ஊரோடு உறவுகள் இல்லை!
பேரோடு யாரும் பிறப்பதும் இல்லை!
அன்போடு அழைக்க மானிடர் இல்லை!
பண்போடு பார்க்க மனம் கசிந்தவரும் இல்லை!
கணவுகள் காணும் நான் ஒரு ஏழை!
வாழ்க்கையை அமைக்க தெரியாத ஒரு பாவை!
புரண்டோடும் பொழுதுகளே!
என் கண்ணீரை கொஞ்சம் பாராயோ!
சோகத்தில் அழுது வடிக்கும் கண்ணீர் கூட!
கரு...மேகத்தை கரைத்து விடும்!
தாகத்தில் நான் கதறி அழுதும்...மனிதா
போதத்தில் தள்ளாடுகிறாயே ஏன்?

கைக்கு எட்டாத வானமும்!
உனக்கு ஏதேனும் தரவா என கேட்கிறது!
என்னை சுற்றியுள்ள பசுமையும்!
பசி மயக்கம் கண்டு...அழுகிறது!
நளினம் ஆடும் தென்றலும்!
சோகத்தில் நின்றுதான் போனது!
புது வரவாய் பூக்கும் பூக்கள் கூட!
என் வறுமை கண்டு கண்ணீர் சிந்தியது!
இயற்கையே... என்னை கண்டு அழும்போது!
இயற்கை எய்திடப் போகும் நீ அழ வில்லையே!
புன்னகை வலையில் மறைந்து கிடக்கும்!
நீதான் மனித பிறவியோ?
கருவானேன்... பின்பு உருவானேன்!
சாக்கடையில் ஜனித்த நான்!
பூக்கடையையும் கண்டதில்லை!
யார் கண்ணுலேயும் படுவதும் இல்லை!
சுட்டப் புண்ணும் ஆறி விடும்!
கை பட்ட பூவும் மலர்ந்து விடும்!
என் வாழ்க்கை மட்டும் மாற வில்லை!
ஏழையாய் பிறந்ததினால்!
சொந்தத்தில் வந்த பாசமும்!
சோகத்தில் உடைந்து பிரிந்தனர்!
பந்தத்தில் இருந்த நேசமும்!
பசியின் கொடுமைக்கு மாண்டனர்!
தோல்வியின் முதற்படி வெற்றி என்றார்கள்!
வெற்றியின் ரகசியம் பணமும் என்றார்கள்!
இரண்டும் இல்லாத என் வாழ்க்கைக்கு!
மரணம்தான் பரிசா?
ஆவேச வரிகள்---
புன்னைகையில் பிழிந்தெடுத்த என் அன்புத் தமிழ் வார்த்தைகளை பின்னுரையில் ஆரம்பித்து,முன்னுரையில் முடிப்பவன்தான் இந்த அந்நியன்,கிழக்கே உதிக்கும் சூரியனும் சரி,இரவில் ஜொலிக்கும் சந்திரனும் சரி கடவுளின் கட்டுப் பாட்டுக்குள்தான் இருக்கின்றது.
மனித சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கிய தடைக்"கல்" மனித சமுதாயமே,ஏழையாக பிறந்தது எனது குற்றமா? இல்லை பதறாத காரியம் சிதறாது, பயம் கொண்ட மனம் சிறக்காது என்று சொன்னவரின் குற்றமா? யார் குற்றம்?
நேற்றென்பது முடிந்துபோனது,நாளையென்பது அறியாதது,இன்றிந்த நொடியே,நாம் வாழ்ந்துணர்வது...வாழ்க்கை இப்படி இருக்க ஆனவம் எதற்கு?
காலுக்கு தோல் செறுப்பு வாங்க பணம் இல்லையே...என்று கடவுளிடம் வேண்டுகிறாயே...கால் இல்லாத மனிதர்களின் நிலையை நினைத்து பார்த்தாயா?
நூற்று கணக்கான நேற்றுகள் நகர்ந்து விட்டன ஆயிர கணக்கான நாளைகள் பின்பு வரும்,ஒரே ஒரு "இன்று" மட்டும் ஏழைக்கு உதவி செய்...வாழ்க்கையில் என்றுமே சந்தோசமா இருப்பாய்.
கருமியோடு உறவு வைத்தால் இருமியே நம்மை கொண்ணுடுவான்.
பொய்யனுடன் கூட்டு வைத்தால் சமயம் கிடைக்கும் போது மாட்டி விடுவான்.
முட்டாளோடும் ஒட்டாதிர் அவன் உங்களுக்கு உதவி செய்தாலும் அது உபத்திரத்தில்தான் போயி முடியும்.
பாவியோடு சுற்றாதிர் ஒரு பவுன் கொழுசுக்கு கூட உன்னை விற்றுவிடுவான்.
ஏழைகளை ஆதரியுங்கள் வாழ் நாள் பூரா நன்றியுள்ளவனாக இருப்பான்.
கவிதை எழுதி பழகுறேன்,கவிஞர்கள் யாராவது.... குறைகள் இருந்தால் கண்டு பிடித்து சொல்லவும்.
நல்லாத்தான் இருக்கு ..ஆனா ரொம்ப தப்பு தப்பா எழுதி இருக்கீங்க ..உலகம் பூரா உங்கள படிப்பாங்க ...
ReplyDeleteஆனவம், செறுப்பு, கொழுசு, கொண்ணுடுவான்.
ReplyDelete//கோவை நேரம் said...
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு ..ஆனா ரொம்ப தப்பு தப்பா எழுதி இருக்கீங்க ..உலகம் பூரா உங்கள படிப்பாங்க ...//
ஓ..அப்படியா சகோ.
தவற்றை சுற்றி காண்பித்ததற்கு நன்றி!
நானும் கவிதையில் தவறான வார்த்தைகளை உபயோகம் செய்ய வில்லையே...ஆவேச வரியில்தானே ஆனவம்,செறுப்பு,கொழுசு, கொண்ணுடுவான் என்று எழுதி இருக்கேன்.
எல்லோரும் டிஷ்கி,முஷ்கி என்றும் கடைசியில் எழுதுவார்கள்,அது போல நான் உரை நடை வரியில் அதை எழுதினேன்,இருந்த போதிலும் உங்களின் கருத்துரையை ஏற்று அடுத்த பதிவில் சரி செய்து கொள்கிறேன்.
நன்றி சகோ!
வழக்கம்போல் கவிதை கலக்கல் அயூப்....ஆவேசமும்...
ReplyDeleteதங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக சகோ.அய்யூப்.
ReplyDeleteஆழமான கவிதை வரிகள்
அழகான தமிழ்ச்சொற்கள்
மறக்கக்கூடாத நல்ல கருத்துக்கள் -அவற்றை
மறக்கவியலா படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
//Reverie said...
ReplyDeleteவழக்கம்போல் கவிதை கலக்கல் அயூப்....ஆவேசமும்...//
ரொம்ப நன்றி பாஸ்.
குறைகள் இருந்தால் தெரிவியுங்கள்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
ReplyDeleteதங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக சகோ.அய்யூப்.
ஆழமான கவிதை வரிகள்
அழகான தமிழ்ச்சொற்கள்
மறக்கக்கூடாத நல்ல கருத்துக்கள் -அவற்றை
மறக்கவியலா படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.//
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!குறைகளை சுற்றி காண்பித்தால் திறுத்தி கொள்வேன்.
நன்றி!
ஆஆஆஆஆஆ.... கவித கவித...கவித... அந்நியன் கலக்குறீங்க...
ReplyDeleteசகோ.அய்யூப்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நூற்று கணக்கான நேற்றுகள் நகர்ந்து விட்டன ஆயிர கணக்கான நாளைகள் பின்பு வரும்,ஒரே ஒரு "இன்று" மட்டும் ஏழைக்கு உதவி செய்...வாழ்க்கையில் என்றுமே சந்தோசமா இருப்பாய்
உண்மையிலேயே வைர வரிகள்!
எழுத்து பிழைகள் பொருளையே மாற்றிவிடும்.
திருத்திக்கொள்ளுங்கள்.
//thira said...
ReplyDeleteஆஆஆஆஆஆ.... கவித கவித...கவித... அந்நியன் கலக்குறீங்க...//
வாங்கோ சகோ...
அந்நியன்லாம் கவிதை எழுதி அதற்கு நாம் பின்னூட்டம் போட்ற நிலமைக்கு வந்துட்டோம்னு ஆஆஆஆ..ஆஅ...ஆஆ..என்று கத்துறது புரியுது சகோ.
என்ன செய்ய பதிவுலகம்னு வந்துட்டால் எல்லாவற்றையும் அனுபவித்துதானே ஆகனும்.
நன்றி!
//மு.ஜபருல்லாஹ் said...
ReplyDeleteசகோ.அய்யூப்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எழுத்து பிழைகள் பொருளையே மாற்றிவிடும்.
திருத்திக்கொள்ளுங்கள்.//
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
உங்கள் அறிவுரைகளை ஏற்று கொள்கிறேன் சகோ, பிழைகள் உள்ள இடத்தை சுற்றி காண்பித்தால் திறுத்தி கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
என்னுடைய கவிதையில் இலக்கணம் மற்றும் மறை முக வர்ணிப்புகள் காண கிடைக்காது காரணம் கவியறிவு அந்தளவிற்கு கிடையாது.
கருத்திட்டதிற்கு நன்றி சகோ!
:)).
ReplyDeleteநானும் சொல்ல நினைத்தேன் அந்நியன், ஆனா அது கைமாறி ரைப்பண்ணியிருக்கலாம் என விட்டுவிட்டேன்...
2வது பந்தி.. கணவு அல்ல கனவு.
//athira said...
ReplyDelete:)).
நானும் சொல்ல நினைத்தேன் அந்நியன், ஆனா அது கைமாறி ரைப்பண்ணியிருக்கலாம் என விட்டுவிட்டேன்...
2வது பந்தி.. கணவு அல்ல கனவு.//
சுற்றி காண்பித்ததற்கு நன்றி சகோ!
ஆம்...டைப் செய்யும் போது தவறு நிகழ்ந்து விட்டது.
சுதாரித்து கொள்கிறேன்.
செறுப்பு @ செருப்பு
ReplyDeleteகொண்ணுடுவான் @ கொன்னுடுவான்
கொழுசுக்கு @கொலுசுக்கு
//மு.ஜபருல்லாஹ் said...
ReplyDeleteசெறுப்பு @ செருப்பு
கொண்ணுடுவான் @ கொன்னுடுவான்
கொழுசுக்கு @கொலுசுக்கு//
டைப் செய்யும் போது தவறு நிகழ்ந்து விட்டது,சுதாரித்து கொள்கிறேன்.
சுற்றி காண்பித்ததற்கு நன்றி சகோ!
அந்நியன்..பின்னூட்டுபவர்கள் எல்லாம் தமிழாசிரியர்களாகி விட்டார்களே
ReplyDelete@ ஸாதிகா said...
ReplyDeleteபேராசிரியை அவர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்!
ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். அதிகமாக மூக்கை நுழைத்துவிட்டேனோ?
//ஸாதிகா said...
ReplyDeleteஅந்நியன்..பின்னூட்டுபவர்கள் எல்லாம் தமிழாசிரியர்களாகி விட்டார்களே.
ஆசிரியராக இருந்து கொண்டும் பின்னூட்டம் இடலாம் இல்லையா?
சுற்றி வளைத்து அண்ணன் தலையில் கை வைக்கிற மாதிரி தெரியுதே.
நன்றி சகோ.
//மு.ஜபருல்லாஹ் said...
ReplyDeleteஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன். அதிகமாக மூக்கை நுழைத்துவிட்டேனோ?//
இல்லைணா....தவற்றை யார் வேனும்னாலும் சுற்றி காண்பிக்கலாம்.
நன்றி.
தவறை யாருமே சுட்டிக்காட்டவில்லை என்பதால்தான் நான் மூக்கை நுழைக்கும்படி ஆகிவிட்டது. புரிகிறதா சகோதரா?
ReplyDelete//மு.ஜபருல்லாஹ் said...
ReplyDeleteதவறை யாருமே சுட்டிக்காட்டவில்லை என்பதால்தான் நான் மூக்கை நுழைக்கும்படி ஆகிவிட்டது. புரிகிறதா சகோதரா?//
உரிமை என்ற முறையில் நீங்கள் சுற்றி காண்பித்துள்ளிர்கள் இது சாதிக்கா அக்காவிற்கு நகைப்பா தெரிகிறது.
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி அண்ணன்.