Friday, July 29, 2011

வால் இல்லாமலும் குரங்கு இருக்கும் என்று... !!


உறவுகளை தள்ளி வைத்து.
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,
என்னையவே புண்ணாக்கி.
என்னை நீயாகவும்.
உன்னை நானாகவும்.
கண்ணே என் கணவன் என்று
நம்பியிருந்த எனக்கு.
கிடைத்தப் பட்டம் மலடி.

மாமியார் என்ற ராட்சசி.
போலி சாமியாரைப் போல பொய் பேசி.
கதிரவன் உதித்து மறையும் வரை.
மருமகளை தினம் மிதித்து சாகும் வரை.
செய்யும் கொடுமைகளை தட்டி கேட்க
யாரும் இல்லையா?

மனதைத் தொலைத்து
பெற்றவர்களை பகைத்து
உறவுகளை புதைத்து
என் அழகினை சிதைத்து
என் உணர்ச்சிகளை வதைத்து
தினம் தினம் பைத்தியம் பிடித்து
நடை பிணமாக அலைகின்றேன்
கடைசியில் கல்லறைதான் முடிவு என்றால்....
பிறகு எதற்கு அந்த காதல்?

பல்லில் விஷம் வைத்திருக்கும்
ஜீவனை பாம்பு என்கிறோம்!!..
சொல்லில் விஷம் வைத்திருக்கும்
மாமியாக்களை என்னவென்பது ?

கண்ணிர் சிந்தும் நம் கண்களை விட
அதை மறைத்து புன்னகை பூத்திடும் நம் இதழுக்கே வலி அதிகம்.
ஆனால் பலருக்குப் புறியாது.
புறிய வைத்தாலும் விளங்காது.

புத்தகத்தில் படிச்சும் புரியவில்லை.
தொலைக்காட்சியில் பார்த்தும் நம்பவில்லை.
ஆசிரியர் சொல்லியும் தலையில் ஏற வில்லை
ஆனால் மாமியாரை நேரில் பார்த்தப் பிறகுதான் புறிந்தது.
எவ்வளவு கொடுமைக் காரி என்று.

கல்லூரி கன்னிகளே.
கஸ்தூரி பொன்னுகளே.
வேண்டாம் நமக்கு காதல்.
நீ காதலிப்பவன் நல்லவன்தான்.
ஆனால் கடும் சொல்லால் வதைப்பது
அவன் குடும்பத்தார்தான்,காரணம்
சீரும் சீராட்டாமும்,சில்லரை எனும்
கைக்கூலியும் கொடுக்காமல்
சிட்டாய் நீ புகுந்து விட்டாய்.
பிணம் தின்னும் கழுகுகள் கூட
உயிரற்ற உடலைத்தான் உணவாக்கி திண்ணும்
நற் குணமற்ற மாமியாக்கள் உயிருள்ள மருமகளை
உயிரோடுதான் உண்னுகிறார்கள்.
வசைப் பாடுவதின் மூலம்.

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...
வாசலில் வந்து அழைத்தான் பிச்சைக்காரன் "அம்மா" என்று...

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...
வீட்டினுள் ம்மா...என்று அழைத்தது அவள் வளர்க்கும் பசு.

இதுதான் எதார்த்தம்,இதுதான் உண்மை, இதுதான் சத்தியம்,இதுதான் ஜெயிக்கும்.

மலடு என்பது பெண்களுக்கு மட்டும் உள்ள குறை இல்லை இது ஆண்களுக்கும் பொருந்தும்,இதை அறியாத ஆண்களும் கண்வன் வீட்டு பெண்களும் புறிந்து கொள்ளனும்.

வெறுமையை நிரப்பி விம்மும் இதயத்துக்கு
விடை கூற முடியாமலும்...
பொறுமையை மதித்து பொங்கி எழும் உணர்சிக்கு
இடை விடாமலும்...
என்னைக் கட்டியவனே கதி என்றும்
என்னை திட்டியவனே விதி என்றும்
தினம் தினம் செத்தும் பிழைக்கும்
சகோதரிகளுக்காக இந்த பதிவு.

மனதில் மலர்ந்தவைகள் எல்லாம்...
பொழுதில் மறைந்து கொண்டு இருக்கின்றன.
வசந்த காலங்களெல்லாம்...
வாடிப் போய் கொண்டு இருக்கின்றன.
நட்சத்திர இரவெல்லாம் உமைப் பார்த்து...
அழுது கொண்டு இருக்கின்றன.
சோலை மரங்கலெல்லாம் வதங்கி...
வாடிக் கொண்டு இருக்கின்றன.
வெள்ளைப் பூக்களும் முல்லைப் பூக்களும்...
கண்ணீர் பூக்களாக மாறிக் கொண்டு இருக்கின்றன.

காலங்களில் ஒரு நாள் வசந்த காலம் பிறக்கும்...
அது உனது வாழ்க்கை கண்ணீரை துடைக்கும்.

என்ற நம்பிக்கையோடு......

அந்நியன்:2

காணொளியில் காதலைப் பற்றி என்ன அழகாக வர்ணிக்கின்றார்கள் அது நிஜத்தில் சாத்தியமாகுமா?

இது எல்லா மாமியாக்களுக்கும் பொருந்தாது சில நல்ல சீதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

26 comments:

  1. அடடா... நல்ல ஒரு பதிவு.

    மாமியாரை விடுங்கள், சுற்றம் சூழலை கவனிக்காதீர்கள்... எத்தனை பிரச்சனை, சோதனை வரினும், கணவன் துணிந்து, மனைவியை அணைத்து, ஆறுதல் சொல்லி, மனைவியோடு ஒத்துப் போனாலே போதும்... அந்த ஒரு ஆறுதலே, அனைத்துக் கவலைகளையும் உடைத்தெறிந்து, மனைவியைத் தலைநிமிரச் செய்துவிடும்.

    ReplyDelete
  2. நல்லவேள.... மீ எஸ்கேப்பூ..........!!!

    அர்த்தமுள்ள கவிதை....

    ReplyDelete
  3. //athira said...
    அடடா... நல்ல ஒரு பதிவு.

    மாமியாரை விடுங்கள், சுற்றம் சூழலை கவனிக்காதீர்கள்... எத்தனை பிரச்சனை, சோதனை வரினும், கணவன் துணிந்து, மனைவியை அணைத்து, ஆறுதல் சொல்லி, மனைவியோடு ஒத்துப் போனாலே போதும்... அந்த ஒரு ஆறுதலே, அனைத்துக் கவலைகளையும் உடைத்தெறிந்து, மனைவியைத் தலைநிமிரச் செய்துவிடும்.//

    நீங்கள் சொல்லுவதைப் போல கணவன் அப்படியொரு முடிவு எடுத்தான் என்றால் வரவேற்கிறேன் சகோ.

    நாட்டு நடப்பின்படி வீடுகளில் நடக்கும் பிரசினைகளுக்கு சில மாமியாக்களும் நாத்தினார் என்றளைக்கப்படும் சில பெண்மணிகளுமே காரணம் ஆகவே இதை எழுதினேன் மற்றபடி யார் மீதும் எனக்கு கோபம் இல்லை.

    வேர என்னத்தை எழுத?

    இனி கவிதைதான் எழுதலாம்னு இருக்கேன் அதுவும் அந்நியன் ஸ்டைலில்.

    வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  4. //ஆமினா said...
    நல்லவேள.... மீ எஸ்கேப்பூ..........!!!

    அர்த்தமுள்ள கவிதை....//

    என்னது கவிதையா...!!! ???

    கிண்டலு..மனுசன் தொன்டை வலிக்க கத்தி கொண்டு இருக்கேன் உங்களுக்கு இது கவிதையா தெரியுதோ?

    என்ன எஸ்கேப்பு..விடாது கருப்பு.

    வருகைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  5. வெறுமையை நிரப்பி விம்மும் இதயத்துக்கு
    விடை கூற முடியாமலும்...
    பொறுமையை மதித்து பொங்கி எழும் உணர்சிக்கு
    இடை விடாமலும்...
    என்னைக் கட்டியவனே கதி என்றும்
    என்னை திட்டியவனே விதி என்றும்
    தினம் தினம் செத்தும் பிழைக்கும்
    சகோதரிகளுக்காக இந்த பதிவு.

    பெண்மையை மதிக்கும் நோக்குடன்
    வரைந்த கவிதைக்கும் உங்கள்
    உணர்வுக்கும் தலைவணங்குகின்றேன் சகோ...
    வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள்
    கவிதைகள் வளம்பெற...........

    ReplyDelete
  6. கடைசியில் கல்லறைதான் முடிவு என்றால்....
    பிறகு எதற்கு அந்த காதல்?

    இதுதான் எதார்த்தம்,இதுதான் உண்மை, இதுதான் சத்தியம்,இதுதான் ஜெயிக்கும்.

    -------
    நான் ரசித்த வரிகள்...நல்ல நடை..வாழ்த்துக்கள்..
    முடிந்தால் என் வலைப்பக்கமும் வரவும்...என் கவிதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்....

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அய்யூப்,

    வரிகள் பெரும்பாலும் அதிரடி.
    உள்ளே நிறைய சோகம்.

    //மலடு என்பது பெண்களுக்கு மட்டும் உள்ள குறை இல்லை இது ஆண்களுக்கும் பொருந்தும்//---நிச்சயமாக..!

    'மலடன்' - குறிச்சொல்லில் சேருங்கள்.
    இருக்கட்டும் இப்படியொரு வார்த்தை இனி இணையத்தில்..!

    ReplyDelete
  8. " திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது".

    ”சில”, மாமியார், நாத்தனாரை திருத்தவே முடியாது... அது வாழையடி வாழை, அதேபோல, இன்று இருக்கும் மருமகளும் நாளை அதே தவறைச் செய்யமாட்டார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை, பெண்களே பெண்களுக்கு கொடுமை விளைவித்தால் என்னவென்று சொல்வது.

    அதனால நான் சொல்ல வருவதென்னவென்றால்...

    கொஞ்சம் இருங்க பிளேன் ஸ்ராட்ல இருக்கோ எனப் பார்த்திட்டுச் சொல்றன்:)(தப்பி ஓடத்தான்:)).....

    ஆண்கள்தான்(கணவன்மார்), உங்களை நம்பி வந்த மனைவிக்கு, பூரண ஒத்துழைப்பைக் கொடுக்கோணும் எனக் கேட்டுக்கொள்கிறேன்ன்ன்...

    கடவுளே.... மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  9. உங்கள் கருத்தை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். நீளப் பதிவு, பாராட்டுக்கள் அயுப்.

    //நீ காதலிப்பவன் நல்லவன்தான்.
    ஆனால் கடும் சொல்லால் வதைப்பது
    அவன் குடும்பத்தார்தான்,காரணம்
    சீரும் சீராட்டாமும்,சில்லரை எனும்
    கைக்கூலியும் கொடுக்காமல்// எல்லாம் கொடுத்து, வீட்டார் பார்த்துக் கட்டி வைக்கும் திருமணங்களிலும் இப்படி நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோமே அயுப். குடும்பத்தார் வதைத்தால்... கட்டியவன் பார்த்துக் கொண்டிருக்கலாமா? அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தால் கணவனும் சேர்ந்து வதைப்பதாகத்தானே பொருள். அப்போ எப்படி அவன் 'நல்லவன்' ஆவான்?
    எல்லோருமே யோசிக்க வேண்டும்.

    எங்கள் பக்கம் இப்படி எல்லாம் நடப்பது மிகவும் அரிது.

    //காணொளியில் காதலைப் பற்றி என்ன அழகாக வர்ணிக்கின்றார்கள் அது நிஜத்தில் சாத்தியமாகுமா?// ஆகும், ஆகாமலும் இருக்கும். காணொளியில் காண்பிப்பவை அனைத்தும் கற்பனை அல்லவே. ஆவதும் ஆகாததும் சம்பந்தப்பட்டவர்களையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்தது.

    //சில நல்ல சீதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.// 'பல' என்று மாற்றிச் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களை எடுத்துப் பாருங்கள். எந்தத் தொகுதியில் அதிகம் பேர் அடங்குகிறார்கள்! 'நல்ல' தொகுதியிலா? 'வதைப்போர்' தொகுதியிலா?

    சிரமத்துக்குள்ளாகும் பெண்கள் சமாளித்துக் கொள்ள இயலாத துயரத்துள்ளாக்கப்படுவது கொடுமைதான். அது நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  10. //அம்பாளடியாள் said...

    பெண்மையை மதிக்கும் நோக்குடன்
    வரைந்த கவிதைக்கும் உங்கள்
    உணர்வுக்கும் தலைவணங்குகின்றேன் சகோ...
    வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள்
    கவிதைகள் வளம்பெற...........//

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோ.
    நாம் கடவுளுக்கு மட்டும் தலை வணங்குவோம் சகோ.

    நண்பர்களுக்கு நட்பை வழங்குவோம்.

    ReplyDelete
  11. //Reverie said.

    கடைசியில் கல்லறைதான் முடிவு என்றால்....
    பிறகு எதற்கு அந்த காதல்?

    இதுதான் எதார்த்தம்,இதுதான் உண்மை, இதுதான் சத்தியம்,இதுதான் ஜெயிக்கும்.

    -------
    நான் ரசித்த வரிகள்...நல்ல நடை..வாழ்த்துக்கள்..
    முடிந்தால் என் வலைப்பக்கமும் வரவும்...என் கவிதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்...//
    வருகைக்கு நன்றி சகோ.

    கண்டிப்பாக உங்கள் தளங்களுக்கும் வருகிறேன்.

    ReplyDelete
  12. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அய்யூப்,

    வரிகள் பெரும்பாலும் அதிரடி.
    உள்ளே நிறைய சோகம்.//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

    அழகான பெயர்தான் மலடன் இனி அப்படியே அழைப்போம்.

    கருத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  13. //athira said...
    " திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது".

    ”சில”, மாமியார், நாத்தனாரை திருத்தவே முடியாது... அது வாழையடி வாழை, அதேபோல, இன்று இருக்கும் மருமகளும் நாளை அதே தவறைச் செய்யமாட்டார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை, பெண்களே பெண்களுக்கு கொடுமை விளைவித்தால் என்னவென்று சொல்வது.

    அதனால நான் சொல்ல வருவதென்னவென்றால்...

    கொஞ்சம் இருங்க பிளேன் ஸ்ராட்ல இருக்கோ எனப் பார்த்திட்டுச் சொல்றன்:)(தப்பி ஓடத்தான்:)).....

    ஆண்கள்தான்(கணவன்மார்), உங்களை நம்பி வந்த மனைவிக்கு, பூரண ஒத்துழைப்பைக் கொடுக்கோணும் எனக் கேட்டுக்கொள்கிறேன்ன்ன்...

    கடவுளே.... மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).//

    அழகான விளக்கத்தை சொல்லி விட்டு ஆண்கள் மீதும் ஏவுகனையை ஏவி விட்டு மீ எஸ்கேப்பு என்றால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா?

    படித்த பெண்கள்தான் எல்லா வற்றையும் மாற்றனும்.
    அதாவது வாழையடி வாழையை அழிக்கனும் அதற்காக உறுதி மொழி எடுக்க வேண்டும்.

    இந்த குற்ற உணர்வில் ஆண்களுக்கும் பங்கு இருக்கு அதை நான் மருக்க வில்லை சகோ.

    பயணிகள் கவணதிற்கு:

    இன்று சென்னைக்கு புறப்பட இருந்த ஐசி 1 விமானம் வானிலை மிக மோசமாக இருப்பதால் நான்கு நாட்கள் கழித்து புறப்படும் ஆகையால் தாங்கள் பெட்டி படுக்கைகளுடன் திரும்ப உங்கள் இடத்திற்கு செல்லுமாரு கேட்டுக் கொள்ளப் படுகிறிகள்.

    ReplyDelete
  14. //இமா said...
    உங்கள் கருத்தை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். நீளப் பதிவு, பாராட்டுக்கள் அயுப்.//

    ரொம்ப நன்றி சகோ.

    //எல்லாம் கொடுத்து, வீட்டார் பார்த்துக் கட்டி வைக்கும் திருமணங்களிலும் இப்படி நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோமே அயுப். குடும்பத்தார் வதைத்தால்... கட்டியவன் பார்த்துக் கொண்டிருக்கலாமா? //

    அப்படியொரு நிலமை வந்து நம்மால் தடுக்க முடியமலோ அல்லது எதிர்த்து வாதாடக் கூடிய திறமை இல்லாமலோ இருக்குமாயின் ஒரு சேலையை வாங்கி கட்டிக் கொள்வதுதான் நல்லது.

    //அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தால் கணவனும் சேர்ந்து வதைப்பதாகத்தானே பொருள். அப்போ எப்படி அவன் 'நல்லவன்' ஆவான்?
    எல்லோருமே யோசிக்க வேண்டும். //

    சுற்றி காண்பித்ததற்காக நன்றி.

    இரு வாதங்களையும் தீவிரமாக கண் கானித்த நீதிபதியின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறிகள் சகோ?

    கண்டிப்பாக உங்கள் பக்கம்தான் இருக்கும்.

    //எங்கள் பக்கம் இப்படி எல்லாம் நடப்பது மிகவும் அரிது. //

    பெரும்பாலும் தமிழக பெண்கள் கஷ்ட்டங்களை மூடி மறைப்பதில் கில்லாடிகள்.

    ////சில நல்ல சீதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.// 'பல' என்று மாற்றிச் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களை எடுத்துப் பாருங்கள். எந்தத் தொகுதியில் அதிகம் பேர் அடங்குகிறார்கள்! 'நல்ல' தொகுதியிலா? 'வதைப்போர்' தொகுதியிலா?

    சிரமத்துக்குள்ளாகும் பெண்கள் சமாளித்துக் கொள்ள இயலாத துயரத்துள்ளாக்கப்படுவது கொடுமைதான். அது நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும்.//

    பதிவு கூட பயம் இல்லாமல் எழுதி விட்டேன் ஆனால் பதில் கூறுவதில்தான் பயமா இருக்கு.

    சுட்டி காண்பித்ததற்கு நன்றி சகோ கொஞ்சம் இருங்கள் ஃபோன் அடிக்குது பேசிட்டு வாரேன்.

    நான்: ஹலோ யார் பேசறது?

    மகளிர் மன்ற தலைவி பூங்காவனம் பேசுறேங்க....

    அய்யோ நான் இல்லை....

    ReplyDelete
  15. //சகோ// இமா. ;))

    //கண்டிப்பாக உங்கள் பக்கம்தான் இருக்கும்.// ஹை! அந்நியனே சொல்லியாச்சு. ;)

    //பெரும்பாலும் தமிழக பெண்கள் கஷ்டங்களை மூடி மறைப்பதில் கில்லாடிகள்.// ஓகே, ஓகே, ஓகே. ;) இப்போ எதற்காக இது!! ;)) (நான் இலங்கை.) ம்... அயுப் என்ன சொன்னாலும்... //எங்கள் பக்கம் இப்படி எல்லாம் நடப்பது மிகவும் அரிது.// என்று நான் சொன்னதை வாபஸ் வாங்க மாட்டேன்ன்ன்ன். ;) சற்று முன் கூட என் கணவரும் நானும் உங்கள் இந்த இடுகை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். இலங்கையர் மத்தியில் மாமியார் நாத்தனார்க் கொடுமை என்பது இல்லையா அல்லது நாங்கள் கேள்விப்படுவது இல்லையா! எப்படி யோசித்தும் ஒரு சம்பவம் கூட நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அங்கங்கே சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் பற்றி மட்டும்தான் காதில் விழுந்திருக்கிறது.

    //..பதில் கூறுவதில்தான் பயமா இருக்கு.// ;) க்ர்ர். நான் கேள்வி கேட்கவில்லை அயுப். ;) இடுகை படித்ததும் மனதில் தோன்றியதைச் சொன்னேன், அவ்வளவுதான்.

    //ஃபோன் அடிக்குது பேசிட்டு வாரேன்.// ;))) ஓகே பேசுங்க. ;)

    ReplyDelete
  16. பெண் மனதினுள் சொல்ல முடியாத சோகங்கள் ஏராளம்.

    ReplyDelete
  17. இதில் பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி .

    ReplyDelete
  18. //காணொளியில் காதலைப் பற்றி என்ன அழகாக வர்ணிக்கின்றார்கள் அது நிஜத்தில் சாத்தியமாகுமா? //

    அது நிஜத்துல சாத்தியமானா பல நடிகைகள் , நடிகர்கள் தற்கொலை செய்திருக்கவே மாட்டாங்க .இது அவங்களுக்கும் தெரியும் . சமீபத்துல பெங்களூர் ஹீரோ தற்கொலை (படமே இன்னும் ரிலீஸ் ஆகல )

    ReplyDelete
  19. இமா said...

    //கண்டிப்பாக உங்கள் பக்கம்தான் இருக்கும்.ஹை! அந்நியனே சொல்லியாச்சு. ;)//

    ஆமா சகோ எங்கள் நாட்டிலே அதிகம்..அதிகம்.
    வரதட்சனை கொடுமை,மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
    உங்கள் நாட்டில் இல்லை என்று கேள்விப் படும் போது சந்தோசமாக இருக்கின்றது சகோ.

    //க்ர்ர். நான் கேள்வி கேட்கவில்லை அயுப். ;) இடுகை படித்ததும் மனதில் தோன்றியதைச் சொன்னேன், அவ்வளவுதான்.//

    ப்பூ அவ்வளவுதானா?
    நான் என்னமோ பயந்து போயி விட்டேன்.

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள் டீச்சர்.

    வரவேற்கிறேன்.

    ReplyDelete
  20. //பாலா said...
    பெண் மனதினுள் சொல்ல முடியாத சோகங்கள் ஏராளம்.//

    ஆமாம் சார் அவர்களின் கொடுமைகளை வைத்துதான் தொடர் சீரியல் ஓடி கொண்டு இருக்கின்றது சன் டீவியில்.

    வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சார்.

    ReplyDelete
  21. //ஜெய்லானி said...
    இதில் பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி .//

    கரெக்ட் பாஸ்.
    என்று திருந்த போகிறார்களோ?

    ReplyDelete
  22. //ஜெய்லானி said...
    //காணொளியில் காதலைப் பற்றி என்ன அழகாக வர்ணிக்கின்றார்கள் அது நிஜத்தில் சாத்தியமாகுமா? //

    அது நிஜத்துல சாத்தியமானா பல நடிகைகள் , நடிகர்கள் தற்கொலை செய்திருக்கவே மாட்டாங்க .இது அவங்களுக்கும் தெரியும் . சமீபத்துல பெங்களூர் ஹீரோ தற்கொலை (படமே இன்னும் ரிலீஸ் ஆகல )//

    சினிமா என்பது கூலிக்கு மாறடிக்கும் தொழில் அதில் அவர்களுக்கு லாபமாக அமையும் என்பதற்க்காக எதை வேணாலும் எழுதி படத்தில் இணைத்து இளைய சமுதாயத்தினரை சீரலித்து விடுவார்கள்.

    அது அய்யாக்களுக்கும் அம்மாக்களுக்கும் புறியாது.

    வருகைக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  23. //பயணிகள் கவணதிற்கு:

    இன்று சென்னைக்கு புறப்பட இருந்த ஐசி 1 விமானம் வானிலை மிக மோசமாக இருப்பதால் நான்கு நாட்கள் கழித்து புறப்படும் ஆகையால் தாங்கள் பெட்டி படுக்கைகளுடன் திரும்ப உங்கள் இடத்திற்கு செல்லுமாரு கேட்டுக் கொள்ளப் படுகிறிகள்.//

    விதி வலியதாமேஏஏஏஏஏஎ:)), பிரித்தானியாவில இறங்கி, டக்கெனத் திரும்பினால்... எயார்போட் ஸ்கிரீனில பெரிய பெரிய எழுத்தில:)).. போகுது மேல இருக்கிற:)) செய்தி..:)). உஸ்ஸ்ஸ்ஸ் தப்பிட்டேன் சாமீஈஈஈஈஈஈ:))). நான் தேம்ஸ்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்ன்:))).

    ReplyDelete
  24. //சற்று முன் கூட என் கணவரும் நானும் உங்கள் இந்த இடுகை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். இலங்கையர் மத்தியில் மாமியார் நாத்தனார்க் கொடுமை என்பது இல்லையா அல்லது நாங்கள் கேள்விப்படுவது இல்லையா! எப்படி யோசித்தும் ஒரு சம்பவம் கூட நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அங்கங்கே சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் பற்றி மட்டும்தான் காதில் விழுந்திருக்கிறது. //

    100 வீதம் கரெக்ட் இமா.
    எம் நாட்டில் திருமணத்துக்குப் பின், பெண் வீட்டில்தான் இருப்போம், அதனால் மாமி, நாத்தனார் கொடுமைக்கே இடமில்லை....இன்னும் அதிகம் ஒட்டாகிடுவோம்..( மிக அரிதாக எங்காவது புடுங்குப்பாடும் உண்டே தவிர.. கொடுமை எல்லாம் இல்லை).

    அத்தோடு ஒரு உண்மையான விடயம், இலங்கை ஆண்கள்.. தன் தாய், தன் பிறந்த குடும்பம் என அதிகம் தூக்கிப்பிடிக்கமாட்டார்கள்(அதனால் எமக்கு மாமா, மாமியில் எரிச்சல் வராதூஊஊஊஊஊஉ:)))), .... திருமணத்தின் பின்... மனைவிக்கே முதலிடம்((நான் அறிந்ததெல்லாம் இவைதான்). இதுபற்றி நிறையச் சொல்லலாம்... ஆனா நான் தேம்ஸ்ஸ்க்குப் போகோணும் பின்பு வாறேன்ன்ன்ன்:)).

    இந்தப்பிரச்சனை எல்லாம் நாடகம், படங்களில் பார்த்தே அறிகிறோம்.

    ReplyDelete
  25. //பதிவு கூட பயம் இல்லாமல் எழுதி விட்டேன் ஆனால் பதில் கூறுவதில்தான் பயமா இருக்கு.

    சுட்டி காண்பித்ததற்கு நன்றி சகோ கொஞ்சம் இருங்கள் ஃபோன் அடிக்குது பேசிட்டு வாரேன்.

    நான்: ஹலோ யார் பேசறது?

    மகளிர் மன்ற தலைவி பூங்காவனம் பேசுறேங்க....

    அய்யோ நான் இல்லை....//

    ஹா...ஹா...ஹா..... சிரிச்சதில வயிறு நோகுதே... :)) இதுக்கே இப்பூடி நடுங்கினால்... வீட்டுப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கப்போறீங்க?..

    அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் பெண்கள் மட்டும் அல்ல... கணவன்மார் வாயை மூடிக்கொண்டிருப்பதுதான்...

    ஹையோ துப்பாக்கி என்பக்கம் திரும்புதே...:))

    நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே.... பிலீஸ்ஸ்ஸ் சேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீஈஈஈஈஈஈஈஈ:)). மீஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  26. அதிரா...சிஸ்ட்டர்.

    செம கலக்கு கலக்கிட்டிர்கள்.
    இலங்கயில் உள்ள கலாச்சாரமும் இந்தியாவில் உள்ள கலாச்சாரமும் வித்தியாசம்தான்.

    தமிழ் நாட்டில் சாதி மத பேதமின்றி மாமியார்கள் கொடுமையும் நாத்தனார்கள் கொடுமையும் கொடு கட்டி பறக்கின்றது.
    தினம் நீங்கள் பார்க்கும் சீரியலில் கூட இந்த கொடுமையினை பார்க்கின்றிகள் இது ஒழிக்கப் படவேண்டும் என்பது என் கருத்து.

    அதற்க்காக கல்யாணம் முடிந்த பிறகு சொந்தங்களை "அம்போ"என்று விட்டுச் செல்வதும் கண்டிக்கத்தக்கது.

    தாமதமாக பதில் எழுதுவதற்கு ஒரு சாரி..
    என்னுடைய சொந்தப் பிரச்சினையின் காரணமாக பதிலை குறுக்கி எழுதியதற்கும் ஒரு சாரி...

    வருகைக்கும் கருதிற்க்கும் நன்றி.

    தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு.

    ReplyDelete