Wednesday, August 10, 2011

யார் கொலையாளி?


நிலவொளி முற்றத்தில்
ஆசை தீர்க்கும் திட்டத்தில்
நிழலாய் இரண்டு உருவங்கள்
நிஜமான உருவத்தில்.

விரல் தொட்டு பேசியே
எல்லை மீறவும் ஆசையே
குளிர் காற்றின் பாவனையும்
தளிர் அவளின் தோரனையும்

துடி துடிக்கும் இதயங்களுடன்
நெருங்கி வந்தனர்சிறுபயங்களுடன்
அரும்பியதும் அவன் விரும்பியதும்
பறக்க போகிறது மானம்


பிஞ்சு மகளை காணோம் என்று
நெஞ்சு வலிக்க பெற்றோர்கள்
காவல் நிலையம் சென்றங்கே
கண்ணீர் வடித்து அழுதார்கள்


காரணம் அறிந்த போலிசார்
யாரேனும் இதற்கு சதியா என்றனர்
பதினெட்டு கடக்காதவளுக்கு
யாரய்யா சதி செய்வார்?


உரிமை என அவனின் கல் நெஞ்சம்
அவளை சீரழிக்கப் போகிறது
அறியாமை என்னும் பிஞ்சு அவள்
சீரழியும் நேரமிது


மழலை பருவ மங்கையே
கண்ணீரில் மிதக்கிறாள் உன் தங்கையே
போலியில்லா உன் முகம் பார்த்து
உன் சிறகுகளை பிடுங்க வில்லையே.


தொலை பேசியின் அலறலும் 
எதிர் முனை உலறலும் 
நம்ப முடிய வில்லை போலிசுக்கு
பெற்றோருடன் பறந்தது வாகனம்.


எத்தனை வேதனை இவர்களுக்கு
மனசு தந்தியடிக்க 
இரு இதழ்களும் துடி துடிக்க
விழிகளிலும் அவர் பேசும் மொழிகளிலும் கண்ணீர் தெறிந்தது.


கூடிய கூட்டத்தையும் 
கூவி அழைத்த கிழவனையும்
குடைந்து எடுத்தது போலிசு.
கொல்லப் பட்ட சடலங்களும்
இனி எங்களை யாரும் தேடாதிர் என்றது.



சத்தம் போட்டு 
கண்களை பொத்திக் கொண்டு
கதறி அழுதது ஒரு கூட்டம்

ரத்தம் பார்த்து மனதினை
தட்டிக் கொண்டு சிதறி ஓடியது
இன்னொறு கூட்டம்.

அப்போ கொலையாளி யார்?

நண்பர்களே இது கவிதை இல்லை இது ஒரு புதிர்.


வஞ்சகம் தீர்க்க நய வஞ்சகம் செய்து ஒரு அப்பாவி பெண்ணை சீரழித்தான் காமுகன்,இறுதியில் கொலைதான் தண்டனை,அவன் மட்டும் இல்லை அவளும் கொலை செய்ய பட்டாள் அப்போ அவர்களை கொன்றது யார்?


இருட்டில் நடந்தது காதலா?


இல்லை இருவருக்கும் நடந்த மோதலா?


பரந்து விரிந்த பூமியில் படு பயங்கரத்தின் ஊதலா? 


யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.

காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை.



























20 comments:

  1. ஸலாம் உண்டாகட்டும் சகோ.அய்யூப்,

    என்ன இது..? கொடிய சோகம்..?

    //கொலையாளி யார்?//

    ///யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.
    காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை.///

    ---காத்திருக்கிறேன்..!

    ReplyDelete
  2. கவிதையிலேயே புதிரா?

    கண்டுபிடிக்க அடுத்த பதிவு வரை வெயிட்டுறேன் :)

    ReplyDelete
  3. ஸலாமுன் அலைக்கும் சகோ.அய்யூப்,

    பதிவிலிருந்து கவிதை.
    கவிதையிலிருந்து புதிர் (விடுகதை...?)
    அடுத்தது என்ன சகோதரா?

    ReplyDelete
  4. கவிஞர் அந்நியனுக்கு வணக்கம்!!!!

    உண்மையிலேயே அதிலிருக்கும் படம் உண்மையாக எடுக்கப்பட்டதோ? பார்க்க முடியவில்லை. இன்றுதான், கயிறு போட்டுத் தூங்கித் தற்கொலை செய்வோர் பற்றி ஒருவரோடு கதைத்தேன்... அந்தக் கையுடன் இப்படம்...

    ReplyDelete
  5. கொலை செய்தது அப்பெண்ணை விரும்பிய இன்னொரு காதலனோ?????.

    அந்நியன் படத்தைக் கீழே போட்டுக் காட்டி என்னை இப்பக்கம் வராமல் செய்யப்போறீங்க ... பயம்ம்ம்ம்மாக்கிடக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

    ReplyDelete
  6. இப்போதான் பார்த்தேன் இது கோண்டாவில் சம்பவம்தானே?

    அய்யூப் நீங்க இலங்கையோ?

    ReplyDelete
  7. இதுல நாம வீக்...

    ReplyDelete
  8. யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.

    நிஜம் எப்பவுமே சுடுமே அதேதான்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

    வேதனையான வரிகள்.

    //யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.

    காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை//

    காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  10. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
    ஸலாம் உண்டாகட்டும் சகோ.அய்யூப்,

    என்ன இது..? கொடிய சோகம்..?

    //கொலையாளி யார்?//

    ///யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.
    காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை.///

    ---காத்திருக்கிறேன்..!//

    வ லைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆசிக்.

    காத்திருங்கள் விடை கிடைக்கும் விரைவில்...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. //ஆமினா said...
    கவிதையிலேயே புதிரா?

    கண்டுபிடிக்க அடுத்த பதிவு வரை வெயிட்டுறேன் :)//

    காத்திருங்கள் விடை கிடைக்கும் விரைவில் சகோ.
    கருத்திட்டமைக்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  12. //மு.ஜபருல்லாஹ் said...
    ஸலாமுன் அலைக்கும் சகோ.அய்யூப்,

    பதிவிலிருந்து கவிதை.
    கவிதையிலிருந்து புதிர் (விடுகதை...?)
    அடுத்தது என்ன சகோதரா?//

    வ லைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    அடுத்து என்னேனு யாருக்குமே தெரியாது சகோ,எப்படி முடிக்கனும்னு தீவிரமாக யோசிக்கிறேன்.

    காத்திருங்கள் விடை கிடைக்கும்.

    ReplyDelete
  13. //athira said...
    கவிஞர் அந்நியனுக்கு வணக்கம்!!!!

    உண்மையிலேயே அதிலிருக்கும் படம் உண்மையாக எடுக்கப்பட்டதோ? பார்க்க முடியவில்லை. இன்றுதான், கயிறு போட்டுத் தூங்கித் தற்கொலை செய்வோர் பற்றி ஒருவரோடு கதைத்தேன்... அந்தக் கையுடன் இப்படம்...//

    நல் வரவு அதிரா சகோ.

    நீங்கள் கதைத்தது இவர்களைப் பற்றித்தான் என்று நினைக்கிறேன் சம்பவம் நடந்தது நேற்று.

    ReplyDelete
  14. //athira said...
    கொலை செய்தது அப்பெண்ணை விரும்பிய இன்னொரு காதலனோ?????.

    இனிமேல்தான் யோசிக்கனும் முடிவை எப்படி கொண்டு போவது என்று.

    //அந்நியன் படத்தைக் கீழே போட்டுக் காட்டி என்னை இப்பக்கம் வராமல் செய்யப்போறீங்க ... பயம்ம்ம்ம்மாக்கிடக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்:).//

    பூதத்தையே கண்டும் பயப்பிடாத நீங்கள் தம்மா துன்டு அந்நியனை பார்த்தால் பயப்பிடப் போகிறிகள்?

    //அந்நியன் படத்தைக் கீழே போட்டுக் காட்டி என்னை இப்பக்கம் வராமல் செய்யப்போறீங்க ... பயம்ம்ம்ம்மாக்கிடக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்:).//

    அந்நியன் திரைப் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் போர் அடிக்காது சகோ.

    இன் கம் டேக்ஸ்லாம் ஒழுங்கா கட்டுகிறிர்கள்தானே?

    ReplyDelete
  15. //athira said...
    இப்போதான் பார்த்தேன் இது கோண்டாவில் சம்பவம்தானே?

    அய்யூப் நீங்க இலங்கையோ?

    இல்லை..இல்லை நான் இலங்கையன் இல்லை இந்தியன்.

    இலங்கைக்கு ஒரு பத்து தடவை போயிருக்கேன்.

    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ அதிரா.

    ReplyDelete
  16. //Reverie said...
    இதுல நாம வீக்...//

    எதுலே பாஸ்?

    வருகைக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  17. //Lakshmi said...
    யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.

    நிஜம் எப்பவுமே சுடுமே அதேதான்.//

    ஆமம்மா...நிஜம் சுடத்தான் செய்யும் நாம் தீயவராக இருந்தால்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.

    ReplyDelete
  18. //ஆயிஷா அபுல். said...
    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

    வேதனையான வரிகள்.

    //யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.

    காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை//

    காத்திருக்கிறோம் .//

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    ஆமா காத்திருப்போம்...சகோ.

    வேதனையானதுதான் என்ன செய்வது சகோ
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  19. வேதனை மிக்க வரிகள்.

    ReplyDelete
  20. //ஸாதிகா said...
    வேதனை மிக்க வரிகள்.//

    வேதனையானதுதான் என்ன செய்வது சகோ
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete