வீடற்று நாதியற்று
வீட்டாரின் உறவற்று
காடற்று கடலற்று
கண்டிராத புகழற்று
நடைப்பாதை புழுதியிலே
விடையில்லா பொழுதினிலே
உடையும் என் மனதினை
ஒட்டிவிட ஆளில்லை.
மரணம் நெருங்குமென்று
கரணம் நானிட்டாலும்
சரணம் துதிப்பாடியே
ரணம் ஆனது வாழ்க்கை.
ஆண்பாதி பெண்பாதி
கண்ணீர் வழியும் சரிபாதி
வெண்மை இதயத்தில்
இருண்ட வாழ்க்கைதான் மீதி.
வெற்று உடம்புகளும்
பற்றற்று போகின
பற்று உறவினமும்
புண்பட்டு மடிந்தன.
கூவ நீரில் நானும்
குழாய் நீரில் நீயும்
போராடி வாழ்ந்தாலும்
மரணம் நிச்சயம்.
உயிரில்லா உறவுகளும்
நடைபிணமாய் அழைகின்றது
பெயரில்லா மனிதர்களும்
படைகொண்டு வாழ்கின்றது.
இதுதான் வாழ்க்கையா
இல்லையேல் இயற்கையா
வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.
என் ஏக்கங்களை தொலைத்து விட்டு
என் ஆக்கங்களை மண்ணில் புதைத்து விட்டு
வீன் தர்க்கத்தில் வாதிட்டால்
விளங்குமா வாழ்க்கை?
இறுகிய இதயத்தில்
இறையருள் பெற்றிட வேண்டும்
குறுகிய காலத்தில்
குறைகள் போக்கிட வேண்டும்
அங்கும் இங்கும் கடன்பெற்று
அன்பு எனும் பயிரை விதைத்திட்டு
அல்லல் படும் மாந்தர்களை
அனைத்திடுவோம் இருகரம் தொட்டு.
இலை உதிர்ந்து கிளை ஒடிந்து
கருகி போன மரம்கூட தளிர்கின்றது
நிலை குழைந்து நில்லாமல்
கலை மகள் காவியமாய்
நிற்பாய் என நான் நம்புகிறேன்.
வலிகள் நிறைந்த உன் வாழ்க்கையில்
நல் வழிகள் திறக்கட்டும்.
ரணங்கள் ஆன உன் மேனிகள்
நருமணம் கொண்டு சிறக்கட்டும்.
![]() |
வாழ்க ஏழைகள். |
இன்னைக்கு அம்பி போல...அந்நியன் மிஸ்ஸிங்...ரசித்தேன்...
ReplyDelete//ரெவெரி said...
ReplyDeleteஇன்னைக்கு அம்பி போல...அந்நியன் மிஸ்ஸிங்...ரசித்தேன்...//
அந்நியனாகவே பதிவிட்டால் எனது மூளை எரிந்து விடும் இடை இடையே கூலாகட்டும் என்பதற்க்காகவே இப்பதிவு.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
அருமையான வரிகள் சகோ அனைத்தும் அருகி பருகி நிறைந்தன என்னுள்ளிலும் ....
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteசகோ.அய்யூப்...
சுருக்கமான சுரீர் வார்த்தைகள்.
விரிவான விளாசல் கருத்துக்கள்.
மீண்டும் ஓர் அருமையான ஆக்கம் சகோ.
மிக்க நன்றி.
புலிகள் அழிக்கப்பட்டனர் என்பதை விட அவர்களாகவே அழிந்து விட்டனர் என்று கூட சொல்லலாம்.
ReplyDeleteநிகழ்வுகள் நிகழ்கின்றன காலங்கள் மறைகின்றன கறை படிந்தவை வரலாறு ஆகின்றது,இப்படித்தான் சுற்றுகிறது உலகம்.
இக்காட்சியின் தொகுப்பில் நானும் ஐந்து மாதங்களுக்கு முன்னே பதிவிட்டேன் பிறகு அப்பதிவை நீக்கிவிட்டேன்,காரணம் உருவம் இல்லா ஓவியத்திற்கு நாம் வர்ணம் எப்படி அடிப்பது என்று கேட்பது போல இருக்கு இப்பதிவு.
புலிகள் இஸ்லாமியினரையும் இணைத்து இப்போராட்டத்தில் கலந்திருந்தால் நிச்சயமாக தனி நாடு கிடைக்கப் பெற்றிருக்கும்.
ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)
படித்ததில் பிடித்தது
ரசித்த வரிகள்.சுருக்கமா சுரீர்னு இருக்கு.
ReplyDeleteஇதுதான் வாழ்க்கையா
ReplyDeleteஇல்லையேல் இயற்கையா
வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteசகோ.அய்யூப்,
அருமையான் வரிகள்
அழகான வடிவம்
ஆழமான கருத்துக்கள்
தொடரட்டும் கவிதை மழை!
//தினேஷ்குமார் said...
ReplyDeleteஅருமையான வரிகள் சகோ அனைத்தும் அருகி பருகி நிறைந்தன என்னுள்ளிலும் ....//
ஒரு கவிஞரின் நாவிலிருந்து இவ்வார்த்தைய கேட்ப்பது மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது சகோ.
நன்றி.
//முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
சகோ.அய்யூப்...
சுருக்கமான சுரீர் வார்த்தைகள்.
விரிவான விளாசல் கருத்துக்கள்.
மீண்டும் ஓர் அருமையான ஆக்கம் சகோ.
மிக்க நன்றி.//
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆசிக்.
உங்களின் கருத்திற்கு நன்றி சகோ.
நீங்கள் பெரிய பதிவர் பதிவுலகில் உங்களுக்கெனெ தனி கூட்டமே இருக்கு நீங்கள் வந்து பாராட்டுகிறிர்கள் என்பதினை பார்க்கும் போது மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது.
//nidurali said...//
ReplyDeleteபடித்ததில் பிடித்தது.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி சகோ.
இந்த கருத்தை நான் கருப்பன் தளத்தில் இட்டிருந்தேன் அங்கு படித்துவிட்டு இங்கு பதில் சொல்வதை பார்க்கும்போது உங்கள் வழி தனி வழியாக தெறிகின்றது.
நன்றி.
//Lakshmi said...
ReplyDeleteரசித்த வரிகள்.சுருக்கமா சுரீர்னு இருக்கு.//
வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி அம்மா.
உங்களின் ப்ளாக்கிற்கு வர நேரம் கிடைக்கவில்லை வருகிறேன்
//மு.ஜபருல்லாஹ் said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
சகோ.அய்யூப்,
அருமையான் வரிகள்
அழகான வடிவம்
ஆழமான கருத்துக்கள்
தொடரட்டும் கவிதை மழை!//
வ அலைக்கும் வஸ்ஸலாம் அண்ணே.
எனக்கு இது கவிதை மாதிரி தெரியவில்லை எதோ ஒரு
உரைநடை மாதிரி தெரிகின்றது.
வருகைக்கு நன்றி சகோ.
//வசீகர வாழ்க்கையில்
ReplyDeleteருசிகரமாய் தெரிவது மரணமே.//
உண்மை........உண்மை.........உண்மை...........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
ReplyDeleteஅருமையான அர்த்தமுள்ள வரிகள் சகோ.
யார் கொலையாளி தொடர் என்னாச்சு சகோ.
வர வரக் கவிதை எழுதிக் கலக்குறீங்க அந்நியன்.
ReplyDeleteமுன்னேறிட்டே வாறீங்க. இடைக்கிடை வேறு நகைச்சுவை அல்லது வித்தியாசமான கவிதையாகவும் எழுதுங்க.
//இலை உதிர்ந்து கிளை ஒடிந்து
ReplyDeleteகருகி போன மரம்கூட தளிர்கின்றது
நிலை குழைந்து நில்லாமல்
கலை மகள் காவியமாய்
நிற்பாய் என நான் நம்புகிறேன்.//
அழகான கற்பனை, நன்றாக இருக்கு. எழுத்தை கவனியுங்க, கவிதையில் முடிந்தவரை எழுத்துப் பிழை இல்லாமல் இருந்தால்தால் படிக்க இனிக்கும்.
நிலை குழைந்து... அல்ல குலைந்து.
நருமணம் அல்ல.... நறுமணம். ஏதோ எனக்குத் தெரிந்தது. எனக்கும் இந்த ள, ழ வுக்கும் எப்பவுமே கண்டத்தில பகை:)))).
//ஆமினா said...
ReplyDelete//வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.//
உண்மை........உண்மை.........உண்மை..........
அதை ஒரு தடவை சொன்னால் பத்தாதக்கும்.
வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.
//ஆயிஷா அபுல். said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அருமையான அர்த்தமுள்ள வரிகள் சகோ.
யார் கொலையாளி தொடர் என்னாச்சு சகோ.//
வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
யார் கொலையாளி தொடரா..அ.அ.அ.வந்து ..வந்து இந்தா..நோன்பு வந்திருச்சா அதுனாலே டயம் இல்லை சகோ.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
//athira said...
ReplyDeleteவர வரக் கவிதை எழுதிக் கலக்குறீங்க அந்நியன்.
முன்னேறிட்டே வாறீங்க. இடைக்கிடை வேறு நகைச்சுவை அல்லது வித்தியாசமான கவிதையாகவும் எழுதுங்க.//
கவிதையை எழுதி தண்ணீரிலேதான் கலக்கனும் சகோ.
கண்டிப்பா அடுத்த பதிவு நகைச்சுவைதான் நன்றி.
//athira said...
ReplyDeleteஅழகான கற்பனை, நன்றாக இருக்கு. எழுத்தை கவனியுங்க, கவிதையில் முடிந்தவரை எழுத்துப் பிழை இல்லாமல் இருந்தால்தால் படிக்க இனிக்கும்.
நிலை குழைந்து... அல்ல குலைந்து.
நருமணம் அல்ல.... நறுமணம். ஏதோ எனக்குத் தெரிந்தது. எனக்கும் இந்த ள, ழ வுக்கும் எப்பவுமே கண்டத்தில பகை:)))).//
பயபுள்ளே தமிழ் வாத்தியார் நம்மளை ஏமாற்றிவிட்டது சகோ.
சுட்டி காண்பித்ததற்கு நன்றி இதை அச்சு பிழை என்று சொல்ல முடியாது திறுத்தி கொள்கிறேன்.
எனக்கும் அதுலேதான் கண்டம் இந்த ழ,ழா,ல,லா, ள,ளா,இதுலாம் தேவையா ?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
ReplyDelete//யார் கொலையாளி தொடரா..அ.அ.அ.வந்து ..வந்து இந்தா..நோன்பு வந்திருச்சா அதுனாலே டயம் இல்லை சகோ.//
அ.அ.அ.வந்து ..வந்து இந்தா..நோன்பு வந்திருச்சா
சகோ நோன்புலதானே முதல் தொடர் பதிவு போட்டீங்க
நோன்பு கழித்து எழுதிடுங்க சகோ.படிக்க ஆவல்
//ஆயிஷா அபுல். said..
ReplyDeleteநோன்பு கழித்து எழுதிடுங்க சகோ.படிக்க ஆவல்.
ஓK..சகோ.
வருகைக்கும் எனது எழுத்தினையும் ரசித்தும்(?)அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கும் ஒரே ஒரு சகோ நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன்
கண்டிப்பாக எழுதுகிறேன்.
Good Poem
ReplyDeletevoted
//Raazi said...
ReplyDeleteGood Poem
voted//
சந்தோசமாக இருக்கின்றது சகோ.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
கவிதை அழகு
ReplyDeleteதமிழ்மனம் 7
வரிகள் அருமை மாப்ள!7 வது ஓட்டு போட்டாச்சி!
ReplyDelete//Riyas said...
ReplyDeleteகவிதை அழகு
தமிழ்மனம் 7//
வருகைக்கும் ஓட்டிற்கும் நன்றி சகோ.
விக்கியுலகம் said...
ReplyDeleteவரிகள் அருமை மாப்ள!7 வது ஓட்டு போட்டாச்சி!
வருகைக்கும் ஓட்டிற்கும் நன்றி சகோ.
தகவலுக்கு நன்றி நண்பா... சகோ ஹைதர் அலி பதிவின் லிங்கையும் எனது பதிவில் கொடுத்துவிட்டேன்
ReplyDeletehttp://maayaulagam-4u.blogspot.com/2011/08/blog-post_3522.html
உயிரில்லா உறவுகளும்
ReplyDeleteநடைபிணமாய் அழைகின்றது
பெயரில்லா மனிதர்களும்
படைகொண்டு வாழ்கின்றது.
இதுதான் வாழ்க்கையா
இல்லையேல் இயற்கையா
வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.//
படபடப்புடன் வாழும் இந்த நரக வாழ்க்கையை நினைக்கும் பொழுது
உண்மையில் ருசிகரமாய் தெரிவது...மரணம் சரியானதே நண்பா... கவிதை கலக்கல்
//மாய உலகம் said...
ReplyDeleteபடபடப்புடன் வாழும் இந்த நரக வாழ்க்கையை நினைக்கும் பொழுது
உண்மையில் ருசிகரமாய் தெரிவது...மரணம் சரியானதே நண்பா... கவிதை கலக்கல்//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.
வலிகள் சுடுகின்றன
ReplyDeleteதமிழ் மனத்தில் வோட்டு போட்டாச்சு..
//Jaleela Kamal said...
ReplyDeleteவலிகள் சுடுகின்றன
தமிழ் மனத்தில் வோட்டு போட்டாச்சு..//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி and ஓட்டிற்கும் நன்றி சகோ.
எளியவர்களுக்கு இரங்கும் நல்ல மனதையும், அவர்களுக்காக உண்மையை காட்டும் கவிதை வடிக்கவும் உங்களுக்கு இறைவன் அருளியிருக்கிறான். நல்ல சிந்தனையாக்கம்.
ReplyDelete//பாரத்... பாரதி... said...//
ReplyDelete............................
...........................
............................
வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.