Saturday, December 4, 2010

ஏழைகளை தத்தெடுப்போம்.


சொந்தங்களை அரவணைப்போம் - ஏழைகளை தத்தெடுப்போம்.

அந்நியர்கள் மீது கூட வன்முறையை வெறுத்த மகாத்மா காந்தி வாழ்ந்த நாட்டில்,,குடும்ப வன்முறை மூலம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதும், பேசாமலிருப்பதும், வேதனையிலும் வேதனை.
குடும்பத்தில் ஏற்ப்படும் குழப்பம், அது சமுதாயத்திற்கே அழிவே ஏற்ப்படுத்தும் என்று, யாரும் புரிந்துக் கொள்வதில்லை,இதனால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு பின்னடைவே ஏற்ப்படுத்துமே தவிர, எந்த ஒரு நண்மையையும் தராது.
இதன் மூலம் அவர்களின் வாரிசுகள் மட்டுமின்றி பகையாக்கப் பட்ட அண்ணனோ, அல்லது தம்பியோ,அக்காவோ அல்லது தங்கையோ,இவர்களின் வாரிசுகளும் மனதால் பாதிக்கப் படுகிறார்கள்.

இதைப் பற்றி பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், என்னை சார்ந்த எவர் ஒருவரும்,என்னை சார்ந்தவரிடம், தொடர்ந்து மூன்று நாட்கள் பேசாமளிருப்பாறேனில், அவர் என்னை சார்ந்தவர் இல்லை என்று.

அண்ணல் மகாத்மாவும், மனிதருக்கு மனிதர் நேசித்து கொள்ளுங்கள்,துரோகித்துக் கொள்ளாதிர்கள் என்று தமது நண்பர்களுக்கு தினமும் அறிவுருத்துபவராக இருந்தார்.

குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுக்கு உணர்ச்சிவசப் படாமல், உறவுகள் செய்த நன்மையை மட்டும் எண்ணி, முடிவு எடுத்தால், குடும்பம் பிரிவதற்கு யாரும் காரணமாக இருக்கமாட்டார்கள்.
ஒரு ஊரை,சுற்றி ஆராய்ந்தோம் என்றால்,நாற்ப்பது சதவிகித மக்கள் குடும்ப பிரச்சினையால், சகோதர சகோதரிகளை இழந்து வாழ்கிறார்கள்.

இதற்க்கு காரணம் என்ன ?

வசதியும், வாய்ப்புகளும் கூடும்போது, தமது சம்பாத்தியத்தின் நிழலில், மற்ற உறவுகள் ஒண்டி வாழ்வதால், நமது குடும்பத்திற்கு நஷ்ட்டம் ஏற்படுமே என்று எண்ணம் கொள்வது. (ஒரு வகையினர்)

சொத்தினை பங்கிடும்போது, ஏற்ப்படும் பிரச்சினைகளுக்கு, சரியான முறையில், பேசி தீர்வு காணாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் விவாதிப்பது.(ஒரு வகையினர்)

கவுரவம் என்று அழைக்கப்படும் பெருமதிப்பை, உடையவர்கள் தமக்குத் தரவில்லையே என்று வருந்தி, ஒதுங்குபவர்கள்.
(ஒரு வகையினர்)

மரணத்தின் வாயிக்குள் போய் கொண்டிருக்கும் இந்த மனிதப் பிறவிகள், வாழும் கொஞ்ச நாட்களில் நன்மையை செய்து, தீமையை தவிர்த்து,உற்றார் உறவினருடன்,ஏழை எளியவருடன் ஒற்றுமையாய் வாழ்வதற்கு, மனம் வரவில்லையே ஏன் ?

கடினமான காரியத்தையும்,தமது பேச்சு திறனால் சாதிக்கும் மனித ஜாதி, காசுகள் பெருகியதும் கண்டும் காணாமல் போவது ஏன் ?

பணப் புழக்கம் அதிகரிப்பதால், உங்களின் அறிவுகளும்,அன்பு இதயங்களும் மங்கி போகின்றன, உங்களின் பலமும்,பலவீனமும் உணரும் சந்தர்ப்பம், கண்டிப்பாக ஒரு நாள் வரும்.

இது எல்லா மனிதருக்கும் பொருந்தாது.
நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி சொந்தங்களால் துரத்தி அடிக்கப் பட்டு,
நடுத்தெருவில் வீசி எறியப்பட்ட இந்த மூன்று ஜீவன்களை,
யார் காப்பாற்றுவார் ?

உழைக்கிறார்,தெருவில் சாப்பிடுகிறார்,நடை பாதையில் தூங்குகிறார்.
பச்சை மண்ணோடு...!!!

மழை பெய்வதற்கு முன்னேயே, நம் குழந்தைகளுக்கு குடையை கொடுத்து பள்ளிக்கு அனுப்பும் நாம்,திடிரென்னு மழை பெய்து விட்டால் இவர்கள் எங்கு போயி தூங்குவார்கள் ?

சொந்தங்களை அரவணைப்போம்..!!! 
ஏழைகளை தத்தெடுப்போம்...!!!

31 comments:

  1. சொந்தங்களை அரவணைப்போம்..!!!
    ஏழைகளை தத்தெடுப்போம்...!!!

    ReplyDelete
  2. எல்லோரும் இப்படி உறுதிமொழி எடுப்போம். ஹரிஸ்

    ReplyDelete
  3. ஆழமான அலசல்... நானும் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்... சொந்தங்களை அரவணைப்போம்..!!!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பிரபா.

    ReplyDelete
  5. மரணித்தின் வாயிக்குள் போய் கொண்டிருக்கும் இந்த மனிதப் பிறவிகள் வாழும் வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுப்போம்

    ReplyDelete
  6. உறவுகள் பேணிவது ஒரு கலை இல்லையா?

    அந்த படத்தை காணூம்போது மிகவும்வருத்தமாக உள்ளது

    சொந்தங்களை அரவணைப்போம்..!!!
    ஏழைகளை தத்தெடுப்போம்...!!!

    ReplyDelete
  7. //sivatharisan said...
    மரணித்தின் வாயிக்குள் போய் கொண்டிருக்கும் இந்த மனிதப் பிறவிகள் வாழும் வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுப்போம்//

    கண்டிப்பாக சிவா.உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  8. //ஆமினா said...
    உறவுகள் பேணிவது ஒரு கலை இல்லையா?

    அந்த படத்தை காணூம்போது மிகவும்வருத்தமாக உள்ளது//

    Uravugalai Penuvadhu Kattaayak Kadamai Sister.

    (Tamil Converter not working)

    ReplyDelete
  9. சொந்தங்களை அரவணைப்போம்..!!!
    ஏழைகளை தத்தெடுப்போம்...!!!

    ReplyDelete
  10. //THOPPITHOPPI said...
    சொந்தங்களை அரவணைப்போம்..!!!
    ஏழைகளை தத்தெடுப்போம்...!!!
    December 5, 2010 2:06 AM //

    வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  11. மிக நல்ல விஷயங்களை எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நன்றி சகோதரர் எஸ்.கே.
    கருத்தினை உங்கள் தளங்களிலும் நமது தளங்களிலும் பகிர்ந்து கொள்வோம்.
    வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  13. யோசிக்க வேண்டிய வார்த்தைகள்தான் .அந்நியன் 2 தெளிவாதான் இருக்கிறார் :-)

    அப்படியோ இண்ட்லி ஓட்டு பட்டை சேருங்க. போன தடவை வரும் போது ஃபோலோயர் கெட்ஜட் இல்லை அதனால தொடர்ந்து வரமுடியல...இனி வருவோமுல்ல :-)

    ReplyDelete
  14. இன்னிக்கு காலைல நல்ல செய்தியா ஒன்னு படித்திருக்கிறேன் .பின்பற்றுகிறேன் .வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete
  15. //ஜெய்லானி said...
    யோசிக்க வேண்டிய வார்த்தைகள்தான் .அந்நியன் 2 தெளிவாதான் இருக்கிறார் :-)//

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி அண்ணே. கூடிய சீக்கிரம் இணைத்து விடுகிறேன், எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர் டெக்னாலிஜி குறைவு அதுனாலே கிடைக்கிரே பாதி நேரத்தை கருத்து சொல்வதற்கும் மீதி நேரத்தை கட்டுரை எழுதுவதற்கும் செலவிடுவதால் கவனம் செலுத்த வில்லை.

    ReplyDelete
  16. //நா.மணிவண்ணன் said...
    இன்னிக்கு காலைல நல்ல செய்தியா ஒன்னு படித்திருக்கிறேன் //

    வருகைக்கும் உங்களின் கருத்திற்கும் நன்றி சார்,உங்கள் பேரின் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை இருப்பதால் சார் போட்டு கூப்பிட்டேன்

    ReplyDelete
  17. மனிதர்கள் மனிதத்தை தொலைப்பதால் வரும் பிரச்சனைதானிது.

    மனிதர்களின் மனநிலையை மனிதர்களே புரிந்துக்கொள்ளதவறுவதுதான் வேதனை.

    முடிந்தளவு தோள்கொடுப்போம்
    இயன்றவரை உதவிடுவோம்.

    நல்லதொரு நோக்கோடு எழுதிய இப்பதிவு பலரைசென்றயவேண்டும்.

    இன்ஷா அல்லாஹ் தாங்கள் கேட்டுகொண்டதின்பேரில் நிச்சயம் ஓர் கவிதை எழுதுகிறேன்..

    ReplyDelete
  18. முடிந்தளவு தோள்கொடுப்போம்
    இயன்றவரை உதவிடுவோம்.

    Insha Allha.
    Rompa Nandri Kaviyarasi Avargale.

    ReplyDelete
  19. //சொந்தங்களை அரவணைப்போம்..!!!
    ஏழைகளை தத்தெடுப்போம்...!///
    அருமையாக சொல்லி இருப்பீங்கல்
    அந்த் பிஞ்சு குழந்தைய பார்த்த ரொம்ப கழ்டமாக இருக்கு

    ReplyDelete
  20. பாராட்டுகள் நண்பரே பலர் விளையாட்டாகவும் சிலர் பொழுது போக்கவும் பயன்படுத்தும் வலைப்பூவில் உண்மையில் பாராட்டும் படியாகவும் மட்ட்ரவர்கள் சிந்திக்கும் படியாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உள்ளீர்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்

    ReplyDelete
  21. //Jaleela Kamal said...
    //சொந்தங்களை அரவணைப்போம்..!!!
    ஏழைகளை தத்தெடுப்போம்...!///
    அருமையாக சொல்லி இருப்பீங்கல்
    அந்த் பிஞ்சு குழந்தைய பார்த்த ரொம்ப கழ்டமாக இருக்கு//

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அக்காள். என்ன செய்வது இதுபோல லட்ச்சக்கணக்கான குழந்தைகள் தெருவில் வசிக்கிறது சென்னையில் மட்டும்.பாவம் இவர்களுக்கு விடிவுகாலம் எப்போ பிறக்குமோ ?

    ReplyDelete
  22. //polurdhayanithi said...
    பாராட்டுகள் நண்பரே பலர் விளையாட்டாகவும் சிலர் பொழுது போக்கவும் பயன்படுத்தும் வலைப்பூவில் உண்மையில் பாராட்டும் படியாகவும் மட்ட்ரவர்கள் சிந்திக்கும் படியாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உள்ளீர்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்//

    வருகைக்கு நன்றி அண்ணன், நாம் எதை நினைத்தாலும் பிறருக்கு நன்மையாக முடியனும், என்பதே எனது கொள்கை.இப்பத்தான் எழுதி பழகுறேன்.கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  23. சொந்தங்களை அரவணைப்போம்
    ஏழைகளை தத்தெடுப்போம்
    அருமையான வரிகள்.
    நாம் எல்லாம் இந்த மாதிரி சீரியல், படங்கள், பேச்சு போட்டிகள், கவிதைகள், செய்தி தாளில், பத்திரிகைகளில் இதெல்லாம் பார்த்ததும் மனதில் ஒரு ஏக்கம்+ முடிந்த அளவுக்க நம்மாள் ஏது செய்ய முடியுமோ அதுவரைக்க்கும் தான் செய்ய முடிகிறது.
    இருந்தாலும் ஒன்று சொல்கிறேன்.,நாட்டாமை அவர்களே, இந்த இந்தியாவில் எவ்வளவு பணம் வந்தாலும் இந்தமாதிரி கொடுமைகள் இது எல்லாம் அறவே எப்ப மாறுமோ மாற்ற முடியுமோ, மாறுவாங்களோ என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்.

    ReplyDelete
  24. //இருந்தாலும் ஒன்று சொல்கிறேன்.,நாட்டாமை அவர்களே, இந்த இந்தியாவில் எவ்வளவு பணம் வந்தாலும் இந்தமாதிரி கொடுமைகள் இது எல்லாம் அறவே எப்ப மாறுமோ மாற்ற முடியுமோ, மாறுவாங்களோ என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்//

    இப்படி கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு, இந்த அரசியல் வாதிகளை தட்டிக் கேட்க்காதததுனாலேதான், இந்தியா இந்த நிலைமைக்கு இருக்கு.
    நன்றி உங்கள் கருத்திற்கு விஜி அக்காள்.

    ReplyDelete
  25. //ஒரு ஊரை,சுற்றி ஆராய்ந்தோம் என்றால்,நாற்ப்பது சதவிகித மக்கள் குடும்ப பிரச்சினையால், சகோதர சகோதரிகளை இழந்து வாழ்கிறார்கள்.//

    வேதனையான உண்மை!
    இன்னும் பக்கத்து வீட்டினருடன் எந்தத்
    தொடர்பும் நட்பும் வைத்துக் கொள்ளாமல்
    தனித் தனித் தீவுகளாய் உள்ளங்கள்;
    இல்லங்கள். உறவுகளை அவசியம்
    பேணுவோம். வாழும்வரை மகிழ்ந்திருப்போம்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. சகோ அந்நியன் அருமையான கருத்துக்களை அள்ளித்தெளித்து இருக்கின்றீர்கள்.இன்னும் தொடருங்கள்.

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிஜாம் அண்ணன்.

    ReplyDelete
  28. //ஸாதிகா said...
    சகோ அந்நியன் அருமையான கருத்துக்களை அள்ளித்தெளித்து இருக்கின்றீர்கள்.இன்னும் தொடருங்கள்//

    ஓகே..சரிக்கா..ரொம்ப நன்றி உங்கள் கருத்துரைக்கு

    ReplyDelete
  29. Jaleela Kamal said...
    //சொந்தங்களை அரவணைப்போம்..!!!
    ஏழைகளை தத்தெடுப்போம்...!///
    அருமையாக சொல்லி இருப்பீங்கல்
    அந்த் பிஞ்சு குழந்தைய பார்த்த ரொம்ப கழ்டமாக இருக்கு
    Thank U Sister Sorry For the late raplay i did dot see that.

    ReplyDelete
  30. சாமக்கோடங்கி said...
    அருமையான கருத்து..


    Tanks Brother

    ReplyDelete