Monday, February 28, 2011

நான் வசிக்கும் தீவு




எத்தனையோ நண்பர்கள் துபாயில் இருந்தாலும் சரி மற்றும் பிற ஊர்களிலும் இருந்தாலும் சரி நேரில் பார்ப்பதற்கு நேரமின்மைக் காரணத்தால் யாரையும் சந்திக்க முடிவதில்லை.

இந்த தீவில் இருந்து அபுதாபிக்கு தன்னிச்சையாக யாரும் வந்து விட முடியாது அது போல அபு தாபியிலிருந்தோ அல்லது பிற நாட்டிலிருந்தோ எவரும் உள்ளே நுழைந்து விட முடியாது இப்பேர்ப் பட்ட சூழலில் நாங்கள் இங்கு வாழ்கிறோம்,இங்கு குடும்பமோ அல்லது பிற மக்களோ கிடையாது,எல்லோருமே வேலைப் பார்க்கும் ஊழியர்களே.

இங்கு மொத்தம் முப்பதற்கு மேற்ப்பட்ட கம்பெனிகள் இருக்கு அவை ஒவ்வொன்றும் ஜாட்கோ ( ZADCO ) என்ற எண்னைக் கம்பெனியின் கட்டுப் பாட்டில் இயங்குகின்றது,எண்ணை வளம் ஆராய் ஓடுகிறது இந்த தீவில்,இங்கு எடுக்கப்படும் எண்ணைகள் வெளி நாட்டிற்கு கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்யப் படுகின்றது,அதில் நமது தாய் நாட்டின் கப்பல்களும் வந்து போவது நமக்கு பெருமையே.

இந்த தீவானாது சுமார் ஆயிரம் ஊழியர்களை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது இங்கு போட்டி, பொறாமை,குடி ,கெட்டஎண்ணம்,தகாத வெட்டிப் பேச்சு எதுவும் காணக்கிடைக்காது காரணம், வேலையை விட இங்குள்ள ஊழியர்களுக்கு நல்ல புத்திமதிகளும் நற்க்குனங்களும் மனிதாபிமானம் முறையில் செயல் படுவதற்கு பயிர்ச்சிகளும் கொடுக்கப் படுகின்றன,ஆகையால் இங்குள்ளவர்களின் எண்ணங்கள் நூற்றுக்கு தொண்ணுறு சதவிகிதம் நல்லவையாகவே இருக்கும்.

இங்கு சாதாரண ஊழியர் மாதம் ஊதியமாக ஐயாயிரம் திர்கத்திலிருந்து ஏழாயிரம் திர்கம் வரை பெறுகின்றார்,மூன்று மாத இடை வெளிக்குப் பிறகு ஒரு மாத லீவுடன்.

டெக்னிசியன் என்றழைக்கப்படும் ஊழியர் மாதம் இருபத்தோராயிரம் திர்கம் சம்பளத்துடன் நாற்ப்பத்தி ஐந்து நாள் வேலைக்குப் பிறகு ஒரு மாத விடுமுறையும் செல்கிறார்.

சீனியர் டெக்னிசியன் என்பவர் மாதம் இருபத்தி மூன்றாயிரம் சம்பளத்துடன் ஒவ்வொரு மாதமும் விடுமுறை செல்கிறார்.( ஒரு மாதம் வேலை,ஒரு மாதம் விடுமுறை )

இஞ்சினியர் என்பவர் இருபத்தி ஐந்து ஆயிரம் திர்கம் சம்பளத்துடன் பதினான்கு நாள் வேலை பதினான்கு நாள் விடுமுறை என்ற லெவலில் இருக்கின்றார்.

இன்னும் எண்ணற்ற கம்பெனிகள் அவர்கள் வேலைக்கு ஏற்றவாறு தொழிலாளர்களுக்கு ஊதியமும் கொடுத்து மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு மாதம் விடுமுறையும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த தீவு அபு தாபிக்கு சொந்தமானது,இங்கு ஐநூறு ராணுவத்தினர் முப்படை தளபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

இது தாங்க எங்களின் வாழ்க்கை.

ஊருக்கு போகும்போது அப்படியே காரின் கண்ணாடி வழிYE அபுதாபியைப் பார்த்து விட்டு ஊருக்கு பறந்திடுவோம் அதுனாலே யாரையும் வந்து
சந்திப்பதில் நேரம் இருக்காது அதுனாலே கோவித்துக் கொள்ளவேண்டாம். 


சிலப் பதிவர் நண்பர்கள் நேரில் அழைத்ததின் பேரில் இதை எழுதுகிறேன்.





39 comments:

  1. zirku island paarththaasu, piraku vareen

    ReplyDelete
  2. நல்ல அருமையான பகிர்வு,உங்க உலகத்தையும் நாங்க தெரிந்து கொண்டோம்,பகிர்வுக்கு மகிழ்ச்சி சகோ.

    ReplyDelete
  3. நீங்கள் பணிபுரியும் பகுதியை அருமையாக விளக்கியுள்ளிர்கள்.

    ReplyDelete
  4. //Jaleela Kamal said...
    zirku island paarththaasu, piraku vareen //

    பார்த்ததற்கு நன்றி சகோ யூ ஆர் வெல்கம்.

    ReplyDelete
  5. //asiya omar said...
    நல்ல அருமையான பகிர்வு,உங்க உலகத்தையும் நாங்க தெரிந்து கொண்டோம்,பகிர்வுக்கு மகிழ்ச்சி சகோ.

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ...நன்றி சகோ.

    ReplyDelete
  6. /இளம் தூயவன் said...
    நீங்கள் பணிபுரியும் பகுதியை அருமையாக விளக்கியுள்ளிர்கள்.//

    விரிவா விளக்கனும்னு என்றால் பெரிய பதிவா போடணும் அதான் சிறிய லெவலில் போட்டேன் வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  7. இக்கரைக்கு அக்கரை பச்சை ..!! கவலை வேண்டாம் :-))

    ReplyDelete
  8. அந்நியன்...இப்படி ஒரு தீவு இருப்பதே இந்த பதிவில் தான் தெரிஞ்சுகிட்டேன்...அந்த வீடியோ மற்றும் நீங்கள் விளக்கிய விஷயங்கள் ஆச்சர்யமா இருந்தது...

    ReplyDelete
  9. //வேலையை விட இங்குள்ள ஊழியர்களுக்கு நல்ல புத்திமதிகளும் நற்க்குனங்களும் மனிதாபிமானம் முறையில் செயல் படுவதற்கு பயிர்ச்சிகளும் கொடுக்கப் படுகின்றன,ஆகையால் இங்குள்ளவர்களின் எண்ணங்கள் நூற்றுக்கு தொண்ணுறு சதவிகிதம் நல்லவையாகவே இருக்கும்//

    படிக்க ரொம்ப நல்ல இருந்தது

    ReplyDelete
  10. ஜாட்கோ பற்றியும் தெரிந்து கொண்டேன்

    வீடியோ படஙக்ள் அருமையாக இருக்கு

    ReplyDelete
  11. அங்கு இப்படி இருப்பதே நல்லது, கொஞ்சம் காசாவாது சேமிக்கலாம்//
    எப்படியே முன்று மாதம் ஒரு முறை விடுமுறை கிடைக்குது இல்லையா? நல்லது

    இங்கு உள்ள மக்காஸ் பிலிப்பைனிகளாலே வீனாஅ போராங்க

    ReplyDelete
  12. ஸலாம் சகோ அந்நியன்...ம்ம்,ஆமா உங்க பேர் என்ன உங்கள அந்நியன்ன்னு கூப்பிட விரும்பல...அதான்.

    அப்ரோ இங்க அமீரகத்துலதா இருக்கீங்களா சகோ..

    பரவாயில்ல..அடிக்கடி லீவும்,மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது நல்ல வருமானமும்,நல்லொழுக்க பயிற்சியும்,என சகலமும் இருக்கிறது.இருந்தாலும்,நினைத்தவுடன்,நினைத்தவர்களை சந்திக்க முடியாமல் போவது கஷ்டம் தான்..

    அல்லாஹ் உங்களுக்கு அதில் நல்லதை வைத்துள்ளான்..அவ்வளவுதான் சகோ...

    @jaleela Kamal
    /இங்கு உள்ள மக்காஸ் பிலிப்பைனிகளாலே வீனாஅ போராங்க/

    அக்கா இப்டி எல்லாத்தையும் ஒன்னா நிக்க வச்சுட்டீங்களே...நாங்கள்ளா இருக்கோம்ல...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  13. பகிர்வு அருமை.... காணொளி கலக்கல்.

    ReplyDelete
  14. //ஜெய்லானி said...
    இக்கரைக்கு அக்கரை பச்சை ..!! கவலை வேண்டாம் :-))

    ஓகே..பாஸ்.

    வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. //ஆனந்தி.. said...
    அந்நியன்...இப்படி ஒரு தீவு இருப்பதே இந்த பதிவில் தான் தெரிஞ்சுகிட்டேன்...அந்த வீடியோ மற்றும் நீங்கள் விளக்கிய விஷயங்கள் ஆச்சர்யமா இருந்தது...//

    அப்படியா சகோ..ரொம்ப நன்றி,பாலைவனமாக இருந்த அரபு பூமியை சோலைவனமாக்கிய பெருமை இந்த தீவுக்கே பொருந்தும் எல்லாம் படைத்தவனின் செயல்.

    வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. //Jaleela Kamal said...
    //வேலையை விட இங்குள்ள ஊழியர்களுக்கு நல்ல புத்திமதிகளும் நற்க்குனங்களும் மனிதாபிமானம் முறையில் செயல் படுவதற்கு பயிர்ச்சிகளும் கொடுக்கப் படுகின்றன,ஆகையால் இங்குள்ளவர்களின் எண்ணங்கள் நூற்றுக்கு தொண்ணுறு சதவிகிதம் நல்லவையாகவே இருக்கும்//

    படிக்க ரொம்ப நல்ல இருந்தது//

    நன்றிக்கா உங்கள் கருத்திற்கு.

    ஜாட்கோ என்பது அட்னாக் (ADNOC ) நிறுவனத்தின் கிளையே,அபுதாபியின் இருதயமே அட்னோக் என்றழைக்கப்படும் கம்பெனிதான்.

    ReplyDelete
  17. //Jaleela Kamal said...
    அங்கு இப்படி இருப்பதே நல்லது, கொஞ்சம் காசாவாது சேமிக்கலாம்//
    எப்படியே முன்று மாதம் ஒரு முறை விடுமுறை கிடைக்குது இல்லையா? நல்லது

    இங்கு உள்ள மக்காஸ் பிலிப்பைனிகளாலே வீனாஅ போராங்க//

    ஆமா நீங்கள் சொல்லுவது உண்மைதான் காசை மிச்சப் படுத்தலாம் ...ஆமா...அது என்ன பிலிப்பென்ஸ் ? மனசுதான் காரணம் பார்த்தியலா ராஜின் அண்ணன் கோவித்துக் கொள்கிறார்.

    கருத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  18. //RAZIN ABDUL RAHMAN said...
    ஸலாம் சகோ அந்நியன்...ம்ம்,ஆமா உங்க பேர் என்ன உங்கள அந்நியன்ன்னு கூப்பிட விரும்பல...அதான்.

    அப்ரோ இங்க அமீரகத்துலதா இருக்கீங்களா சகோ..

    பரவாயில்ல..அடிக்கடி லீவும்,மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது நல்ல வருமானமும்,நல்லொழுக்க பயிற்சியும்,என சகலமும் இருக்கிறது.இருந்தாலும்,நினைத்தவுடன்,நினைத்தவர்களை சந்திக்க முடியாமல் போவது கஷ்டம் தான்..

    அல்லாஹ் உங்களுக்கு அதில் நல்லதை வைத்துள்ளான்..அவ்வளவுதான் சகோ...


    வ அலைக்கும் வஸ்ஸலாம் என் பேரு முஹம்மது அய்யூப்.கே

    அல்லாஹ் எனக்கு நல்ல பாக்கியத்தை தந்தமைக்காக நான் என்றும் அவனை மறக்க மாட்டேன் சகோ.
    அடிக்கடி ஊர்ப் பயணமும் மனதிற்கு சந்தோசம் தருகின்றது.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  19. //சி.கருணாகரசு said...
    பகிர்வு அருமை.... காணொளி கலக்கல்.//

    ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  20. அருமையா இருந்தது .
    எங்களையும் உங்கள் அழகிய தீவுக்கு கூட்டிட்டு போனதுக்கு நன்றி.இந்த மாதிரி ஒரு தீவு இருப்பது இப்ப தான் தெரியும் .

    ReplyDelete
  21. //angelin said...
    அருமையா இருந்தது .
    எங்களையும் உங்கள் அழகிய தீவுக்கு கூட்டிட்டு போனதுக்கு நன்றி.இந்த மாதிரி ஒரு தீவு இருப்பது இப்ப தான் தெரியும் .//

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  22. போட்டி, பொறாமை,குடி ,கெட்டஎண்ணம்,தகாத வெட்டிப் பேச்சு இல்லாத அமைதியான சூழல், நிறைவான வருமானம்
    ப்டிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அருமையான பதிவு. ஒரு ரம்மியமான சூழ்லுக்கு போய் வந்த திருப்தி!

    ReplyDelete
  23. உங்க உலகம் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. இதுபோல ஒரு தீவு இருக்குன்னே உங்கபதிவு பார்த்தபிறகுதான் வந்தது. ஏங்க, ஃபேமிலிஅகாமடேஷன் கிடையாதா?

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலைக்கும்,
    சகோ.முஹம்மது அய்யூப்,

    அந்த வீடியோ பார்த்தேன். நன்றாக இருந்தது. நல்ல பகிர்வு. முதல் முறை என் பிளாக்கில் நீங்க வரும்போதே... 'இதென்ன புதுஸா ஒரு தீவுன்னு' அதை பற்றி அறிந்து கொண்டேன். இப்போது மேலும் பல அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி.

    (...if wife and children not there that is known as jail)

    A first class sophisticated jail for good people with enough 'must be given' compensations from managements.

    இது போன்ற 'நேர்மையான முதலாளித்துவம்' வாழ்க.

    "கொலம்பஸ்...கொலம்பஸ்... முடிஞ்சாச்சு லீவு...
    வேலைபார்க்க கண்டு பிடிச்சு கொண்டா ஒரு தீவு..."

    ReplyDelete
  25. /மு.ஜபருல்லாஹ் said...
    போட்டி, பொறாமை,குடி ,கெட்டஎண்ணம்,தகாத வெட்டிப் பேச்சு இல்லாத அமைதியான சூழல், நிறைவான வருமானம்
    ப்டிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அருமையான பதிவு. ஒரு ரம்மியமான சூழ்லுக்கு போய் வந்த திருப்தி!

    வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  26. //Lakshmi said...
    உங்க உலகம் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. இதுபோல ஒரு தீவு இருக்குன்னே உங்கபதிவு பார்த்தபிறகுதான் வந்தது. ஏங்க, ஃபேமிலிஅகாமடேஷன் கிடையாதா?//

    தெரிந்து கொண்டதைப் பற்றி சந்தோஷம்.

    இங்கு வேலைப் பார்க்கும் நபர்களும் ரானுவமும்தான் இருக்கின்றதுமா,குடும்பம் இங்கு அனுமதி இல்லை.

    வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் நன்றிமா.

    ReplyDelete
  27. //முஹம்மத் ஆஷிக் said...
    அஸ்ஸலாமு அலைக்கும்,
    சகோ.முஹம்மது அய்யூப்,

    அந்த வீடியோ பார்த்தேன். நன்றாக இருந்தது. நல்ல பகிர்வு. முதல் முறை என் பிளாக்கில் நீங்க வரும்போதே... 'இதென்ன புதுஸா ஒரு தீவுன்னு' அதை பற்றி அறிந்து கொண்டேன். இப்போது மேலும் பல அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி.

    (...if wife and children not there that is known as jail)

    A first class sophisticated jail for good people with enough 'must be given' compensations from managements.

    இது போன்ற 'நேர்மையான முதலாளித்துவம்' வாழ்க.

    "கொலம்பஸ்...கொலம்பஸ்... முடிஞ்சாச்சு லீவு...
    வேலைபார்க்க கண்டு பிடிச்சு கொண்டா ஒரு தீவு..."
    March 2, 2011 7:45 AM //


    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

    அதற்குத்தானே நாற்ப்பத்தி ஐந்து நாள் கழித்து விடுமுறை தருகிறார்கள்,மூன்று மாதம் கழித்தும் விடுமுறை தருகிறார்கள் குடும்பங்களை காண்பதற்கு.

    அபுதாபி இந்த தீவை வைத்துதான் முன்னேறியது 1978ல் பிறகு வந்ததுதான் மற்ற தீவுகள்.

    வருகைக்கும் அன்பு கருத்திற்கும் நன்றி ஆஷிக்.

    ReplyDelete
  28. நல்ல அருமையான பகிர்வு,உங்க உலகத்தையும் நாங்க தெரிந்து கொண்டோம்,ஒரு ரம்மியமான சூழ்லுக்கு போய் வந்த திருப்தி!

    ReplyDelete
  29. கிணற்று தவளை போல இருந்த என்னை போன்றவர்களுக்கு உங்கள் உலகம் புதிது.

    ReplyDelete
  30. தாமதமாக பதில் தருவதற்கு மனம் பொறுக்கவும்.

    //போளூர் தயாநிதி said...
    நல்ல அருமையான பகிர்வு,உங்க உலகத்தையும் நாங்க தெரிந்து கொண்டோம்,ஒரு ரம்மியமான சூழ்லுக்கு போய் வந்த திருப்தி!//

    ரொம்ப நன்றி அய்யா.

    ReplyDelete
  31. தாமதமாக பதில் தருவதற்கு மனம் பொறுக்கவும்.

    //குறட்டை " புலி said...
    கிணற்று தவளை போல இருந்த என்னை போன்றவர்களுக்கு உங்கள் உலகம் புதிது.//

    என்ன தலை,இந்த மாதுரி சின்ன விசயத்திர்க்கெல்லாம் கிணறு,தவளைன்னு..

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  32. /இங்குள்ள ஊழியர்களுக்கு நல்ல புத்திமதிகளும் நற்க்குனங்களும் மனிதாபிமானம் முறையில் செயல் படுவதற்கு பயிர்ச்சிகளும் கொடுக்கப் படுகின்றன,/ தகவல் ஆச்சரியமாயிருக்கு...ரொம்ம்ம்ம்ப நல்ல கம்பனிதான்...

    இங்கு எண்ணெய் ஏற்றுமதி மட்டும் தான் நடைபெறுகிறதா?

    தீவின் அறிமுகம்,தகவல்கள் நல்லாருக்கு. எழுதினால் நிறைய எழுதலாம் போலயே... நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய சொல்லுங்கள்.

    ReplyDelete
  33. வருகைக்கும் உங்கள் அகருத்திர்க்கும் ரொம்ப நன்றி சகோ.
    //enrenrum16 said...
    /இங்குள்ள ஊழியர்களுக்கு நல்ல புத்திமதிகளும் நற்க்குனங்களும் மனிதாபிமானம் முறையில் செயல் படுவதற்கு பயிர்ச்சிகளும் கொடுக்கப் படுகின்றன,/ தகவல் ஆச்சரியமாயிருக்கு...ரொம்ம்ம்ம்ப நல்ல கம்பனிதான்...//

    கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.
    ஆச்சர்யபடுவதர்க்கு ஒன்றும் இல்லை சகோ,எல்லா மனிதர்களும் எல்லா மனிதர்களையும் மனிதர்களாக பார்ப்பார்கள் என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை.

    அந்த வகையில் அபுதாபி மக்கள் பார்க்கின்றார்கள் மற்றவர்களை.

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும்...

    நல்ல பகிர்வு.நீங்கள் பணிபுரியும் பகுதியை அருமையாக விளக்கியுள்ளிர்கள்.
    பணத்துக்காக எப்படியெல்லாம் வாழ வேண்டி இருக்கு சகோ.

    ReplyDelete
  35. தனி பதிவு இருக்கு நேர மில்ல விளக்க பிறகு போடுவேன்.,

    ஆமாம் தூங்கிகிட்டே கமெண்ட் போட்டீங்கலா>
    எள் புளி சாதத்ததில் யாருக்கு போட வேண்டிய கமெண்ட் அது

    ReplyDelete
  36. தம்பி ரஜின், சில நல்ல புள்ளிங்கள இருக்கதான் செய்கிறீர்கள்,பிலைப்பைனி பதிவு கண்டிப்பா உண்டு ஆனால் இப்ப இல்ல.,,.

    ReplyDelete
  37. //ஆயிஷா said...
    அஸ்ஸலாமு அலைக்கும்...

    நல்ல பகிர்வு.நீங்கள் பணிபுரியும் பகுதியை அருமையாக விளக்கியுள்ளிர்கள்.
    பணத்துக்காக எப்படியெல்லாம் வாழ வேண்டி இருக்கு சகோ.//


    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி

    ReplyDelete
  38. Jaleela Kamal said...
    தனி பதிவு இருக்கு நேர மில்ல விளக்க பிறகு போடுவேன்.,

    ஆமாம் தூங்கிகிட்டே கமெண்ட் போட்டீங்கலா>
    எள் புளி சாதத்ததில் யாருக்கு போட வேண்டிய கமெண்ட் அது//


    konjam busy adhaan maarivittadhu.
    sorry.

    ReplyDelete