்பர்களுக்கு ஒரு கழிவறையும் இருக்குமாம்...வாஷ் பாஷின் கூட வெள்ளையர்கள் கழுவிய நீர் அப்டியே வேறு பைப் வழியாய் போயி அதை கருப்பர்கள் உபயோக படுத்தும் கொடுமையும் நடந்து இருக்கிறது...இதை புகை படமாகவே விகடனில் பார்த்து இருக்கிறேன்...சமூதாய புறக்கணிப்பு தான் இப்படி எல்லாம் நம்மை மனசிதைவுக்கு ஆக்குத்து அந்நியன்..யாருமே வேணும்னே பண்றது இல்லை தங்களை அழகு படுத்த...நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கட்டும் என்ற ஆசைகள் தான்...மத்தபடி சில அழகூட்டல் வயசு காரணம்...maturity வர வர இதெல்லாமே funny ஆ யோசிப்போம்...like us :))

    ReplyDelete
  21. வருகைக்கும் உங்கள் அன்பான கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ..ஆனந்தி.
    கறுப்பர்களின் நிலைமை வேதனைக்குரியதே (நீக்ரோ)அவர்கள் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல,அதை நானும் அறிவேன் நமது இளைஞர்களின் நாகரிகம் என்று செய்யும் கூத்தினை பதிவதற்காக நீக்ரோ மனிதனை உதாரணம் படுத்தினேன்.
    இது எல்லா நீக்ரோக்களுக்கும் பொருந்தாது நம்மில் எத்தனை கெட்டவர்கள் இருக்கார்களோ அது போல அவர்களிடத்தும் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
    நான் பல இணைய தளங்களை சுற்றி வருபவன் ஒரு ஆங்கில தளத்தில் இந்தியர்களை கேவலாமாக சித்தரித்து காமடி செய்யும் ஒரு கருப்பு மனிதரை பார்த்துதான் எனக்கு கோபம் வந்தது அவருக்கு ஒரு சவுக்கடி கொடுத்துட்டுதான் இந்த பதிவிற்கு கருப்பரை தேர்வு செய்து ஒரு கதை எழுதினேன் நம் இளைஞர்களுக்கு.

    ரொம்ப நன்றி !

    ReplyDelete
  22. nalla padhivu.
    i wrote two comments . i tried t up load a profile picture both were deleted accidentally .
    arivu thaan mukkiyam .idhai azhagaga solli irukkeenga.

    ReplyDelete
  23. அருமையான பதிவு.. எது எப்படியோ, ஆசையை அடக்கிக் கொண்டு வாழ்வது தவறு. வாழ்க்கையை அனுபவியுங்கள்.. உங்களுக்குள் சந்தோஷமாக இருங்கள்.. வெளித்தோற்றம் அழகாக இருக்கும்..

    என்னுடைய நண்பன் ஒருவன் மிக சுமாராகத்தான் இருப்பான்.. ஆனால் தான் எப்போதும் அழகாக இருப்பதாகவே சொல்லிக் கொள்வான்.. நாங்கள் சிரித்துகொள்வோம்..ஆனால் அழகானவர்களைக் காணும்போது, ஒருவித தாழ்வு மனப்பான்மை வருவதுண்டு..ஆனால் அது அவனுக்கு இல்லவே இல்லை. அவனுடைய உள்மனது சொல்வதை அவன் கேட்டதால், எங்கும் அவன் அழகாகவே இருந்தான். அழகு என்பது மற்றவர்கள் சொல்லி நாம் உணர்வது அல்ல.. அது நமக்குள் நாமே உணர்ந்து கொள்வது..

    நன்றி..

    ReplyDelete
  24. angelin said...
    nalla padhivu.
    i wrote two comments . i tried t up load a profile picture both were deleted accidentally .
    arivu thaan mukkiyam .idhai azhagaga solli irukkeenga.//

    வருகைக்கும் உங்கள் அன்பான கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ..இயற்கையாக இருப்பது தான் நல்லது.

    ReplyDelete
  25. சாமக்கோடங்கி said...
    அழகு என்பது மற்றவர்கள் சொல்லி நாம் உணர்வது அல்ல.. அது நமக்குள் நாமே உணர்ந்து கொள்வது..
    ---------------------------------------------

    அருமையான எடுத்துக்காட்டு....பிடியுங்கள் பெரிய பூங்கொத்தை.

    வருகைக்கு ரொம்ப நன்றி Brother

    ReplyDelete
  26. //போளூர் தயாநிதி said...
    ulam kanintha parattugal nalla ஆக்கம்//

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி அய்யா.

    ReplyDelete