Friday, August 5, 2011

மூணுக்கு மேலே எழுதியால்... ஒதுக்கி வைத்து விடுவார்களாம்!!!



நான் விரும்பும் மூன்று விஷயங்கள்.

(1) சீர்வரிசை கொடுத்துன்னை வழியனுப்பும் பெற்றோர்க்கு
சீரழிவை கொடுக்கக்க கூடாது அப்பெண்.
(2)பட்டினியின் கோரப் பிடியில் மயங்கிருக்கும் மனித கூட்டம் மூன்று வேளையும் உணவருந்த வேண்டும்.
(3)ஏழைகள் பணக்காரர்களாக மாறனும்.

நான் விரும்பாத மூன்று விஷயங்கள்.

(1)பெற்ற தாயையும் பொறந்த நாட்டையும் ஒதுக்கும் மனிதர்கள் பிடிக்காது.
(2)பணத்தாசையில்"மார்"தட்டும் மானிடமும் புறம் பேசி குழி பறிக்கும் நட்பகத்தையும் பிடிக்காது.
(3)நாம் வாழும் வாழ்க்கை அரியது வறுமையும் கொடியது நாம் வாழும் வரை எழியோரை வாழ வைக்க முயற்சிக்காதவரையும் பிடிக்காது.

பயப்படும் மூன்று விஷயங்கள்.

(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.
(2)உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.
(3)வாழ்க்கையின் பாதையினில் வேதனைகளும் சோதனைகளும் தோன்றும் அதற்காக வாழ்க்கையினை அழித்துக் கொள்ளும் காதலர்களின் பெற்றோரை கானும் போது ஒரு பயம்.

புரியாத மூன்று விஷயங்கள்.

(1)விடியாத இரவுகள் புது வரங்களோடு விடிந்தும் முன்னேராத இந்தியாவை கானும் போது.
(2)போலியும்...கலப்படமும் தமிழகத்தின் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல இருக்கின்றது,எந்த அரசியல்வாதிகளாலும் அதை மாற்ற முடியாததை நினைத்து பார்க்கும் போது.
(3)பரந்து வாழும் நம் மக்கள்களின் கருத்தை விட பன்னாட்டு நிருவனங்களுக்கு மன்மோகன் சிங் நமது வணிகத்தை ஏன்?தாரை வார்க்கிறார் என்று என்னும் போது.

மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
(1)கம்ப்யூட்டர்.
(2)டிஷ்னரி.
(3)குறிப்பேடு.

சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்.

(1)சர்தார் ஜோக்கை படித்து விட்டு நிஜ சர்தாரை ஃபீல்டில் பார்க்கும் போது என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.
(2)நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பேசும் பேச்சுகளையும் அரசியலுக்கு வந்த பின்பு பேசும் பேச்சுக்களையும் யூ டூபில் பார்த்து சிரிப்பேன்.
(3)டாம் அன்ட் ஜெர்ரியையும் பார்த்து சிரிப்பேன்.

தற்போது செய்துகொண்டிருக்கும் காரியம்.

(1)எப்படி இந்த தொடர் பதிவை முடிப்பது என்று யோசித்துக் கொண்டு "டைப்" பண்ணிக் கொண்டு இருக்கின்றேன்.
(2)கடிகாரம் ஏன் சீக்கிரமாக சுற்றி கொண்டு இருக்கின்றது என்று கறுவிக் கொண்டு இருக்கின்றேன்.
(3) இடை இடையே கொட்டாவி உட்டுக் கொண்டும் இருக்கேன்.

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.

(1) தீமைககளிருந்து விலகி நண்மைகளை ஏவி ஹஜ் செய்யனும்(இன்ஷா அல்லாஹ்)
(2)வறுமையிலிருந்த என்னை வைர பொக்கிஷமாக மாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கனும்.
(3)என்னிடம் பணம் இருக்கும் போது எல்லோருக்கும் உதவிடனும்.

செய்து முடிக்கக்கூடிய மூன்று விஷயங்கள்.

(1) முடியாததை முடியும் என்று சவாலாக எடுத்து செய்து முடிப்பது.(தொழில் ரீதியாக)
(2)அன்றைய வேலைகளை அன்றே முடிப்பது.
(3)ஊரில் இருக்கும் போது சமையல் அட்டாகாசங்கள் ப்ளாக்கை திறந்து பிரியாணி செய்து,வீட்டில் பாராட்டைப் பெருவது.

கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்.
(1)குடிகாரனின் பேச்சு.
(2)அவசியம் இல்லாத கடன்.
(3)இரவலாக வாகனம்.

கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்.

(1) கவிதைக்கு எப்படி மெருகூட்டுவது என்று கற்றுக் கொள்ள ஆசை.
(2)ப்ளாக்கின் தொழில் நுட்பங்களை எளிதாக புறிந்து கொள்ளவும் ஆசை.
(3)தைய்யல் தைக்கவும் ஆசை.

பிடித்தமூன்று உணவு வகைகள்.

(1) கஞ்சி (பழைய சோறு)
(2)பிரியாணி.
(3)இட்லி

அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்.
(1)(முதல்வன் திரைப்படத்திலிருந்து)

குறுக்கு சிறுத்தவளே... என்னை குங்குமத்தில் கரைச்சவளே...நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்... என்னக் கொஞ்சம் பூசு தாயே...
உன் கொலுசுக்கு மனியாக... என்னக் கொஞ்சம் மாத்து தாயே.

(2)இதய கோவில் படத்திலிருந்து)

நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூஙவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்.

(3)காணொளியில் இனைத்துள்ளேன்

பிடித்த மூன்று படங்கள்.

(1) அந்நியன்.
(2) அந்நியன்.
(3) அந்நியன்.

இது இல்லாம வாழமுடியாது மூன்று விஷயம்.

(1) உயிர் இல்லாமல் வாழ முடியாது.
(2) இறை நம்பிக்கை.
(3) அமைதி.

இவ்வளவுதான் என்னால் எழுத முடியும்,இதுக்கு மேலே என்னத்தை நாம எழுதி அதை நீங்கள் படித்து கண்டனங்களை அனுப்புவதற்குள் நான் எஸ்கேப்.
என்னை இப்பதிவிற்கு தொடராக அழைத்ததற்கு லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் எழுதி விட்டிர்கள் என்று நினைக்கிறேன்,சகோ ஆஷிக் அவர்களும் சகொ ஹைதர் அலி அவர்களும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன் எதற்கும் சொல்லி பாற்ப்போம்.

45 comments:

  1. //////
    நான் விரும்பும் மூன்று விஷயங்கள்./
    .////////


    தாஙகள் விரும்பும் இம்மூன்றும் நடந்துவிட்டால் உலகத்தில் பிரச்சனைகளே இருக்காது...

    ReplyDelete
  2. /////
    கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்.

    (1) கவிதைக்கு எப்படி மெருகூட்டுவது என்று கற்றுக் கொள்ள ஆசை.
    /////////

    கவிதை சுவாசித்து நேசித்து இந்த சமுகத்தோடு ஒண்றிவிட்டால் போதும் கவிதைகள் மேருகேரும்...

    ReplyDelete
  3. தங்களின் இப்படைப்பு சுவாரஸ்யமானது தங்களின் பிரிதிபலிப்பாக தெரிகிறது..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. உங்களுடைய கவிதை உங்களுக்குள்ளே...

    ReplyDelete
  5. ஊரில் இருக்கும் போது சமையல் அட்டாகாசங்கள் ப்ளாக்கை திறந்து பிரியாணி செய்து,வீட்டில் பாராட்டைப் பெருவது....

    எப்பம் எனக்கு பிரியாணி ?

    ReplyDelete
  6. //விதை வீதி # சௌந்தர் said...

    தாஙகள் விரும்பும் இம்மூன்றும் நடந்துவிட்டால் உலகத்தில் பிரச்சனைகளே இருக்காது...//

    சரியாக சொன்னிர்கள் சகோ.

    ReplyDelete
  7. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    /////
    கவிதை சுவாசித்து நேசித்து இந்த சமுகத்தோடு ஒண்றிவிட்டால் போதும் கவிதைகள் மேருகேரும்...

    ஆமா...உங்களை போன்ற கவிஞர்களின் நட்பால் மட்டுமே அது முடியும்,கண்டிப்பாக உங்களை ஃபால்லொவ் பன்னவேன்டியதுதான் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  8. //கவிதை வீதி # சௌந்தர் said...
    தங்களின் இப்படைப்பு சுவாரஸ்யமானது தங்களின் பிரிதிபலிப்பாக தெரிகிறது..

    வாழ்த்துக்கள்..

    ரொம்ப நன்றி சகோ

    ReplyDelete
  9. அந்நியன்2 என்னே சுறு சுறுப்பு. நல்லாவே சொல்லி இருக்கிங்க. உங்க ஹஜ் பயணம் அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //Reverie said...

    எப்போ பிரியாணி?//

    கண்டிப்பாக பெருநாளைக்கு அனுப்பி வைக்கிறேன் சகோ.
    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  11. //இதுக்கு மேலே என்னத்தை நாம எழுதி அதை நீங்கள் படித்து கண்டனங்களை அனுப்புவதற்குள் நான் எஸ்கேப்.//

    இப்போ மட்டும் விட்டிடுவமா என்ன?:)).

    சூப்பராகச் சொல்லிட்டீங்க மூன்றையும்...

    //(3)என்னிடம் பணம் இருக்கும் போது எல்லோருக்கும் உதவிடனும்.

    // பணம் என்ன பணம், பின்னூட்டம் போட்டாலே போதுமே எல்லோருக்கும்..:)).. ஹையோ தெரியாமல் உளறிட்டேன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  12. எல்லாமே நல்ல விஷயம் உங்கள் மனித நேயம் வாழ்க..

    //வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.

    (1) தீமைககளிருந்து விலகி நண்மைகளை ஏவி ஹஜ் செய்யனும்(இன்ஷா அல்லாஹ்)
    (2)வறுமையிலிருந்த என்னை வைர பொக்கிஷமாக மாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கனும்.
    (3)என்னிடம் பணம் இருக்கும் போது எல்லோருக்கும் உதவிடனும்//

    இவை மூன்றுக்கும் என் பிரார்த்தனைகள்

    ReplyDelete
  13. //Lakshmi said...
    அந்நியன்2 என்னே சுறு சுறுப்பு. நல்லாவே சொல்லி இருக்கிங்க. உங்க ஹஜ் பயணம் அமைய வாழ்த்துக்கள்.//

    ரொம்ப நன்றிமா...

    உங்கள் அழைப்பில் வந்த சுறு சுறுப்புதான்.
    கருதிற்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  14. //athira said...
    //இதுக்கு மேலே என்னத்தை நாம எழுதி அதை நீங்கள் படித்து கண்டனங்களை அனுப்புவதற்குள் நான் எஸ்கேப்.//

    இப்போ மட்டும் விட்டிடுவமா என்ன?:)).

    அதானே... உங்களிடம் இருந்து நாங்கள்
    தப்பிச்சிடுவமா என்ன?

    சூப்பராகச் சொல்லிட்டீங்க மூன்றையும்...

    ரொம்ப நன்றி சகோ.

    //(3)என்னிடம் பணம் இருக்கும் போது எல்லோருக்கும் உதவிடனும்.

    // பணம் என்ன பணம், பின்னூட்டம் போட்டாலே போதுமே எல்லோருக்கும்..:)).. ஹையோ தெரியாமல் உளறிட்டேன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).//

    எங்கே எஸ்கேப்பு...பின்னாடியே உங்கள் ஏரியா பக்கம் வர்ரோம்லே...

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. //Riyas said...
    எல்லாமே நல்ல விஷயம் உங்கள் மனித நேயம் வாழ்க..

    இவை மூன்றுக்கும் என் பிரார்த்தனைகள்.


    வருகைக்கும் உங்கள் பிறார்த்தனைக்கும் ரொம்ப நன்றி ரியாஸ் பாய்.

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அருமையான பல கருத்துக்களை கூறி உள்ளீர்கள். சகோ.அய்யூப். நன்றி.

    அதிலும்... //வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.// மகிழ்வான நிறைந்த ஆயுளுடன், நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

    ஆஹா... என்னையும் தொடரில் கோர்த்து விட்டுட்டீங்களா..! ஏற்கனவே "இரண்டு அழைப்புகள்" அர்ரியர்ஸ்... இப்போது இந்த புதிய அரியர்... ம்ம்ம்... இது ஈசியான நல்ல கான்செப்ட், இன்ஷாஅல்லாஹ் இதை முதலில் கிளியர் பண்ணிடறேன்..!

    ReplyDelete
  17. பதிகளில் 'அந்நியன்' டச். ;)

    உங்கள் ஹஜ் யாத்திரை நிறைவாக அமைய என் பிரார்த்தனைகள் அயுப்.

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    உண்மையை எதார்த்தமாக எழுதி உள்ளீர்கள் சகோ.

    //வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.//

    துஆ செய்கிறேன்.

    ReplyDelete
  19. நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு .:-)

    ReplyDelete
  20. //(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//

    இந்த டாப்பிக்குள் போனால் ....திரும்ப வரவே பயமாக இருக்கும் .இறைவனின் நாட்டம் எப்படினு அவனே அறிவான்....!!

    ReplyDelete
  21. //NIZAMUDEEN said...
    Ellaam Nallaa Sonneenga...//

    ரொம்ப நன்றி அண்ணே!

    ReplyDelete
  22. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

    அருமையான பல கருத்துக்களை கூறி உள்ளீர்கள். சகோ.அய்யூப். நன்றி.

    அதிலும்... //வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.// மகிழ்வான நிறைந்த ஆயுளுடன், நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

    ரொம்ப நன்றி சகோ.

    ஆஹா... என்னையும் தொடரில் கோர்த்து விட்டுட்டீங்களா..! ஏற்கனவே "இரண்டு அழைப்புகள்" அர்ரியர்ஸ்... இப்போது இந்த புதிய அரியர்... ம்ம்ம்... இது ஈசியான நல்ல கான்செப்ட், இன்ஷாஅல்லாஹ் இதை முதலில் கிளியர் பண்ணிடறேன்..!//*

    நீங்கள் பதிவுலகில் படு பிசியாக உள்ள நபர் என்று தெரியும் இருந்தாலும் சும்மா அழைத்து பார்த்தேன் சகோ.

    வருகைக்கும் உங்கள் கருதிற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  23. //இமா said...
    பதிகளில் 'அந்நியன்' டச். ;)

    உங்கள் ஹஜ் யாத்திரை நிறைவாக அமைய என் பிரார்த்தனைகள் அயுப்.//

    ரொம்ப நன்றி சிஸ்டர்.

    உங்கள் பிறார்த்தனைக்கும் திரும்பவும் நன்றியை சொல்லிக் கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  24. //ஆயிஷா அபுல். said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    உண்மையை எதார்த்தமாக எழுதி உள்ளீர்கள் சகோ.

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
    உங்கள் கருத்திற்கும் வரவுக்கும் நன்றி சகோ.

    //வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.//

    துஆ செய்கிறேன்.//

    ரொம்ப நன்றி சிஸ்டர்.

    ReplyDelete
  25. //ஜெய்லானி said...
    நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு .:-)//

    யெஸ்...பாஸ்.

    ReplyDelete
  26. //ஜெய்லானி said...
    //(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//

    இந்த டாப்பிக்குள் போனால் ....திரும்ப வரவே பயமாக இருக்கும் .இறைவனின் நாட்டம் எப்படினு அவனே அறிவான்....!!//

    ஆமா பாஸ் எல்லாம் அறிந்தவன் அவன்தான்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.

    ReplyDelete
  27. எல்லாமே அருமை.

    ReplyDelete
  28. //Raazi said...
    எல்லாமே அருமை.//

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  29. சகோ. அய்யூப்,
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    உங்கள் மனித நேயம் மேலும் வளர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. //மு.ஜபருல்லாஹ் said...
    சகோ. அய்யூப்,
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    உங்கள் மனித நேயம் மேலும் வளர வாழ்த்துக்கள்!//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  31. //1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//

    ஆரம்பமே கேட்க நினைத்து விட்டுவிட்டேன், இது எனக்குப் புரியவில்லை, ஏன் மரணிக்கும்போது மதம் மாறிடுவீங்களோ இல்லைத்தானே? முஸ்லிம்மாகத்தானே இருப்பீங்க? அப்போ என்ன சொல்றீங்க? முடிந்தால் விளக்கம் பிளீஸ்?.

    ReplyDelete
  32. //நீங்கள் பதிவுலகில் படு பிசியாக உள்ள நபர் என்று தெரியும்//---அடடே அப்படியா சேதி...!?


    //இருந்தாலும் சும்மா(?!) அழைத்து பார்த்தேன் சகோ.//---ஆஹா முன்னாடியே சொல்லி இருக்கலாமே..?!


    சரி, பரவாயில்லை...சகோ.


    "நிரூபன்-சித்ரா-ஆஷிக்:- 3 பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!"


    //எழுதுவார்கள் என்று நம்புகிறேன்//---எழுதி தங்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் சகோ.அய்யூப்.

    ReplyDelete
  33. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோ தொடர் பதிவை எழுதிகிறேன் ஆனால் கொஞ்சம் தாமதமாகும் பரவயில்லையா?

    ஆனால் கண்டிப்பாக எழுதுவேன்

    ReplyDelete
  34. )உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.//

    நிதர்சனம்...

    ReplyDelete
  35. //அதிர சொன்னது:
    //1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.//

    ஆரம்பமே கேட்க நினைத்து விட்டுவிட்டேன், இது எனக்குப் புரியவில்லை, ஏன் மரணிக்கும்போது மதம் மாறிடுவீங்களோ இல்லைத்தானே? முஸ்லிம்மாகத்தானே இருப்பீங்க? அப்போ என்ன சொல்றீங்க? முடிந்தால் விளக்கம் பிளீஸ்?.//

    விளக்கம் சொல்லும் அளவிற்கு நான் ஒன்னும் மகான் அல்ல சகோ,சாதாரன ஒரு மனுஷன்.
    இஸ்லாமிய மார்க்க பிராகாரம் ஒரு முஸ்லிமானவன் இறக்கும் தருவாயில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்லி மரணம் அடைந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    பெயரளவில் இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு நன்மை செய்யுகிற மாதிரி உங்களிடம் காண்பித்துக் கொண்டு மறைமுகமாக வட்டி வாங்குவதும் பிறருக்கு அநியாயம் செய்வதும் அப்பாவிகளை ஈவு இரக்கமின்றி கொல்லுவதும் என்ற தொழிலை செய்து கொண்டு உதட்டலவில் இஸ்லாமியனாக இருக்காமல் உள்ளத்தலவில் இஸ்லாமியனாக மரனிக்கனும் என்று சொன்னேன் சகோ.

    அப்படி தீமை செய்து...உங்களிடமும் எங்களிடமும் நன்மை செய்யுகிற மாதிரி நடித்து மரணிக்கப் போகும் முஸ்லிமானவன் கண்டிப்பாக கலிமா சொல்லமாட்டான்.

    நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் இறைவன் காணுகிறான்.

    வருகைக்கும் குறுக்கு விசாரனைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  36. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
    //நீங்கள் பதிவுலகில் படு பிசியாக உள்ள நபர் என்று தெரியும்//---அடடே அப்படியா சேதி...!?


    //இருந்தாலும் சும்மா(?!) அழைத்து பார்த்தேன் சகோ.//---ஆஹா முன்னாடியே சொல்லி இருக்கலாமே..?!


    சரி, பரவாயில்லை...சகோ.

    அழைப்பை ஏற்றதிற்கு நன்றி சகோ.

    கூட மூன்று பேரையும் இழுத்து விட்டு விட்டிர்கள்.

    நன்றி!

    ReplyDelete
  37. //ஹைதர் அலி said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோ தொடர் பதிவை எழுதிகிறேன் ஆனால் கொஞ்சம் தாமதமாகும் பரவயில்லையா?

    ஆனால் கண்டிப்பாக எழுதுவேன்//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    நீங்கள் அழைப்பை ஏற்றதே பெரிய விசயம் எப்போ வேனும்னாலும் எழுதுங்கோ சகோ.

    ReplyDelete
  38. //இராஜராஜேஸ்வரி said...
    )உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.//

    நிதர்சனம்...//


    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  39. அய்யூப் அண்ணா

    நான் கமெண்ட் போட்டது நீங்க பப்ளீஸ் பண்ணலையா? அல்லது உங்களுக்கு என் கமெண்ட் வரலையா??? 2,3 கமெண்ட் போட்ட மாதிரி ஞாபகம் இருக்கு.... :(

    ReplyDelete
  40. ஆஆஆஆஆஅ.. எந்தாப் பெரிய விளக்கம், மிக்க நன்றி அந்நியன் ரூ. எனக்கு அதன் கருத்துப் புரியவில்லை, இப்போ விளங்கிட்டுது.

    //வருகைக்கும் குறுக்கு விசாரனைக்கும் நன்றி சகோ.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது குறுக்கு விசாரணை இல்லை, தெரியாததைக் கேட்டுத் தெரிஞ்சுகொண்டேன்.

    மிக்க நன்றி. ஜெய் க்கே இப்போதான் புரிஞ்சிருக்கும்:)))... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அந்நியன்.

    ReplyDelete
  41. //ஆமினா said...
    அய்யூப் அண்ணா

    நான் கமெண்ட் போட்டது நீங்க பப்ளீஸ் பண்ணலையா? அல்லது உங்களுக்கு என் கமெண்ட் வரலையா??? 2,3 கமெண்ட் போட்ட மாதிரி ஞாபகம் இருக்கு.... :(//

    நானா?

    நான் ஆட்டோ மெட்டிக்கில்தானே வைத்திருக்கேன் உங்கள் கருத்துரைகளை இணைப்பதற்கு.

    ஓ..கே..சகோ,வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  42. //athira said...
    ஆஆஆஆஆஅ.. எந்தாப் பெரிய விளக்கம், மிக்க நன்றி அந்நியன் ரூ. எனக்கு அதன் கருத்துப் புரியவில்லை, இப்போ விளங்கிட்டுது.

    //வருகைக்கும் குறுக்கு விசாரனைக்கும் நன்றி சகோ.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது குறுக்கு விசாரணை இல்லை, தெரியாததைக் கேட்டுத் தெரிஞ்சுகொண்டேன்.

    மிக்க நன்றி. ஜெய் க்கே இப்போதான் புரிஞ்சிருக்கும்:)))... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அந்நியன்.//


    இடையில் பாஸ்ஸை(ஜெய்)வேர இழுத்து விட்டிர்களே...
    அனேகமாக அவர் போர் தொடுத்தாலும் தொடுக்கலாம் நான் வீன் வம்புக்குலாம் போறது இல்லை.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  43. //கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அந்நியன்.//

    ஸ்க்கூல் படிக்கும் போது வாத்தியார் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது படிச்சு கிழிச்சது போதும்,போயி ரெண்டு வடை வாங்கிட்டு வா..ண்னு.

    ஞாபகப் படுத்தியதற்கு நன்றி சகோ.

    ReplyDelete